Tags
ஒரு ஆறு மாசம் ஆகுதுங்க ..இந்த ப்ளோக் எல்லாம் பார்க்க ஆரம்பிச்சு . எங்கயோ ஆரம்பிச்சு , அங்க இங்க link பிடிச்சு ஒரு ஏழெட்டு ப்ளோக் தவறாம பாக்கறது வழக்கம் ஆய்டுச்சு . (பேரெல்லாம் சொல்லனும்னு ஆசை தான் .. சொறிஞ்சு விடுறேன்னு நம்மளையும் சொல்லிட்டாங்கைன்னா ). எல்லாரையும் பார்த்து எனக்கும் ஆசை வந்து இந்த பட்டாம்பூச்சி விற்பவனையும் ஆரம்பிச்சாச்சு .தினமும் வரவேண்டியது . எதையாவது update பண்ண வேண்டியது. பத்து நிமிசத்துக்கு ஒருக்கா தொறந்து பார்த்து யாராவது பின்னூட்டம் போட்டு இருக்காங்களான்னு பாக்க வேண்டியது .(கள்ளிக் காட்டு இதிகாசமா எழுதிட்ட)
அப்டியே ஒரு மாசம் ஆகிப் போச்சுங்க ..சிங்கம் செத்துப் போனாலும் கெத்து போகுமா .. மனம் தளரவே இல்லியே .. இருந்தாலும் போன திங்க கிழமை (நெஜமாவா ??) ரொம்ப பீலிங்க்ஸ் ஆகிப் போச்சு . அழுவாச்சி கூட கொஞ்சூண்டு .
அப்போ தான் “இளம் பதிவர்களே ன்னு ” நம்ம கோவி. கண்ணன் ஒரு பதிவு போட்டார் . நெறையா ஐடியா கூட குடுத்திருந்தாரு (என்கிட்டயே ஆரம்பிக்கறியா).
அதுல ஒரு மாட்டர் சூப்பரா இருந்தது . புது பதிவர்கள்லாம் ஒன்னா சேர்ந்து ஒருத்தர ஒருத்தர் தட்டி குடுத்து பின்னூட்டம் போட்டு ஊக்குவிச்சு கோ ஆப்பரேட் பண்ணி …. (ஸ்ஸ்ஸப்பா)
சரி அண்ணன் கோவி .கண்ணன் (கவித !! கவித !) மேற்பார்வைல ஒரு பு.ப.ச.மு.க ஆரம்பிக்கலாமான்னு யோசிச்சிட்டு இருக்கும் பொது வடிவேலு அரசியல்ல நிக்கறேன்னு அறிவிப்பு விட்டாரு .நம்ம அறிவிப்பையும் இதோட சேர்த்துட்டாங்கைன்னா (அவ்வ்வ்வ்வ்வ் ) ..
சரி பின்னூட்டமாவது போடலாம்னு நோட்டு புத்தகத்தை எல்லாம் எடுத்துட்டு “பின்னூட்டம் போடுவது எப்படின்னு ” தலைப்பெல்லாம் எழுதி சில பல ப்ளோக்ஸ் பின்னூட்டத்த ஓபன் பண்ணி நோட்ஸ் எடுக்க ஆரம்பிச்சேன் . ஒரு reference கு தாங்க .. அப்டியே பழகிப்போச்சு .
எங்க உட்டேன் . ஆ நோட்ஸ் எடுத்தனா .. கொஞ்ச நேரத்துல என் பேனா பயத்துல கலர் இல்லாம இங்க் உடுது (ச்சு சுச்சூ ???) யம்மாடி பின்னூட்டம் போடறதுல இம்பூட்டுப் பிரச்சன வரும்னு அப்போ தான் லைட்ட பல்ப் எரிஞ்சது .(வேணாம் சின்னப் பைய்யன் நீ .. அரசியல் பேசாத )
சரி இந்த திட்டமும் ஊத்திகிச்சா …
பின்னூட்டங்களை படிக்கும் போது தாங்க அந்த மனச உலுக்குற கேள்விகள் எல்லாம் தோணுச்சு (சொல்லவே இல்ல!) யாருகிட்டயும் எதுக்கு நேரா கேட்டுகிட்டு ..எதுக்கு ரிஸ்க் .. நம்மாலே பதிவா போட்டிடலாம்னு கெளம்பியாச்சு.யாருக்காவது பாவம் பதில் சொல்லலாம்ன்னு தோணுச்சுன்னா சொல்லட்டும் .. இல்லன்ன வழக்கம் போல ” நான் ரொம்ப நல்லலலலவன்னு ” தொடச்சுக்க வேண்டியது தான் .
இது தாங்க அந்த கேள்விங்க .
1.கும்மி அடித்தல் சிறுகுறிப்பு வரைக
2.ஜல்லியடித்தல் என்றால் என்ன
3.கொண்டை வரையறு
4.டிஸ்கி ன்னா இன்னாது ??
5.ஷகீலாவுக்கும் பதிவுலகிற்கும் என்ன தொடர்பு ?(பேரைப் போட்டாலே ஹிட்ஸ் அதிருதுல்ல)
6.பாவனாவுக்கு ஏதாவது சங்கம் இருக்கா ?
7.அடிவாங்காம பின்னூட்டம் போடறது எப்படி ?
சிறப்பு கேள்வி :
***** காயத்ரியும் G3 யும் ஒண்ணா வேற வேறையா ??(ரூம் போட்டு எல்லாம் யோசிக்கலாப்பா )
டிஸ்கி : (எல்லாரும் பதிவு முடியும்போது தான் இத போட்டிருந்தாங்க )
இந்த கேள்விங்களுக்கு எல்லாம் பத்தி சொல்லி புரியவைக்கறவங்க “வலையுலக வாத்தியார் ” என அன்போடு அழைக்கப் படுவார் .
பிளாக் முகப்பு சூப்பர்
LikeLike
ஹய்யா எனக்கு பின்னூட்டம் வந்திடுச்சு . 🙂
// பிளாக் முகப்பு சூப்பர்///
அப்போ நீங்க படிக்க வரல 😉 தப்பா எடுத்துக்காதீங்க முரளி . வருகைக்கு நன்றி 🙂
LikeLike
வணக்கம் பட்டாம்பூச்சி.
1)கும்மி அடித்தல் என்பது பின்னூட்டங்கள் மூலமாக ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து கொள்வது, குறிப்பிட்ட அந்த பதிவை பற்றி கிண்டல் செய்வது, சம்பந்தமேயில்லாமல் ஏதேனும் பின்னோட்டங்கள் கொடுத்து பின்னூட்ட எண்ணிக்கையை கடுமையாக உயர்த்துதல். கடுமையாக என்றால் சில சமயம் இந்த மொக்கை பின்னூட்டங்கள் நூறு, இருநூறை தாண்டும். மீ த பர்ஸ்ட் என்பது போல மீ த அம்பது, எழுபது, மீ த நூறு என்றெல்லாம் கூட பின்னூட்ட மிடுவார்கள். இதற்கு தோதுவாக அந்தந்த பதிவர்கள் பின்னூட்ட மட்டுறுத்தலை எடுத்துவிட்டால் கும்மி அடிப்பதற்கு வசதியாக இருக்கும்.
2)ஜல்லியடித்தல் என்பது சுஜாதாவிடமிருந்து தொற்றியது போல் தெரிகிறது. உண்மையில்லாத விஷயங்களை உண்மை போலவே சித்தரிப்பதை ஜல்லியடித்தல் என சொல்லலாம்.
3)கொண்டை , கொண்டை தெரியுதா என்பது ஒருவரது நிஜ அடையாளம் தெரிகிறது என்பதை குறிக்கும். இது வடிவேலு ஒரு படத்தில் பல வித மாறுவேடம் போட்டாலும் அவரது தலைக்கு மேலே நீட்டிக்கொண்டு இருக்கும் கொண்டையை மறைக்க மறந்திருப்பார். அதை வைத்து ஒவ்வொரு முறையும் அவரை அடையாளம் கண்டு கொள்பவர்.
4)டிஸ்கி என்றால் பதிவின் முடிவிலோ அல்லது ஆரம்பத்திலோ இது முழுக்க கற்பனையே என்றும் யாரையும் குறிப்பது அல்ல. என்பது போன்ற Disclaimer வைப்பது.
5)ஷகிலா மட்டுமல்ல பாலியல் சம்பந்தமாக எந்த பதிவு போட்டாலும் ஹிட்ஸ் எகிறத்தான் செய்யும்.
6)பாவனா விற்கு மட்டுமல்ல வருத்தப் படாத வாலிபர் சங்கம் போன்று பல சங்கங்கள் உள்ளன.
7)ரொம்ப கேள்வி கேட்டு நச்சரிக்காமல் பொதுவாக பதிவு நன்றாக இருப்பதாக சொல்லிவிட்டால் பிரச்சினை இல்லை.
சிறப்பு கேள்விக்கு உத்தேசமான பதில். இரண்டும் ஒரே நபரை குறிப்பது தான். காய(G)aya “த்ரீ” என்பதை G3 என்று சொல்லலாம்.
LikeLike
நன்றி பிரேம்ஜி இவ்ளோ பொறுமையா பதில் சொன்னதுக்கு .(எல்லா வாத்தியாரும் இப்டியே இருந்தா எப்டி இருக்கும் …)
டிஸ்கி னா disclaimer ஆ ….ம்ம்ம் .
நான் முன்னமே சொல்லிருந்தா மாதிரி நீங்க தான் இனி வலையுலக வாத்தியார் நண்பரே 🙂 🙂
LikeLike
நல்லா கேக்குறாங்கய்யா கேள்விகளை.. இம்புட்டு கேள்வி கேட்டாலே நீங்க பதிவுகத்துக்கு பழைய பதிவர் தான்…
காயத்ரி வேற ஜி3 வேற…
LikeLike
நண்பரே என்னமா கேள்வி கேட்டுருக்கீங்க
இப்படித்தான் நாலு கேள்வி ஸாரி ஏழு கேள்வி நாக்க புடுங்கிக்கற மாதிரி கேக்கணும்னு நானும் ரொம்ப நாளா நினைச்சுகிட்டு இருந்தேன்…
உங்கள மாதிரிதான் நானும்…இதெல்லாம் புரியாம அவதி படறேன்
LikeLike
//4)டிஸ்கி என்றால் பதிவின் முடிவிலோ அல்லது ஆரம்பத்திலோ இது முழுக்க கற்பனையே என்றும் யாரையும் குறிப்பது அல்ல. என்பது போன்ற Disclaimer வைப்பது.//
டிஸ்கி னா disclaimer ஆ..
மற்றும் என் எல்லா கேள்விகளுக்கும் இப்போ விடை கிடைத்துவிட்டது..
யுரேக்கா.. யுரேக்கா..
LikeLike
நன்றி தமிழ் பிரியன் 🙂 பதிவுலகத்துக்கெல்லாம் நான் பழசு தான் .ரொம்ப நாளா வேடிக்கை பார்த்துட்டு இருந்தேன் . இப்போ தான் வெப்சைட் ஆரம்பிச்சேன்
LikeLike
நன்றி அதிஷா 🙂
வருக நண்பரே …
கொஞ்சம் கொஞ்சமா எல்லாம் புரியும் போது நாலு பேரு நம்மளை பார்த்து ஏழு கேள்வி நாக்கு மூக்கு எல்லாத்தையும் புடிங்கிகறாமாதிரி கேக்கணும் னு நெனைக்க ஆரம்பிசிடுவாங்களா
LikeLike
வருக சரவணக் குமார் 🙂 எதோ நம்மாளால முடிஞ்சது ..
அது சரி bath room ல குளிச்சிகிட்டே இதப் படிக்கலையே நீங்க 😉
LikeLike
me the eleventh.. ச்சும்மா.. கும்மிக்கு 🙂
LikeLike
இதானாடா சாமி கும்மி .. நல்ல புரியுது இப்போ 😉
LikeLike
என்னை போல பாதிக்கப்பட்ட ஒரு ஜீவனா??? நாமெல்லாம் சேர்ந்து ஒரு சங்கம் ஆரம்பிக்கணுங்க….
LikeLike
அப்போ ஆரம்பிச்சிடலாம்கரீங்களா ??? சரிங்க பேரெல்லாம் நீங்களே முடிவு பண்ணிக்கோங்க .. ஆனா எனக்கு ஒரு சீட்டும் தொகுதியும் மட்டும் கொடுத்திருங்க 😉
இல்லன்னா உங்களை எதிர்த்து எந்த தொகுதில வேணும்னாலும் இந்த ஜனநாயக நாட்ல நான் நிப்பேன் . இது கைப்புள்ள மேல சத்தியம் 😉
LikeLike
அடடா… ரொம்ப சமீபத்துல தான் Bloggingக்குள்ள நுழஞ்சிருக்கேன், இப்பிடிக் கொஞ்ச அற்புதமான(அது சரி!!!) வார்த்தைகளப் பார்த்து, “எங்க நமக்குத்தான் தமிழ் தெரியாம போயிருச்சோ” னு ரொம்பவே வருத்தப்பட்டேன், பரவாயில்ல, “எல்லாரும் நம்மள மாதிரித் தான் இருந்திருக்கிறாங்க” னு இதப்பார்த்த பிறகு தான் புரிஞ்சுது!!(என்னா அல்ப சந்தோஷம்!! 🙂 )
நெஜமாவே இது ரொம்ப useful!!!
உங்க அனுமதி கெடச்சா இத என்னோட ஃப்ரெண்ஸ்ங்க கூட share பண்ணிப்பேன்!!!
ரொம்ப டாங்ஸுங்கண்ணா!!!!
-Mathu 🙂
P.S
இந்த பின்னூட்டம் ரொம்ப லேட்டோ??
ஹி ஹி ஹி!!!!
LikeLike
…அப்புறம், ஒரு முக்கியமான விஷயத்த மறந்துட்டேன், உங்க சங்கத்துல என்னயும் கொஞ்சம் சேர்த்துகோங்க!!
😀
LikeLike
1)வாங்க மது .. கொஞ்சம் லேட்டா ?? ஹி ஹி 🙂
2)என்ன permission எல்லாம் கேட்டுட்டு .. தாராளமா share பண்ணிக்கோங்க ..
3)சங்கத்துல இப்போதைக்கு நானும் நீங்களும் மட்டும் தான் .
தலைவர் post நீங்களே வச்சுக்கலாம் 🙂
4)அது சரி .. அண்ணாவா ?? உங்க வயசு எவ்ளோங்க ?? (எங்க வயச சொல்ல மாட்டோம்ல ) 😉
LikeLike
அப்டியே உங்க வலைதள முகவரி குடுத்தீங்கன்னா , சங்கத்துல admission போட்டிடலாம் .
LikeLike
வலைத் தளம்னு blogஅ சொல்லலாமா???
ஹி ஹி ஹி!!!
அப்பிடின்னா…இப்போதைக்கு இது தானுங்கண்ணா…:D
http://mathukrishna.blogspot.com/
நாமளும் எழுதணும்னு ஆர்வக்கோளறாகி எழுதியிருக்கேன், படிச்சிட்டுப் பின்னூட்டம் கொடுத்தீங்கன்னா ரொம்ப ரொம்ப சந்தோசப்படுவேன்!!!
🙂
-Mathu
P.S
அண்ணா, நீங்க சூப்பராக் கலக்குறீங்க!!!
🙂
LikeLike
நன்றி மது 🙂
கண்டிப்பா பாக்கறேன் 🙂
LikeLike
அண்ணாங்கிறது ஒரு மரியாதையில தான்!
எங்க நாட்டுல எல்லாரயும் “அண்ணா”ன்னு சொல்ல வச்சு training குடுத்திருக்கிறாங்க!
உங்களுக்குப் பிடிக்கலன்னா விட்டுறலாம்.
🙂
அப்புறம், எனக்கு இப்போ 20 தான்!!!(சத்தியமா!) 🙂
நீங்க எப்பிடி??
LikeLike
தங்கச்சி தாராளமா நீங்க என்ன அண்ணன்னே கூப்பிடலாம் .. 🙂
அப்டி எந்த நல்ல ஊருப்பா நீ ???
LikeLike
அடடா…தம்பியா???
:((
நான் தங்கச்சிப்பா!!!
ஹிஹிஹி!!
“தமிழீழம்” கேள்விப்பட்டிருக்கிறீங்களா??
நம்ம ஊரு(நாடு!)அது தாங்க!
🙂
LikeLike
மது கிருஷ்ணா சேர்த்து படிச்சு தம்பின்னு நெனச்சுட்டேன் .. 😦
super bulp of the day இது தாங்க ..
LikeLike
ஹிஹிஹி!
வாழ்க்கைன்னா இப்பிடித்தாங்க… எது நாம நெனச்ச மாதிரி இருக்குது சொல்லுங்க??!!
:))
LikeLike
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் :-))
LikeLike