மழையில் நனைவதாய்
நெடுநேர பிரமை …
என் நீண்ட பாதை முழுவதும்
நிலவும் விண்மீன்களும்
கதை பேசியபடி வந்தும்
காற்றின் வெம்மை
மழையின் ஸ்பரிசத்திற்கு
மறுப்பு தெரிவித்தும்
எதிர்படும் வழியில்
தாழ்வாரங்களின் கீழ்
யாரும் ஒதுங்கி நிற்காத போதும்
நிசப்தமான தெருக்களின்
ஜன்னல்களின் வெளியே
நீட்டப்பட்ட பிஞ்சுக் கைகளை
பார்க்க நேராத போதும்
தூறாத மரக்கிளைகள்
வழியெங்கும் உதிர்த்த சருகுகள்
கால்களுக்கு அடியில் சப்தித்த போதும்
மழையில் நனைவதாய்
நெடுநேர பிரமை …
கரிய இருளை ஒருமுறை
ஊடுருவிப் பார்த்துவிட்டு
குடைஎடுத்து விரித்து
அதன் விளிம்புகளில் வழியும்
மழைத் துளிகளை ஸ்பரிசித்துக் கொண்டே
வந்துகொண்டிருக்கிறேன்
உன்னினைவுகளோடு உன் இருப்பிடம் தேடி …
வாசன்,
உங்கள் வலைப்பூ பற்றி வடகரை வேலன் சொல்லித் தெரிந்தது. அழகாக கதை, கவிதைகள் எழுதும் உங்களுக்கு வாழ்த்துக்கள். இந்தக் கவிதை பிடித்தது. உங்கள் காட்சிப் பிழைகள் கதையும் படித்தேன். நல்லா இருக்கு.
//பார்க்காத நேராத போதும்// ‘பார்க்க நேராத போதும்’ என்று வர வேண்டுமோ?
அனுஜன்யா
LikeLike
நன்றி அனுஜன்யா 🙂
உங்களை பலமுறை பாலாவின் பக்கங்களில் பார்த்திருக்கிறேன் .
உயிர்மையிலும் கூட .
வாழ்த்துகளுக்கு நன்றி 🙂
தொடர்ந்து வருகை தரவும் .
பார்க்க நேராத போதும் தான் சரி .
திருத்திவிட்டேன் .
LikeLike
வடகரை வேலனுக்கு சிறப்பு நன்றி ..:-)
LikeLike
🙂
LikeLike
🙂 🙂
LikeLike