
தொடர்ந்து ஒடவேண்டியிருக்கும்
நேரங்களிலும் கூட
வேகமாக ஓடியும்
நிலையங்கள் காண்கையில்
நிதானித்து நின்று போகும்
புகை வண்டியினைப் போல்
உன் நினைவுகள் நிறுத்துகையில்
உருக்கும் வெயிலிலும்
கைக்குட்டையில் வியர்வையினை
மடித்து வைத்துக் கொண்டு
புன்னகைத்துக் கடக்கிறேன்
உன் நினைவுகளை அல்ல …
Like this:
Like Loading...
Related