இந்தத் தெருவின் பெண்
இந்தத் தெருவில் ஒரு பெண் உன் போலவே இருக்கிறாள்.
இங்கிருந்து மூன்றோ நான்கோ வீடுகள் தள்ளியிருக்கும் நீல நிற வீடு அவளது .நட்சத்திரங்களாய் சிதறியிருக்கும் வெள்ளை நிற சங்குப் பூக்களும் ,குரோட்டன் செடிகள் நிறைந்த தொட்டிகளும் அவ்வீட்டின் அடையாளங்கள்.
உன்னைச் சந்தித்தது போலவே மறந்து போன ஒரு நாளில் , தெருவளைவில் முதலில் அவளைப் பார்த்த பொழுது நீ என்று எண்ணியே ஏமார்ந்து போனேன்.ஒரே உயரம் தான் .அவளும் கூட உன் நடையில் தான் நடக்கிறாள்.
நெற்றி வகிடும் , பொட்டின் அளவும் கூட உனதே. திரும்பிச் சிரிக்கையில் நீ என்றே நூறு சதம் எண்ணக் கூடும் .ஒரு நாள் அவள் பேசிக் கேட்கையில், என்றோ கேட்ட உன் குரலை நினைவு படுத்துவதாய் இருந்தது அது .
கருப்பும், அடர் நீலமும் அவளுக்கும் பிடித்திருக்கிறது.என்ன கண்கள் மட்டும் கொஞ்சம் வேறு நிறம் .காதணி கூட உனது போல் இல்லை.இருந்தும் உங்கள் இருவரின் நிழல்களையும் கனவில் காண்கையில் அடையாளம் பிரிப்பதெனக்குக் கடினமே.
இந்தத் தெருவிலுள்ள அந்தப் பெண் ஏறக்குறைய உன் போலவே தான் இருக்கிறாள்.
ஆனால் அவள் நீ இல்லை.
——————————————————————————–
ஓவியம் : http://www.lyonsart.com
nalla iruku.but not vry impressive seeni.innum nalla ezhuthirukalam.unnoda 100% ma3 theriyala.:);)innoru vatti padikaren.
LikeLike
சட்டில இருந்தா தான அகப்பைல வரும் 😉
இந்த கடிதத்திற்கு முதல் வரியும் கடைசி வரியும் மட்டுமே போதும் .
LikeLike
எனக்குள்ளூம் உங்களை போல் ஒருவன் இருக்கிறான் தோழரே…. எழுத்தும் நடையும் கருவும் அருமை
LikeLike
இந்தக் கடிதங்களைத் தொடரலாமா வேண்டாமா என்றிருந்தேன் .. நன்றி தோழரே ! 🙂
LikeLike
விமர்சனங்கள் தான் ஒரு படைப்பாளீயை பண்படுத்தும் தோழர்..எப்படிபட்ட விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்ளுங்கள் அதற்காக உங்கள் படைப்புகளை நிறுத்தாதீர்கள் வண்ணத்துபூச்சிகள் பறந்தால் தான் அழகு
LikeLike
உன் பெயரை கொண்ட ஒருத்தியை இன்று சந்தித்தேன். உன்னிலும் இளமையாக அவள் இருந்தாள். ஆனால், உன்னைப்போலவே அவளும் அழகாயிருந்தாள்.
அவளை நான் அடிக்கடி காண்பதுண்டு. நினைத்துப் பார்த்தால், அவளுக்கும் உன் பெயர்தான் என்று நான் தெரிந்து கொண்ட இன்றுதான் அவளை நான் கவனிக்க ஆரம்பித்தேன். திறந்து சொன்னால், உன்பெயரை வைத்திருப்பதால்தான் அவள் எனக்கு அழகாக தெரிகின்றாளோ தெரியவில்லை.
காதல் நமக்குள் குழந்தைத்தனங்களைத்தான் அதிகம் விதைத்து விட்டுப் போகிறது. இல்லையென்கிறாயா?
நாம் பிடித்துக் கொள்ளும் சண்டைகளை நினைத்துப்பார். அவை குழந்தைத்தனங்களால் ஆனவைகளில்லையா? யோசித்துப் பார்த்தால் அவைகளுக்கான காரணங்கள் எத்தனை அபத்தமானவை. சரி அபத்தமான காரணங்களாவது இருந்தாலும் பரவாயில்லை, ஆனால், பல சமயங்களில் நமது சண்டைகளுக்கு காரணங்களே இருப்பதில்லை.
உண்மையாகச் சொன்னால், நமது சண்டைகளை – சண்டைகள் என்றே சொல்ல முடியாது. எல்லாச் சண்டைகளும் கோபத்தின் உச்சத்தில்தானே பிறக்கின்றன. ஆனால், இந்தக் காதலில் மட்டும் அன்பின் உச்சத்தில்தான் அனேகமான சண்டைகள் பிறக்கின்றன. அதனால்தான், காதலர்களுக்கிடையிலான சண்டைகளை மட்டும் இலக்கியம் ஊடல் என்கிறது!
உன் பெயரைக் கொண்ட அந்த ஒருத்தி, உன் பெயரை வைத்திருப்பதால்தான் எனக்கு அழகாய் தெரிந்திக்கலாம் என்பதைப்போலவே, உனக்கு வைத்திருப்பதால்தான் உன் பெயரும் எனக்கு அழகாய் தெரிகிறதடி பெண்ணே!
LikeLike
// காதல் நமக்குள் குழந்தைத்தனங்களைத்தான் அதிகம் விதைத்து விட்டுப் போகிறது
// காதலில் மட்டும் அன்பின் உச்சத்தில்தான் அனேகமான சண்டைகள் பிறக்கின்றன
// உன் பெயரைக் கொண்ட அந்த ஒருத்தி, உன் பெயரை வைத்திருப்பதால்தான் எனக்கு அழகாய் தெரிந்திக்கலாம் என்பதைப்போலவே, உனக்கு வைத்திருப்பதால்தான் உன் பெயரும் எனக்கு அழகாய் தெரிகிறதடி பெண்ணே!
அத்தனையும் அழகான வரிகள் தோழரே ! தங்களது தளத்தின் முகவரி தர முடியுமா ???
LikeLike
// வண்ணத்துபூச்சிகள் பறந்தால் தான் அழகு.
🙂
LikeLike