Tags

, ,

 

 

காதலிக்காவிட்டிருந்தால்

என்ன செய்துகொண்டிருந்திருப்பேன்

எண்ணும் போதே

அடிக்கக் கை ஒங்குகின்றன

உன்னைப் பற்றிய கவிதைகள்

 

——————————————————-

 

எதுவும் தெரியாது

உன்னைப் பற்றி

எல்லாம் காதல் கற்றுத்தரும்

என்ற நம்பிக்கையில் …

 

———————————————————

 

வசீகரமாய் பார்த்துப்

புன்னகை செய்கையில்

பறிக்கச் சொல்லிக் கேட்கும்

நந்தவனப் பூக்களுக்கு

நடுவே நான்…

 

—————————————————-

 

உன்னைப் பார்த்த பின் தான்

அதிகம் பார்த்துக்கொள்ளத் துவங்கினேன்

என்னை

 

——————————————————–

 

நிறைய கனவு காண்

எனக்கும் வேலை வேண்டும் அல்லவா???

 

————————————————————

 

மழை பெய்யும் போதெல்லாம்

உன் ஞாபகம்

மழை இல்லா நாட்களில்

மழை பெய்யும் ஞாபகம்

 

————————————————————