Tags

தட தடத்துச் செல்கின்றன

ரயில் வண்டிகள்

நாடு நகரங்கள் தாண்டி

காடுகள்  புகுந்து மீண்டு

சில  மலைகளைத் துளையிட்டு

வெகுதூரம் அழைத்துச் செல்கின்றன நம்மை

நம்முடன் ஏறிக்கொள்ள மறந்து போன

வழியனுப்பிகளின் முகங்களையும்

கடைசிச் சந்திப்புகளின் நினைவுகளையும்

நாம் ஏறிய  ரயில் நிலையங்களின்

நடை மேடைகளிலேயே விட்டுவிட்டு ….

தட தடத்துச் செல்கின்றன

ரயில் வண்டிகள்

தண்டவாளங்களின் மேலும் 

நாம் இறங்கிய  பின்னர்

நம்முள்ளும் ….