Tags

 

 

 

 

எனக்கான தலைவிதி

உன் கண்களில் ஓடும்

ரேகைகளில் இருக்கிறது …

 

———————————————————-

 

உன்னிடம் மட்டுமே பேசுவதற்காய்

நிறைய வார்த்தைகள்

சேர்த்து வைத்திருக்கிறேன்

மெளனத்தின் மொழியில் …

 

————————————————————

 

 

இவ்வளவு கவிதைகள் தந்து விட்டாய்

காதலையும் தந்து விடேன்

வேண்டுமானால் திருப்பித் தந்துவிடுகிறேன்

உன் கவிதைகளை…

 

—————————————————————

 

உனக்கெடுக்கும் வார்த்தைகள் மட்டும்

வாசனையோடு வருகின்றன

ஆனால் எனக்கு தான்

ரத்த வாடை பிடிப்பதில்லை..

 

—————————————————————-

 

நீ வீட்டை விட்டு வராத நாட்கள்

விடுமுறை நாட்கள்

 

—————————————————————–

 

நான் தனிமையில் இல்லை

உன் நினைவுகள் போதுமென்று

எல்லவற்றையும்

விரட்டிவிட்டு விட்டேன் .

 

 

——————————————————————–