Tags

 

 

நீ கடந்து போன

நந்தவனப் பூக்கள் எல்லாவற்றிலும்

ஒரே வாசம்

திருடியது நீயா ?? பூக்களா ??

 

—————————————————

 

கனவில் நீ அணிந்து வரும்

ஆடையின் நிறத்தை எடுத்தே

போர்த்திக்கொள்கிறது

எனது பகல்…

 

————————————————-

 

தன்னில் தெரியும்

உன் பிம்பத்திற்கு

என் கண் பட்டுவிடாமல் இருக்க

உன் கண் மை கேட்டு

ஜன்னலில் பின்னே

காத்திருக்கிறது நிலவு.

 

———————————————

 

 

உன் இரு புருவங்களுக்கிடையே

நீ வைத்திடும் பொட்டு

கறையாக்குகிறது நிலவை.

 

————————————————-

 

யாரிடமேனும்

உன் பெயர் சொல்ல நேர்கையில்

கண நேரத்தில் என் இதழ்களில்

கடந்து போகும் குறுநகை பார்

ஒத்துக்கொள்வாய்

நாணமென்பது மகளிர்க்கு மட்டுமே

உரியதல்ல…

 

—————————————————–

 

அமாவாசை அன்று மட்டுமல்ல

என்று நான் நிலவு தேடினாலும்

என் கால்கள் வந்து நிற்கின்றன

உன் வாசலருகே…

 

——————————————————–