ரொம்ப நாளா பாக்கணும் னு நெனச்ச படம். எனக்கு நேத்து தான் WAL-E படம் பார்க்க chance கெடச்சது.உணர்வுப்பூர்வமான படம் . சுற்றுச்சூழல் , இரும்பு கழிவு (இன்னா ஸ்பைடி இப்டி ஆய்ட்ட ) யாருக்கு வேணும் அதெல்லாம் (அதான !)
ஆரம்ப காட்சில இருந்தே ஒரு கரப்பான் பூச்சியோட (இதை நான் வேண்டுமென்ற உபயோகிக்கவில்லை கணம் கோர்ட்டார் அவர்களே !!!), உலகமே அழிஞ்சாலும் உன் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா ன்னு சொல்ற அளவுல யாருமே இல்லாத ஊர்ல அதோட வேலைய பார்த்திட்டு ,ஜாலியா , தனியா (??!!) சுத்தற நம்ம வால்-ஈ . டான்ஸ் பார்த்து ரெண்டு கைய்யையும் கோர்த்துட்டு பீல் உடறது ஆகட்டும் , அந்த பொண்ண பார்த்துட்டு கண்ணு சொருகி நிக்கறது ஆகட்டும் , அவள இம்ப்ரெஸ் பண்ண அது அடிக்கற லூட்டி ஆகட்டும் ..அடடா அடடா (என் இனமடா நீ !! ;-))
மொத்தமாவே படத்துல ஒரே வசனம் தான் …
ஈவா ??
ஈஈஈ …வா …
ஈஈஈ வாவாவாவா ..
இதையே வேற வேற பீல் ல நம்ம ஹீரோ சொல்றதும் , கடைசில மூன்றாம் பிறை கமல் மாதிரி வால்-ஈ ய தூக்கிட்டு (inspired by காதலில் விழுந்தேன் ???), அவங்களுக்கு ஸ்பேர் பார்ட்ஸ் மாத்தறதும் . வால்-ஈ க்கு மறந்ததை ஞாபகப் படுத்த ஈவா பண்ற முயற்சியும் செம டச்சிங் . படம் பாக்கற எல்லாருமே வால்-ஈ செல்லம் ஒரே ஒரு தடவை மட்டும் ஈவா சொல்லு பாப்போம் .. ஈ .. வா … ஈவா .. ஆ அப்டித்தான் என எல்லாரும் கத்த , நம்ம கதா நாயகி , வால் -ஈ கைய கோர்த்துட்டு , அவ்ளோதான் மறந்துட்டான் பய புள்ளன்னு பீல் பண்ணி திரும்ப , நம்ம ஹீரோ கைய விடாமா பிடிச்சிட்டு , ஈவா ங்கறாரு ..
ஒரு அழகான கவிதை (ஆமாண்டா உனக்கு எல்லாமே அழகான கவிதை தான் !!) பாக்கலைன்னா என்ன வேலை இருந்தாலும் தூக்கி போட்டுட்டு , வேலை இல்லாதவங்க குளிக்கறத விட்டு , பார்க்கலாம் .. பார்க்கலாம் .. பார்க்கலாம் .
இனி காதலில் விழுந்தேன் .. சில மறைக்கப்பட்ட உண்மைகள்
வலையுலகமே விழுந்து விழுந்து கிழித்து டவுசரை காயப்போட்ட பின் நான் சொல்ல என்ன இருக்கு .. இருக்கு சார் .. இது படத்தோட கதை மட்டும் இல்ல (படத்துல எங்கடா கதை இருக்கு ) .. காதலில் விழுந்தேன் படம் ஓடற தியேட்டர் ல நான் எப்டி கேவலமா விழுந்தேன் கற கதை ..
நான் பாட்டுக்கு போன சனிக்கிழமை ஆபீஸ்ல பொட்டி தட்டிட்டு இருந்தேன் . ஹே நாங்க எல்லாம் பெசன்ட் நகர் பீச் போறோம் நீயும் வரியான்னு கூப்ட்டாங்க்ய .. சரின்னு நானும் கஷ்டப்பட்டு வேலையெல்லாம் (??!!) முடிச்சிட்டு , இருமிகிட்டே (ஐயோ பாவம் ) திருவான்மியூர் ஜெயந்தி தியேட்டர் ஷாப் ல பஸ் காக நின்னுட்டு இருந்தேன் . லைட்டா மழை வேற தூரிட்டே இருக்கு. இதே வேற நேரமா இருந்திருந்தா “ மழையே உன் பெயர் மழையா , தருகிறேன் என்னை விலையா” ன்னு சில பல மொக்க கவுஜ எழுதிருப்பேன் . லைட்டா பிவர் வேற அடிக்கறா மாதிரி இருந்ததா (உனக்கு தான் உடம்பு சரி இல்லன்னு தோணினாலே போதுமே !!)ஓரமா நின்னு பஸ் பார்த்துட்டு இருந்தேன் . பஸ் மட்டும் தான்.
அப்போ கால் பண்ணி சொல்றாங்க்ய , எலே மள வர்றா மாதிரி இருக்கு , நாங்க வீட்டுக்கு போறோம் , நீயும் வீட்டுக்கு போயடுவியாம் ன்னு ..பயங்கரமா …….. இருமல் வந்துச்சு (ஏன் வேற ஏதாவது எதிர் பார்த்தீங்களா).. மழை இன்னும் கொஞ்சம் ஆரம்பிச்சதும் எங்கயாவது ஒதுங்கலாம் ன்னு இடம் தேடினேன் .பின்னாடி ஜெயந்தில துரை சிக்ஸ் பேக் எல்லாம் காட்டிட்டு இருந்தாரு .. இது ஆவறதில்லன்னு , அப்டியே நடந்து தியாகராஜா போனா , நான் அப்டியே ஷாக் ஆய்ட்டேன் .. காதலில் விழுந்தேன் வெற்றிகரமா (அப்டித்தான் போட்டிருந்தானுங்க)ஓடிட்டு இருந்தது . சரி மழை நிக்கற வரைக்கும் ஒதுங்கி நிக்கலாம்னு பழக்க தோஷத்துல கவுண்டர் பக்கத்துல போய் நின்னு தொலைச்சுட்டேன் .சார் ஷோ ஆரம்பிக்கப் போகுன்னு உள்ள அனுப்பிட்டாங்க (விதி வலியது)
சரி உள்ள சைட்டாவது அடிச்சிட்டு இருக்கலாம்ன்னு சுத்திலும் பார்த்தா எல்லாம் அரை டிக்கெட்டுங்க .. என் வரிசைல நான் மட்டும் தான் உட்கார்ந்திருக்கேன் . படம் ஆரம்பிக்கற கொஞ்ச நேரம் முன்னாடி , ஒரு குண்டுமணி அவரு தங்கமணியோட ஒரு நாலு வானரங்களை சைஸ் வாரியா தள்ளிட்டு வந்திருந்தார் . ஆந்தம்மாவ அந்தபக்கமும் , அவரு என் பக்கத்துலயும் உட்கார்ந்துட்டு நடுல வானரங்களை உட்கார வச்சிட்டாங்க . படம் போச்சு போச்சு .. போய்டுச்சு என் உயிர் தாங்க .. அப்டி இப்டி தாக்கு பிடிச்சு இடைவேளை வந்திடுச்சு ..
என் தம்பிக்கு கால் பண்ணி என்னடா படம் இப்டி இருக்குன்னு கேட்டா , இனிமே தான் படம் சூப்பரா இருக்கும்னு சொல்லிட்டு நம்பியார் மாதிரி சிரிக்கிறான் . எடுத்தன் பாருங்க ஓட்டம் . பால்கனிய விட்டு வெளிய வந்து , அங்க இருந்தவர்கிட்ட அண்ணே இன்னும் மழை பெய்யுதான்னதுக்கு , ஆமாம்னு தம்மு பொகைலையே சொன்னாரு .. நம்பி நானும் திரும்ப உள்ள வந்து உட்கார்ந்தேன் ..
என் பக்கத்துல ஒரு குட்டி வானரத்த ஒக்கார வச்சிட்டு , குண்டுமணி , தங்கமணி பக்கத்துல போய் உட்கார்ந்திட்டாரு .(no:5???) .. அந்த பொடியன் மடியெல்லாம் நெறைய வச்சிட்டு கொரிச்சிட்டே இருந்தேன் . என்ன வேற மொறச்சு பார்த்துட்டே இருந்தான். நான் சும்மா ஒரு பேச்சுக்கு பார்த்து சிரிச்சேன் .. பாப் கார்ன எடுத்து ஒளிச்சு வச்சுகிட்டான் . அவ்வ்வ்வ்வ்..
படம் ஆரம்பிச்சதும் கொஞ்ச நேரத்துல உனக்கென நான் பாட்டு .. அப்போ அந்த பொடியன் என்கிட்டே கேட்டான் .. அங்கிள் (அங்கிளா ??!!) அந்த ஆன்டி தான் செத்துட்டாங்களே , அப்பறம் எப்டி டான்ஸ் ஆடறாங்கன்னு .. அது தெரியாம தாண்டா எல்லாரும் இங்கே உட்கார்ந்திருக்கோம் . அதெல்லாம் அப்டிதாம்பா .. இங்க ஆடுவாங்கன்னு சொல்லி சமாளிச்சா , அய்யே இந்த அங்கிள்க்கு எதுவுமே தெரியலடீ ன்னு பக்கத்துல இருக்கற குட்டி பொண்ணு கிட்ட சொல்லிட்டு இருக்கான் (ஏண்டா உன் பிகரா அது??)
கடவுள் படைத்த கடைசி கேனைஎன்னு ஒரு சூப்பர் பாட்டுங்க .. நகுல் எங்க எல்லாரையும் பார்த்து பாடறாரு .. மொக்கையா இருக்குன்னு தானடா நாங்களே ரிலீஸ் பண்ணாம இந்த அடர்ந்த காட்டுக்குள்ள வந்து உட்கார்ந்திருக்கோம் . ஏண்டா எங்களை தொரத்தி பாக்கறீங்க ன்னு ஸ்க்ரீன் ளையும் எங்களையும் மாறி மாறி கொல்றாரு நகுல் .
ஒரு கட்டத்துல தியேட்டரே கொந்தளிச்சு உன் தலைல இடி விழ ன்னு கத்த நகுல் தானே சுட்டுட்டு செத்து போயிடறாரு … ஹய்யா …… ஒவ்வொரு கொலையா விழ கடைசில அவங்க மேல ரெண்டு இலை விழ படம் முடிஞ்சிருச்சு ..
முதல் ஆளா நான் தான் எறங்கி ஓடினேன் . வெளிய வந்து பார்த்த மழை பெஞ்சதுக்கான அறிகுறியே காணோம். கேட்டா அது அப்போவே தூரிட்டு முடிஞ்சிடுச்சுன்னு சொல்றானுங்க ..
மொத்தத்தில் காதலில் விழுந்தேன் – நான் காவாயில் விழுந்தேன் .
டிஸ்கி :
வால்-ஈ திரைபடத்தின் பல காட்சிகள் காதலில் விழுந்தேனின் அப்பட்டமான தழுவல் என சன் பிக்சர்ஸ் கொந்தளித்துள்ளது . இது பற்றி விசாரிக்க (தமிழக அரசில் சூழ்ச்சி ??) சிபிஐ இடம் கோரிக்கை வைக்கப் போவதாகவும் தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது .
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ.. அப்பா..எந்த படத்தை எந்த படத்தோட compare பண்றதுன்னு ஒரு வரையறை வேண்டாம்.. இதை நான் மிக வன்மையாகக் கண்டிக்கிறேன்.. உண்மைணைச் சொன்னா, நான் இந்தப் பதிவின் முதல் பாதி மட்டும் தான் படித்தேன்.. பிற்காலத்தில், மிகுந்த மனத்துயருக்கு உள்ளாக நேர்ந்தால், அப்போது வந்து இந்த இரண்டாம் பாகத்தைப் படித்துப் பார்த்து மனதைத் தேற்றிக்கொள்வதாக உத்தேசம்.. 🙂
LikeLike
இன்னாடா இவ்ளோ வேகமா இருக்க .. இப்போ தாண்டா தமிழ் மணத்துல இணைச்சுட்டு வந்தேன் . 😉
LikeLike
சரி.. wall-e..:) எனக்கு எதுவும் சொல்லத் தோணல.. திரும்பத்திரும்ப பாக்கதான் தோணுது.. முந்தாநாள்தான் 4வது தடவையா இந்தப் படத்தைத் திரும்பவும் பார்த்தேன்.. திரும்பத்திரும்ப அதே உணர்வுக் கலவைகள்தான் ஒவ்வொரு முறையும்.. Wall-E ன் அந்த பைனாகுலர் கண்களிள்தான் எத்தனை உணர்ச்சிகள்.. ஒரு குழந்தைக்கே உரிய குறுகுறுப்புடன் ஒவ்வொரு புதிய பொருட்களாக தன் இல்லத்தில்(?) சேர்த்து வைக்கும் போதும், பின், ஈவாவின் வருகைக்குப் பின் ஒவ்வொன்றாக அவற்றையெல்லாம் ஈவாவிற்கு காண்பிக்கும் போதும், ஈவாவைச்சுற்றிச் சுற்றி வரும் போது அந்த கண்களில் கொப்பளிக்கும் குறும்பும் அப்பப்பா.. எப்படி ஒரு creation.. மொத்தத்தில ரெண்டு பக்கம் கூட வசனம் இல்லாம இப்படி ஒரு படம் எடுக்க முடியுமானு பயங்கர ஆச்சரியம்.. முதல் முறை படம் பார்த்த அன்னைக்கு ரொம்ப நேரத்துக்கு மனசுக்குள்ள ஒவ்வொரு காட்சியா திரும்பத்திரும்ப ஓடிகிட்டே இருந்துச்சு. இப்பவும் கூடத்தான்.. திரும்பவும் ஞாபகப்படுத்திட்ட.. இன்னைக்கு ஒரு தடவ பாக்கணும்.. 🙂
LikeLike
நடத்துங்கடா நடத்துங்க 🙂 வாழ்க torrent .. The Little Mermaid கெடைச்சிடுச்சு 🙂
LikeLike
Good.. 🙂 try the second part also.. there is also another movie called ‘Splash’.. 😛
LikeLike
கலக்கல் !!!!!!
நல்ல நகைச்சுவை உணர்வு…!!
LikeLike
ok boss 🙂
LikeLike
நன்றி ரவி 🙂 உங்களுக்கு தான் ஒரு கடிதம் எழுதிக் கொண்டிருந்தேன் . உங்களிடமிருந்தே பின்னூட்டம் .. 😉
LikeLike
பரவால்லயே, WALL-E படம்கூட உனக்கு புடிச்சிருக்கே.. 😛 வளருடா மாமா.. 😀 நானும்தான் அந்தப்படத்தப் பாத்தேன்.. எம்மா.. நம்ம ஜவ்வரசருங்கலாம் தோத்தானுங்க போ.. 😉 ‘சின்னப் புள்ளங்களுக்கு வேணா புடிக்குமாக்கும்’ – அப்டினு ஒருவரி விமர்சனம் எழுதிக்கிட்டு வந்து பாத்தா, இங்க ஒரு சின்னப்புள்ள இப்படி ‘பார்க்கலாம் .. பார்க்கலாம் .. பார்க்கலாம்..’ -னு ஏலம் போடுது.. ஹ்ம்ம்ம்.. என்ன செய்ய,, எல்லாம் காதல் செய்யற வேலை.. 😉
LikeLike
சொன்னாலும் சொல்லாட்டியும் நான் சின்ன புள்ள தாண்டா .. என்ன கொஞ்சமா வளந்துட்டேன் 🙂
LikeLike
lol ne rompa paavam seeni 🙂
LikeLike
cha cha ne mattum illa unna ma3 thaniya padam pakka vantha ellarume rompa paavam.
neyadu thaniya pona na ammavoda ponen 😦 koduma
LikeLike
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் 😦
LikeLike
நல்ல நகைச்சுவை உணர்வு..
சிரித்தேன்…
பட் உங்க FONT கொஞ்சம் பெரிதாக இருந்தால் படிக்க வசதியாக இருக்கும்.. அநியாயத்திற்கு சின்னதா இருக்கு.. கண்ணாடி போட வைத்து விடுவீர்கள் போல இருக்கே?? ( இது ஒரு சின்ன ரிக்வெஸ்ட் தான் … ஏற்பதும், மறுப்பதும் உங்கள் விருப்பமே…
LikeLike
Nee aanaalum wall-E um kaadhalil vizhundhaen aiyum cmpare panradhu romba over, too much..
idhai naan vanmaiyaaga kandikkiraen..
LikeLike
வாங்க அணிமா .. உங்க முதல் பேரை சொல்லிக் கூப்டலாம்னு தான் நெனச்சேன் . (;-))
மாத்திட்டேன் அணிமா .. கொஞ்சம் பெரிய font size போட்டா நான் உபயோகிக்கற எழுத்துரு பார்க்க படு பயங்கரமா இருக்கு .. அதான் ..
கருத்துக்கு நன்றி . தொடர்ந்து வருகை தரவும் .
LikeLike
நானும் வன்மையாக கண்டிக்கறேன் கலை .. ஏய் யாருப்பா அது ….?? 🙂
LikeLike