Tags
உன்னை நினைவு கூறும்
அடையாளங்களைச் சந்திக்கும்
போதெல்லாம்
புதியதோர் கவிதையையும்
சந்திக்கிறேன்
——————————————————————-
என்றென்னை
நீயும் சந்திக்கிறாயோ
அன்று உனக்கு மட்டும்
கவிதைகள் சொல்லிக் கொண்டிருப்பேன்
காதோரமாய்…
—————————————————————-
உன் ஒவ்வொரு புன்னகையின் போதும்
எங்கோ புதிதாய் பூக்கின்றன
பெயர் தெரியாத சில பூக்கள்…
———————————————————-
உன் நிழல் கூட
அறியா வண்ணம்
உன்னுள் நுழைந்தே தீருவேன்
ஒரு நாள்…
————————————————————
உன் நினைவு தோன்றுகையில் எல்லாம்
ஒரு துளி மழை
சேர்த்துக் கொண்டிருக்கிறேன்
கடல் மட்டம் உயர்வதாக
யாரோ சொல்லிச் செல்கிறார்கள்…
——————————————————————-
என் படுக்கை அருகே
வைத்திருக்கும்
ரோஜா செடியில் என்றெல்லாம்
பூ பூக்கிறதோ
அன்றெல்லாம் நீ என் கனவில் வந்ததாய்
அர்த்தம் கொள்க ..
——————————————————————-
//————————————————————
உன் நினைவு தோன்றுகையில் எல்லாம்
ஒரு துளி மழை
சேர்த்துக் கொண்டிருக்கிறேன்
கடல் மட்டம் உயர்வதாக
யாரோ சொல்லிச் செல்கிறார்கள்…
——————————————————————-
என் படுக்கை அருகே
வைத்திருக்கும்
ரோஜா செடியில் என்றெல்லாம்
பூ பூக்கிறதோ
அன்றெல்லாம் நீ என் கனவில் வந்ததாய்
அர்த்தம் கொள்க ..
——————————————————————-//
இந்த இரண்டும் எனக்கு புரியல
ரசிக்க அர்த்தம் வேணும் ப்ளீஸ்
LikeLike
/உன் நினைவு தோன்றுகையில் எல்லாம்
ஒரு துளி மழை
சேர்த்துக் கொண்டிருக்கிறேன்
கடல் மட்டம் உயர்வதாக
யாரோ சொல்லிச் செல்கிறார்கள்…/
இதுவரை நீ எழுதி தீர்த்த காதல் கடலாகி விட்டதா ?
இனிமேல் எழுதுவது என்னவாகும் ?
LikeLike
யப்பா! முடியல 🙂
LikeLike
@ அப்பாஸ் ,
// உன் நினைவு தோன்றுகையில் எல்லாம்
ஒரு துளி மழை
சேர்த்துக் கொண்டிருக்கிறேன்
கடல் மட்டம் உயர்வதாக
யாரோ சொல்லிச் செல்கிறார்கள்… //
எப்பொழுதெல்லாம் அவள் நினைவு தோன்றுகிறதோ , அதிகமில்லை ஒரே ஒரு துளி மட்டும் தான் சேர்த்து வைக்கிறேன் . சேர்த்து வைப்பதற்கு உள்ளங்கையோ இல்லை சின்ன மீன் தொட்டியோ போதவில்லை எனக்கு . நிலாக்கள் பிய்த்துக் கொண்டு போன கடற் பள்ளத் தாக்குகள் வேண்டியிருக்கிறது . கடல் மட்டம் உயர்வது இயல்பு . ஆனால் நான் சேர்த்து வைக்கும் மழைத் துளிகளால் தான் உயர்கிறது (தற்குறிப்பேற்றல் ???!!!) என்கிறான் காதலன் . துளித் துளியாய் சேர்த்து கடல் நீர் மட்டம் உயர ஒரு வினாடியில் எவ்வளவு முறை நினைத்திருக்க வேண்டும் !!!
பாஸ் , சுருக்கமா அம்மா தாயே உன்னையே தான் எப்பவும் நான் நெனச்சிட்டு இருக்கேன் அப்டின்னு தான் சொல்ல வரேன் .
LikeLike
// என் படுக்கை அருகே
வைத்திருக்கும்
ரோஜா செடியில் என்றெல்லாம்
பூ பூக்கிறதோ
அன்றெல்லாம் நீ என் கனவில் வந்ததாய்
அர்த்தம் கொள்க .. //
பூத்திருக்கும் பூ வொன்று தரும் உணர்வையும் , தினம் கனவில் பூக்கும் அவள் தரும் உணர்வையும் ஒப்பிட்டிருக்கிறேன் அவ்வளவுதான் .
அப்பாஸ் , இருக்கறதுலையே கஷ்டம் நம்ம எழுதின காதல் கவிதைகளுக்கு நாமே விளக்கம் சொல்றது .மறுபடியும் கலாய்கரீங்களா ?? 😉 🙂
LikeLike
@ ரேவதி
// இதுவரை நீ எழுதி தீர்த்த காதல் கடலாகி விட்டதா //
எவ்வளவு எழுதியும் தீராத காதல் …
// இனிமேல் எழுதுவது என்னவாகும் ? //
இனிமேல் நான் என்ன ஆகப் போகிறேனோ 😉
LikeLike
@ சேரல் ,
இதுகேவாண்ணா ??!! 😉
LikeLike
உன் நிழல் கூட
அறியா வண்ணம்
உன்னுள் நுழைந்தே தீருவேன்
ஒரு நாள்…- ithu rompa nalla iruku 🙂 too gud:)
LikeLike
நன்றி sat 🙂 நீயா சொல்ற இந்த கவிதை உனக்கு பிடிச்சிருக்குன்னு …
LikeLike
ஒவ்வொரு கவிதையுமே வித்தியாசமான அனுபவம்..
LikeLike
//எவ்வளவு எழுதியும் தீராத காதல் …//
கவிதையைவிட பதில் அழகாயிடுச்சு 🙂
//இனிமேல் நான் என்ன ஆகப் போகிறேனோ //
உன்ன காதல் தான் காப்பாத்தனும் 🙂
LikeLike
நன்றி ஆதவா 🙂
தங்களது பெயர் அழகாக இருக்கிறது ..
LikeLike
@ ரேவதி
🙂
LikeLike
அத்தனை வரியும் கொள்ளை அழகு.இது வரை வந்த அவள் குறிப்புகளில்,இந்த குறிப்புகள் ரொம்பவே சிறப்பு.
LikeLike
நன்றி கவி 🙂
LikeLike
Sila varusham munnar indha kavidhaiyai naan padichirunthaa… Appove comment ezhudhi kondaadirukkalaam… Vaazhththa neram paarpaanen…
Arumai…
LikeLike
🙂
LikeLike