Tags
சில நேரங்களில்
நேர்ந்து விடுகின்றன
இவைகள்
நாமறியாமல் இல்லை
விளைவறியாமல்
கைதவறி கண்ணாடிக் குமிழ்கள்
உடைகின்றன
துடிக்கின்ற மீன்களுக்கு
தூண்டில்கள் இல்லை
புரண்டெழும் போது
புதைகின்றன சில எறும்புகள்
இறுதிக் கூட்டத்தின் ஓலம்
எட்டுவதில்லை நம்மை
வாசனை பிறக்கின்ற வேளைகளில்
மலர்களில் சில மரிக்கின்றன
இறகின் மேன்மை
வியக்கப்பட
கிழிக்கப்படுகின்றன வண்ணத்துப்பூச்சிகள்
தெரிந்தா செய்தேன்
இதெற்கென்ன செய்ய
எப்படியும் கைவசமிருக்கின்றன
நம்மிடம் சில காரணங்கள்
கவனித்துக் கொண்டேயிருக்கிறது
காரணங்களை நம்மேல் பிரயோகப்படுத்த
காலம் நம்மை .
எல்லோரும் கை விரித்து விட்ட ஒரு நிலை என்றாவது வரும் போது,காலத்தின் மேல் நாம் போட்ட பலிகள் எல்லாம் எதைச்சையாக நினைவுக்கு வரும்.இப்போதும் காரணங்கள் இருக்கும் மற்றவர்கள் கைகளில்.
LikeLike
தக்கன ?????
LikeLike
தக்கனன்னா தகுதி உள்ளவைகள்ன்னு அர்த்தம். தகுதி உள்ளவைகள் தப்பி பிழைக்கும் னு நம்ம டார்வின் தாத்தா(யாதும் ஊரே யாவரும் கேளீர் :-)) டார்வின் சொல்லிருக்காருல்ல .. இங்கிலீஸ்ல “SURVAIVAL OF THE FITTEST” ன்னானாம்
LikeLike