Tags

,

 

ஏதோ ஒரு தவறு செய்துவிட்டு

இறைஞ்சி நிற்கிறேன்

உன் முன்னால் …

 

கோபம் கொண்ட பாவனையில்

விழி உயர்த்திப்

போதுமட்டும் ரசித்துவிட்டு ,

கைகுட்டையில் மீதம் வைத்திருந்த

மன்னிப்புகளில் ஒன்றை எடுத்து வீசிப்

புன்னகைக்கிறாய் ரகசியமாக ..

 

மீண்டுமொரு தவறு செய்யத் தயாராகிறேன் …