வேலை பிடிக்காத காலையொன்றில்
வீடு ஒதுக்குகையில்
பழைய புத்தகங்களுக்கிடையில்
பார்க்கக் கிடைக்கும் கையெழுத்துகளில்
அங்காடித் தெருவில்
கணவன் பின்னோடிக்கொண்டிருக்கும்
தோழிகள் தந்து போகும்
சில நிமிடப் புன்னகைகளில்
பேருந்து நிலையத் தேநீர் கடைகளில்
நெருப்பு கேட்பது
உடன் படித்த நண்பனாயிருக்கையில்
பள்ளிக் கம்பிக் கதவுகளின் வழி
நம் குழந்தைகள் கைகளாட்டிச்
செல்கையில்
மாதமொருமுறை
கையெழுத்து வேண்டி தரக்குறிப்புகள்
நம்முன் நீட்டபடுகையில்
பேச்சுப் போட்டிக்கென
எதிர் வீட்டுக் குழந்தை
பாரதி பற்றி
எழுதி வாங்கிச்செல்கையில்
அரும்புகிறது
இதழோரப் புன்னகை ஒன்று
சில கடந்தகாலக் குறிப்புகளுடன் …
nice one 🙂
LikeLike