Tags

,

 

இருப்பிடம் குறித்த அடையாளங்கள்

ஏதுமற்ற அந்தரத்தில்

தொங்கிக் கொண்டிருக்கிறது

வேர்களின்றி

இலைகள் உதிரும் மரம் …

 

இச்சை போல்

உதிர்ந்து கொள்ளும் இலைகள்

காற்றில்லா பிரபஞ்சத்தில்

நீந்தி வருகின்றன

வாலில்லா பட்டங்களென ..

தூசிகள் படிந்துபோன

அவைகளின்

சருமச் சுருக்கங்களிலும்

ஆயுள் ரேகைகளிலும்

முத்தமிட்டு ஓட்ட முயன்று

தோற்கின்றன

சில மின்னல்கள் …

 

பயணங்களில் முடிவுகளில்

அர்த்தமற்ற வார்த்தைகளுடன்   

உறைந்து படிகின்றன

கூரைகளின் மேல் …

 

எல்லையில்லா

நீண்ட உறக்கத்தின் பின்னே

முதல் கவிதைகள் எழுத

முயற்சிக்கப் படும்

முந்தைய இரவுகளில்

கண் விழிக்கின்றன மெல்ல ..

 

 

இதுவரை சொல்லப் படாமல்

மனதின் அந்தரங்க வெளிகளில்

உலவிக் கொண்டிருக்கும்

உருவங்களற்ற உணர்வுகளுகேற்ப

தகவமைவு கொண்டு

காகிதங்களில் அடங்கி

அர்த்தம் பெற்றுக்

கவிதைக ளென்கின்றன .

 

உதிர்ந்து கொண்டேயிருக்கின்றன

இலைகள் …

 

கூடவே சில பூக்களும்

அதனருகிலேயே

நின்று கொண்டிருக்கும்

காதலைப் பற்றிய மரத்திலிருந்து .

இருப்பிடம் குறித்த அடையாளங்கள்

ஏதுமற்ற அந்தரத்தில்

தொங்கிக் கொண்டிருக்கிறது

வேர்களின்றி

இலைகள் உதிரும் மரம் …

இச்சை போல்

உதிர்ந்து கொள்ளும் இலைகள்

காற்றில்லா பிரபஞ்சத்தில்

நீந்தி வருகின்றன

வாலில்லா பட்டங்களென ..

தூசிகள் படிந்துபோன

அவைகளின்

சருமச் சுருக்கங்களிலும்

ஆயுள் ரேகைகளிலும்

முத்தமிட்டு ஓட்ட முயன்று

தோற்கின்றன

சில மின்னல்கள் …

பயணங்களில் முடிவுகளில்

அர்த்தமற்ற வார்த்தைகளுடன்

உறைந்து படிகின்றன

கூரைகளின் மேல் …

எல்லையில்லா

நீண்ட உறக்கத்தின் பின்னே

முதல் கவிதைகள் எழுத

முயற்சிக்கப் படும்

முந்தைய இரவுகளில்

கண் விழிக்கின்றன மெல்ல ..

இதுவரை சொல்லப் படாமல்

மனதின் அந்தரங்க வெளிகளில்

உலவிக் கொண்டிருக்கும்

உருவங்களற்ற உணர்வுகளுகேற்ப

தகவமைவு கொண்டு

காகிதங்களில் அடங்கி

அர்த்தம் பெற்றுக்

கவிதைக ளென்கின்றன .

உதிர்ந்து கொண்டேயிருக்கின்றன

இலைகள் …

கூடவே சில பூக்களும்

அதனருகிலேயே

நின்று கொண்டிருக்கும்

காதலைப் பற்றிய மரத்திலிருந்து .