Tags

 

புன்னகைகள் மலர வேண்டும்

வெகு இயல்பாய்

பறவைகள் பாடித் திரியும்

வழியின்போக்கன் பார்வை திருடும்

பெயர் தெரியாத

ஒரு பூவைப் போல …

செடி போலத் தோன்றினாலும்

பால் ஊற்றி வேண்டினாலும்

என்றும் பூப்பதில்லை

தொட்டியில் புதைக்கப்பட்ட

குரோட்டன் செடிகள் ..