இருள் மேவிய
நேற்றைய நீள் இரவின்
கடிகாரம் காண முடியா
ஒரு தருணத்தில்
திறந்து வைத்த சாரளத்தின் வழி
தப்பியோடிக் கொண்டிருந்தன
என் கவிதைகள்
முதல் முடிவற்ற
தொடர்சியில்லா கனவின்
ஏதோ ஒரு பிரதேசத்தில்
கண்டு கொண்ட
குறிப்புகளற்ற காட்சியொன்றை
கவிதையாக்கச் சொல்லிவிட்டு
ஓடிப் போனதென் உறக்கம்
பரிச்சயமற்ற இருட்டைத்
துளாவித் துளாவி பார்த்துவிட்டு
மேலெங்கும் சிதறி நனைக்க நீரருந்தி
புறங்கையில் வியர்வை துடைத்து
ஓடிப்போன உறக்கத்தினை
மீட்டு வர ஆயத்தமாகையில் ..
தப்பியோடும் கவிதைகளின் வரிசையில்
கடைசியில் நின்று கொண்டது
பிறகு எழுதிக் கொள்ளலாம்
என நினைத்து மறந்து போன
என் சமீபத்திய கவிதையும் …
– நேற்றைய இரவில் ஜனிக்க மறந்து போன என் கவிதைக்கு
🙂 நன்று..
LikeLike
🙂
LikeLike
enaku rompa pidichurukku.enaku purinchuduthe??? puriyatha ma3 kavithai ezhutha paaru da
LikeLike
முயற்சி பண்ரேனுங்கக்கா 🙂
LikeLike
திறந்து வைத்த சாளரத்தின் வழி தப்பியோடிய கவிதையை, இங்கு பிடித்து வந்து விட்டதாக தெரிகிறது:)
LikeLike
/*தப்பியோடும் கவிதைகளின் வரிசையில்
கடைசியில் நின்று கொண்டது
பிறகு எழுதிக் கொள்ளலாம்
என நினைத்து மறந்து போன
என் சமீபத்திய கவிதையும் …*/
awesome lines..:)
LikeLike
ஆனா எவ்ளோ யோசிச்சும் அந்தக் கவிதை மட்டும் எனக்கு ஞாபகம் வரமாட்டேங்குது .
LikeLike
கவிதையின் காரணிய தேடி போயிருக்குமோ 😉
மறந்து போன கவிதைக்கும் கவிதையா…. செம சீனி… 🙂
LikeLike
மறந்து போன கவிதை திரும்ப வந்து கேட்காது .. அந்த தைரியம் தான் 🙂
LikeLike
– நேற்றைய இரவில் ஜனிக்க மறந்து போன என் கவிதைக்கு…….
ஜனிக்க மறந்து போன கவிதைக்கு
ஜனனமான கவி குழந்தையா இந்த கவிதை….
LikeLike