Tags

பிறக்கும் போதே

ஒட்டவைக்கப்பட்டிருந்தன

உன் உதட்டில் என் புன்னகைகளும்

என் கண்களில் உன் கண்ணீரும் …

 

—————————————————

 

என்னிரவில் நட்சத்திரங்களாய்

உன் நினைவுகள்

நிலவுக்காகத்தான் காத்திருக்கிறேன்

இத்தனை நாட்களாய்…

 

————————————————

 

உன்னால் நான் தொலைத்த

உச்சகட்ட ஒன்று

நான் தான்..

 

—————————————————

 

ஒவ்வொரு நாளும் கண்விழிக்கையில்

கலைந்து போன கனவின் மீதமாய்

பூக்கிறதோர் புன்னகை

என் உதட்டில் முட்களோடு

 

———————————————————-

 

காதலில் என்றுமே கண்ணீர் கிடையாது

கண்கள் தாண்டி வழியும்

எல்லாத் துளிகளும்

கீழே விழுகின்றன கவிதைகளாகவே..

 

————————————————————

 

எல்லாப் பேருந்துகளிலும்

என் வீட்டு முகவரியே

எழுதப் பட்டிருக்கிறது

உனக்காகத்தான் காத்திருக்கிறேன்

நிழற்குடையின் கீழேயே…

————————————————————