Tags

, ,

 

காதல் கவிதைகள் அழகானவை

எல்லோராலும் விரும்பிப் படிக்கப் படுகின்றன

யாருக்காக எழுதப்பட்டிருக்கிறதோ

அவர்களைத் தவிர ..

 

————————————————————-

 

உயிரோடு உறைந்து போகவும்

துணிந்த பின் தான்

உன் பாதச்சுவடுகள்

போன பாதையைத் தேர்வு செய்தேன் ..

 

—————————————————————

 

என்றுமே பின் தொடர்வதில்லை

உன்னை நான்

உன்னோடு சேர்ந்து நடக்கவே

காத்திருக்கிறேன்

 

——————————————————————

 

 

என் கண்களில்

நீ வரா நாட்களில் எல்லாம்

அதிகம் பார்கின்றேன்

வானில் மின்னல்கள்…

 

——————————————————————–

 

காற்றில்

உன் சுவாசம் மட்டும்

பிரித்தெடுத்துச் சுவாசிப்பதாகவே

நினைத்துக் கொண்டிருக்கிறேன்

இன்னமும் …

 

——————————————————————-

 

ஏதோ ஒரு திங்களன்று

உன்னோடு பேசினேன் என்பதற்காக

எல்லாத் திங்கள்களிலும்

பேசிக் கொண்டிருக்கிறேன்

அதே வார்த்தைகளை

நீ இல்லாமலேயே…

 

 

———————————————————————

 

-தொடரும்