Tags
உதடுகள் சில்லிட்டுப்போகும்
ஒரு முன்பனிக் காலத்தில்
உன் படுக்கையிலிருந்து
கனவு கலையாமல்
தூங்கும் தேவதையாய்
தூக்கிச் செல்வேன்
சிறகுகள் தந்து ..
———————————————-
இதென்ன குறிப்புகள்
அவள் கண்ணாடி
கவிதை எழுதத் தொடங்கினால்
விஞ்சிவிடும் என்னை …
———————————————-
கண்டேன் காதலை
அவளைச் சந்தித்ததும்
வால் முளைத்து
நான் பார்க்கும் போதே
குதித்தோடிப்போனது
என் இதயம் …
——————————————–
முகத்தில் ஈரக்காற்று
மோதும் போதெல்லாம்
எங்கோ தூரத்தில்
அவள் உதடுகள் குவிக்கும்
ஞாபகம்…
———————————————–
எப்பொழுதும்
அவள் கண்கள் தழுவியிருக்கும்
இமைகளை விட மென்மையானவன்
அதன் கணம் தாங்கா
நான் …
——————————————————–
எதையாவது மறந்துபோய்
தொலைத்துவிட்டுப் போ
நான் பத்திரமாகப் பாதுகாத்து வைக்க …
————————————————————
பூவிதழ்கள் பிடித்துப்
பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன்
உன் கைவிரல்கள்
பிடித்து நடக்க ..
————————————————————–
உன் ஒவ்வொரு அசைவிலும்
காற்றில் எழுதப் படுகின்றன
புதிய இசைக் குறிப்புகள்
———————————————————–
– தொடரும் …
wowwwwwwwwwwwwwwwwwwww 🙂 wat a pic. its superb
LikeLike
பொம்மை சூப்ப்ப்ப்பர்.. 🙂
LikeLike
வரிகளும்தான்.. 😉
LikeLike
@ சத்யா ,
🙂
@ பாலா .
நன்றி சொல்கின்றன பொம்மைகள் …
நானும் தான் …
LikeLike
“முகத்தில் ஈரக்காற்று
மோதும் போதெல்லாம்
எங்கோ தூரத்தில்
அவள் உதடுகள் குவிக்கும்
ஞாபகம்…”—மறைந்திருக்கும் உண்மை அழகு.ஈரக்காற்று அவளது.
பூவிதழ்கள்-கை விரல்கள்.(அப்பப்பா!!! தாங்க முடியல!!!)
கண்ணாடி கவிதை -சூப்பர்.(உன்னோட கவிதையை விட:))
LikeLike
// பூவிதழ்கள்-கை விரல்கள்.(அப்பப்பா!!! தாங்க முடியல!!!)
🙂
LikeLike
realy supper
LikeLike
Hey 🙂 thanks .. good to see you after a long time ..
LikeLike
பூவிதழ்கள் பிடித்துப்
பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன்
உன் கைவிரல்கள்
பிடித்து நடக்க ..
————————
Idhu super da…
LikeLike