Tags

ஒரு ஆறு மாசம் ஆகுதுங்க ..இந்த ப்ளோக் எல்லாம் பார்க்க ஆரம்பிச்சு . எங்கயோ  ஆரம்பிச்சு , அங்க இங்க link பிடிச்சு ஒரு ஏழெட்டு ப்ளோக் தவறாம பாக்கறது வழக்கம் ஆய்டுச்சு . (பேரெல்லாம் சொல்லனும்னு ஆசை தான் .. சொறிஞ்சு விடுறேன்னு நம்மளையும் சொல்லிட்டாங்கைன்னா ). எல்லாரையும் பார்த்து எனக்கும் ஆசை வந்து இந்த பட்டாம்பூச்சி விற்பவனையும் ஆரம்பிச்சாச்சு .தினமும் வரவேண்டியது . எதையாவது update பண்ண வேண்டியது. பத்து நிமிசத்துக்கு ஒருக்கா தொறந்து பார்த்து யாராவது பின்னூட்டம் போட்டு இருக்காங்களான்னு பாக்க வேண்டியது .(கள்ளிக் காட்டு இதிகாசமா எழுதிட்ட)

 

அப்டியே ஒரு மாசம் ஆகிப் போச்சுங்க ..சிங்கம் செத்துப் போனாலும் கெத்து போகுமா .. மனம் தளரவே இல்லியே .. இருந்தாலும் போன திங்க கிழமை (நெஜமாவா ??) ரொம்ப பீலிங்க்ஸ் ஆகிப் போச்சு . அழுவாச்சி கூட கொஞ்சூண்டு .

 

அப்போ தான் “இளம் பதிவர்களே ன்னு ” நம்ம கோவி. கண்ணன் ஒரு பதிவு போட்டார் . நெறையா ஐடியா கூட குடுத்திருந்தாரு (என்கிட்டயே ஆரம்பிக்கறியா).

 

அதுல ஒரு மாட்டர் சூப்பரா இருந்தது . புது பதிவர்கள்லாம் ஒன்னா சேர்ந்து ஒருத்தர ஒருத்தர் தட்டி குடுத்து பின்னூட்டம் போட்டு ஊக்குவிச்சு கோ ஆப்பரேட் பண்ணி …. (ஸ்ஸ்ஸப்பா)

 

சரி அண்ணன் கோவி .கண்ணன் (கவித !! கவித !) மேற்பார்வைல ஒரு பு.ப.ச.மு.க ஆரம்பிக்கலாமான்னு யோசிச்சிட்டு இருக்கும் பொது வடிவேலு அரசியல்ல நிக்கறேன்னு அறிவிப்பு விட்டாரு .நம்ம அறிவிப்பையும் இதோட சேர்த்துட்டாங்கைன்னா (அவ்வ்வ்வ்வ்வ் ) ..

 

சரி பின்னூட்டமாவது போடலாம்னு நோட்டு புத்தகத்தை எல்லாம் எடுத்துட்டு “பின்னூட்டம் போடுவது  எப்படின்னு  ” தலைப்பெல்லாம் எழுதி சில பல ப்ளோக்ஸ் பின்னூட்டத்த ஓபன் பண்ணி நோட்ஸ் எடுக்க ஆரம்பிச்சேன் . ஒரு reference கு தாங்க .. அப்டியே பழகிப்போச்சு .

 

எங்க உட்டேன் . ஆ நோட்ஸ் எடுத்தனா .. கொஞ்ச நேரத்துல என் பேனா பயத்துல கலர் இல்லாம இங்க் உடுது (ச்சு சுச்சூ ???) யம்மாடி பின்னூட்டம் போடறதுல இம்பூட்டுப் பிரச்சன வரும்னு அப்போ தான் லைட்ட பல்ப் எரிஞ்சது .(வேணாம் சின்னப் பைய்யன்  நீ .. அரசியல் பேசாத )

 

சரி இந்த திட்டமும் ஊத்திகிச்சா …

 

பின்னூட்டங்களை படிக்கும் போது தாங்க அந்த மனச உலுக்குற கேள்விகள் எல்லாம் தோணுச்சு (சொல்லவே இல்ல!) யாருகிட்டயும் எதுக்கு நேரா கேட்டுகிட்டு   ..எதுக்கு ரிஸ்க் .. நம்மாலே பதிவா போட்டிடலாம்னு கெளம்பியாச்சு.யாருக்காவது பாவம் பதில் சொல்லலாம்ன்னு தோணுச்சுன்னா சொல்லட்டும் .. இல்லன்ன வழக்கம் போல ” நான் ரொம்ப நல்லலலலவன்னு ” தொடச்சுக்க வேண்டியது தான் .

 

இது தாங்க அந்த கேள்விங்க .

 

1.கும்மி அடித்தல் சிறுகுறிப்பு வரைக

2.ஜல்லியடித்தல் என்றால் என்ன

3.கொண்டை வரையறு

4.டிஸ்கி ன்னா இன்னாது ??

5.ஷகீலாவுக்கும் பதிவுலகிற்கும் என்ன தொடர்பு ?(பேரைப் போட்டாலே ஹிட்ஸ் அதிருதுல்ல)

6.பாவனாவுக்கு ஏதாவது சங்கம் இருக்கா ?

7.அடிவாங்காம பின்னூட்டம் போடறது எப்படி ?

 

சிறப்பு கேள்வி :

***** காயத்ரியும் G3 யும் ஒண்ணா வேற வேறையா ??(ரூம் போட்டு எல்லாம் யோசிக்கலாப்பா )

டிஸ்கி : (எல்லாரும் பதிவு முடியும்போது தான் இத போட்டிருந்தாங்க )

 

இந்த கேள்விங்களுக்கு எல்லாம் பத்தி சொல்லி புரியவைக்கறவங்க “வலையுலக வாத்தியார் ” என அன்போடு அழைக்கப் படுவார் .