Tags
தோழன் கூற்று
எங்கும் தெரிந்திருக்கும் நிலா போல்
இசை யெங்கும் நிறைந்திருக்கும் இவ்வூரில்
முடிவிலாப் பிரிவொன்றின் லயத்திலமைத்து
காற்றைப் பாடியிருக்கும் மௌனத்தின் மொழியாளே
அவன் காணாக் கண்களால் ஆவது யென்னவென
இமைகள் பூட்டாதே !
சற்றே வெளி வந்து பார் .
பௌர்ணமி யாகாது இரண்டாம் பிறை போலாவது
ஆழிலைக்கண் திறந்து சிறு பார்வை பாராயோ வென
சாரளத்துத் துளைகள் நோக்கி வதங்கி
முல்லைக் கொடிக ளெலாம் பூக்களாய்ப் புலம்பியிருக்கின்றன
உன் வீட்டு முற்றமெங்கும் .
வருந்தாய் !
இடர் உருகிக் கசியும் கருநீல விடியலொன்றில்
வெளிர் பனிப் புகை புணர்ந்து காதற் செய்யும் நேரமொன்றில்
வில்லொன்று விரலிலே யேயிருக்க
சொல்லொன்றே போதும் தரணி தாழ் பணிந்திருக்க
யாவர்க்கும் பிரியமான பெருங்கோ விற் நாடன்
செம்புரவி யேறி வந்து வானிற் இச்சை படிப் பறந்திருக்கும்
பறவையெலாம் பார்த்துக் களித்திருக்க
தேவியுன் காந்தற் கரம் பற்றிக் கவர்ந்து
காற்றோடு கலந்து போனதாய்க்
கனாக் கண்டேனடி தோழி !
இப்போ தான் கவனிச்சேன் .. இது என்னோட 50 வது பதிவு 🙂
தொடர்ந்து ஆதரவும் ஊக்கமும் தந்து கொண்டிருக்கும் அனைவருக்கும் பேரன்பும் நன்றியும் 🙂
LikeLike
schoola படிச்ச தோழி கூற்று மாதிரியே இருக்கு சீனி… 😉
50- வது பதிவிற்கு வாழ்த்துகள்!!!
உன்னுடைய படைப்புகள் கூடிய விரைவில் புத்தகமாக வெளிவர எனது (ஆசியும் 😉 ஆசைகளும்)…
LikeLike
நன்றி ஜெயாஸ் 🙂 ஓவியத்திற்கும் 😉
LikeLike
u call me jayaas again???? grrr…………. :@
LikeLike
ஆமாம்.. நானும் அதேதான் நினைத்தேன்.. 😉 நல்லா வந்திருக்கு.. இதையே ஏதேனுமொரு பா வில் பொருத்திப் பண்ணா பண்ணினா இன்னும் சிறப்பா அமையுமே..!
LikeLike
அடுத்த 50ம் விரைவில் தொட வாழ்த்துகள்..! 🙂
LikeLike
By Default Js .. i cant help it 😉
LikeLike
பா இலக்கணமெல்லாம் எங்கயோ படிச்சா மாதிரி இருக்கு பாலா .. மறுபடியும் பாக்கணும் .தப்பா எதுவும் பண்ணிடக் கூடாதில்ல … முயற்சி பண்றேன் டா 🙂 அடுத்த 50 க்கு நன்றி
hein 🙂
LikeLike
wow js unnoda drawing rompa nalla vanthuruku. innum neraiya ithe ma3 varaiyanum.dont stop draw images.
wishes to u also seeni.
LikeLike
thanks to bala and seeni 🙂 ippo puriju pochu 🙂
LikeLike