Tags
ஜன்னல் திறந்ததும்
ஆச்சர்யம் கொள்ளாதே
வண்ணத்துப்பூச்சிகளிடம் வழி விசாரித்து
வந்து சேர்ந்திருக்கலாம் நான் அங்கே..
———————————————————–
ஒவ்வொருமுறையும்
நீ கண்ணிமைக்கும் போதெல்லாம்
இமைகள் தொலைக்கிறேன் நான்…
————————————————————
மழை விழப்போவதை அறிவித்துவிட்டு
எவ்வளவு சீக்கிரம் முடியுமோ
அவ்வளவு சீக்கிரம்
உன் வீட்டுக்கு ஓடிவந்துவிடுகின்றன
வானவில்கள்…
—————————————————————
சத்தமிடாத வளைகள்
கண்டுபிடிக்கப்படவில்லை இன்னமும்
வேண்டுமானால் சிரித்துப்பாரேன்
மெளனமாகக் கூடும் அவைகள்.
————————————————————–
உன்னுடன் பேச
ஒத்திகை எடுக்கும் போதுதான்
உணர்கிறேன்
இத்தனை சிறிய மொழியா
தமிழ்???
—————————————————————
என் ஒவ்வொரு அணுக்களிலும்
பூ பூக்கும் போதே
அறிந்து கொள்வேன்
நீ என்னைக் கடந்து செல்வதை
கண்கள் மூடியிருப்பினும்..
—————————————————————–
//சத்தமிடாத வளைகள்
கண்டுபிடிக்கப்படவில்லை இன்னமும்//
இந்த detail lam எப்படி ?
LikeLike
தம்பி! என்னப்பா ஒரே காதல் மயக்கமா இருக்கு? படிக்கிறவங்களுக்கும் பரப்பி விட்டு விடுவாய் போலிருக்கிறது!
-ப்ரியமுடன்
சேரல்
LikeLike
//இந்த detail lam எப்படி ?//
இது ஒரு நல்ல கேள்வி … 😉
LikeLike
என்ன அண்ணா பண்ண ??
விதை ஒண்ணு போட்டா சுரை ஒன்னா முளைக்கும் ??? 🙂
எழுதி தீத்திடலாம் ன்னு தான் பாக்கிறேன் .
பாஸ் பரப்புறதுதான பட்டாம்பூச்சியோட வேலை 🙂
LikeLike
கவிதையின் தொடக்கமே அழகு.
“உன்னுடன் பேச
ஒத்திகை எடுக்கும் போதுதான்
உணர்கிறேன்
இத்தனை சிறிய மொழியா
தமிழ்???”— இந்த சிறிய மொழியை வைத்தே இத்தனை கவிதைகளா?!!!.lol;-)
LikeLike
🙂
LikeLike