இரவுகளின் அந்தரங்கங்களில் கவிந்து கிடக்கும்
ரகசியங்களின் நிழல்களை
உற்றுப்பார்த்துக்
கண்சிமிட்டிக் கொண்டிருக்கின்றன
விண்மீன்கள் …
எல்லா வீடுகளின் கதவுகளும் ஜன்னல்களும்
எலிகள் வரக்கூடுமென
புகைபோக்கியின் துளைகளும் கூட
அடைக்கப்பட்ட பின்னும்
கூரைகளைத் துளைத்து
எட்டிப் பார்க்கின்றன அவைகள்
இடுக்குகளின் வழியே கசிந்து கொண்டிருக்கும்
இருளின் வழியே …
பார்க்க யாருமில்லை
என்ற எண்ணம் வேண்டாம்
நுழைய முடியாத இடங்களுக்கு கூட
ரீங்கரித்துக் கொண்டிருக்கும்
வண்டினங்களை விரட்டி
பார்த்துவரச் செய்கின்றன
அவைகள் …
விட்டத்தை வெறித்துப் பார்த்துவிட்டு
இமைகள் மூடி உறங்க முற்படும்
நம் எண்ணங்களைக் கூட
சத்தமில்லாமல்
திருடி விடுகின்றன …
புரண்டு புரண்டு
தூக்கம் கொள்ளாது
ஜன்னல்கள் விடுவித்து
அகாலத்தில்
அவைகளைக் காண்கையில்
தூங்கச் சென்றுவிட்டிருக்கின்றன
சொல்லிக் கொள்ளாமலேயே ..
அருமை!
அனுஜன்யா
LikeLike
🙂
LikeLike