பெருந்தாகங் கொண்ட
வருணனைக் கொவ்வாத
விலங்கொன்று
எச்சில் சொட்டச் சொட்ட
எதிர்ப்பட்டிருக்கலாம் தெருமுனையில்
பேரழகி ஒருத்தி
மேனியிலே படர
இதழ் சூட்டில் வெந்து
இமை திறக்கும் போது
மார்பின் மேல் அமர்ந்திருப்பவளின்
பற்கள் மட்டும் நீண்டிருக்கலாம்
வெகு நேரம் காத்திருந்து
பேருந்தின் ஓய்வு இடைவெளியில்
ஒரு ரூபாய் தேடிச் சலித்து
மீதம் பற்றிய கவலையன்றி
தாளொன்றை வீசியெறிந்து
விரைந்தோடும் கழிப்பறையில்
எதிர்படும் அறைமொத்தமும்
ஆள் உண்டு மூடியிருக்க
கடைசி ஒன்று மட்டும்
கதவின்றிக் காத்திருக்கலாம்
கதவு திறந்து அப்பாவே
விரல் பிடித்துக் கூட்டிச் சென்று
கால்ச் சராய் நீக்கி
‘போ’ என்று சொன்னதாய்
நினைவும் இருக்கலாம்
இருக்கவே செய்கின்றது
சொல்லமுடியா
சுவாரசிய காரணங்கள்
தூக்கத்தில் படுக்கை
நனைந்திருத்தலுக்கு …
வாவ்.. 🙂 nice man.. எங்கெங்கோ கலைந்து போயிருந்த பால்ய நினைவுகளை மீட்டெடுக்கிறது இக்கவிதை.. குழந்தைத்தனம் மாறாத சில்மிஷ வரிகளும், கடைசி வரை இட்டுச்செல்லும் அந்த சுவாரஸ்யமும் அருமை.. ரொம்ப different ஆ இருக்கு இந்த பாடுபொருள்.. ஒவ்வொருவரும் நிச்சயம் கடந்து வந்திருக்கும் பாதை இது.. எனக்கும் என்னன்மோ கனவெல்லாம் ஞாபகம் வருது.. இப்போ சொல்றேன்னு சொன்னா, நீ அடிக்கவே வந்துடுவ.. 😀
LikeLike
எத்தன தடவை அடி வாங்கிருப்போம் நாங்க எல்லாம் …;-)
கனவு கேக்கறதுக்கு யாருக்காவது கஷ்டமா இருக்குமா ?? அதுவும் உன்கிட்ட இருந்து ….
பல கதைகளுக்கும் கவிதைகளுக்கும் கனவுதான் நதிமூலம் . நினைவுக்கு வராத , முடிவு தெரியும் முன்னமே கலைந்து போன கனவு மாதிரி சுவாரசியமான ஒன்னு இருக்கா என்ன ???
LikeLike
அனிச்சை நிகழ்வுகளின் அவசரக் காரணிகள் அருமை.:)
LikeLike
nalla iruku. etho padicha piragu again oru chinna vayasu paruvatha etti partha makizhchi enaku.nice poem seeni. sorry na tamil la than type pannanum irunthen.mudiyala.neram pathala.release iruku.but irunthalum,intha kavithaiya padichathula siru thugalai en mugathil punnagai mazharthadu avlo tensionlaium.thank you seeni 🙂 keep on writing good poems like this.
LikeLike
Scene ?? 🙂
LikeLike
நன்றி கவி 🙂
LikeLike
கலக்கிட்டீங்க!
LikeLike
நன்றி ஞானசேகர் 🙂
LikeLike
Wow Seeni,
too gud..:)
didn expect such a poem, ve never read kinda dis poem also before..
Keep up d gud wrk goin..:)
peter laam illa, nera patrakkurayin kaaranamaaga, thaai mozhiyai viduththu anniya baashshaiyaai irundhu tharpodhu adhyaavasiya baashaiyaai maari vitta aangilaththil eludhugiraen vimarsanangalai..:)
over story la???
its ok, adjust maadi..:)
LikeLike
இதுக்கு நீ இங்கலிஷ் லயே எழுதிருக்கலாம் .. படிச்சு தாவு தீந்திடுச்சு ..
LikeLike