Tags
லீவுக்கு மாமனார் வீட்டுக்கு போனா என்னங்க பண்ணனும் .கொஞ்சம் அதிகாரம் பண்ணலாம் . டிவி ரிமோட்ட கைல எடுத்து வச்சுக்கலாம் . கிரிக்கெட் இல்லன்னா புரியாட்டியும் பரவா இல்லன்னும் புட் பால் ரக்பின்னு கால் மேல கால் போட்டு உட்கார்ந்து பாக்கலாம் . ஒரு சானல்ல ,சீன குட்டிங்க கொஞ்சூண்டு துணி போட்டு சகதில கட்டிப் பிடிச்சு சண்ட போடுதுங்க .. அதையாவது ஸ்வாப்பிங்-ல ஜெட்டிக்ஸ் -அ வச்சிக்கிட்டு பாக்கலாம் . நல்லா தூங்கலாம் . சாப்டலாம் . சாயங்காலம் கஞ்சி போட்டு அயர்ன் பண்ண துணிய மாட்டிகிட்டு வொய்ஃபோட கோவிலு சினிமான்னு போயிட்டு வரலாம் . யாராவது கடவுளைக் காட்டறேன்னு சொல்லுவாங்களா . நான் சொல்லிருக்கனே .
உங்களுக்கு புரியறா மாதிரி சொல்லணும்னா நான் தெய்வானைய ஏன் கல்யாணம் பண்ணினேங்கறதுல இருந்து ஆரம்பிக்கணும் .எதுக்குங்க நான் திருச்சில பொண்ணு எடுக்கணும் . நான் திருச்சி பெல்-ல தான் வேலை செய்யறேன் . அதே ஊருன்னா ஞாயித்துக் கிழமையான போய் வர சௌரியமா இருக்குமேன்னு தான் .
உங்களுக்கு திருவெறும்பீஸ்வரர் மலைக்கோயில் தெரியுமா ??ம்ம் .. ஹ்ம்ம் .. உச்சிபிள்ளையார் கோயில் இல்லைங்க .. இது தஞ்சாவூர் போற ரோட்ல இருக்கு .. பக்கத்துல கூட ஒரு கவர்மென்ட் காலேஜ் இருக்கு .. பொண்ணுங்க எல்லாம் கிளாஸ்க்கு டவுசர் பனியன் போட்டு போவாங்களாம் .. வள்ளி சொல்லுவா . வள்ளி யாருன்னு அப்பறம் சொல்றேன் .
மலைக்கோவில் இருக்கா .. அது தாண்டி கொஞ்ச தூரம் போனீங்கன்னா காட்டூருக்கு முன்னாடி தான் கைலாஷ் நகர் இருக்கு . பஸ்ல இருந்து எறங்குனதும் அங்க மளிகை கடை தெரியுது பாருங்க ..அவ்ளோ தாங்க ,அத ஒட்டினா மாதிரி போற சந்துல கடைசிக்கு மொத வீடு .இந்திரன் வாத்தியார் வீடுன்னா எல்லாருக்கும் தெரியும் . மாடில , சாயங்காலம் ஆனா இங்கிலீஷ் டியுசன் எல்லாம் எடுப்பாரு .அது தாங்க நம்ம மாமனார் வீடு .
இப்போ வள்ளி . முழு பேரு ஸ்ரீ வள்ளி .நம்ம வொய்ஃபோட தங்கச்சி .. எனக்கு அப்டின்னா மச்சினிச்சி .. இந்த பேர்ல அப்டி என்ன தான் கிக் இருக்கோ போங்க சார் . சொல்லும் போதே ஓரத்துல கள்ளச் சிரிப்பு வருது .மச்சினிச்சி . ஸ்கூல்ல பதினொன்னு படிக்கறா . நல்ல செகப்பா வின்னுன்னு இருப்பா . ஏ கியூப் ப்ளஸ் பி கியூப் னா சிவிக்ஸ் ல வருதான்னு கேப்பா . அல்ஜீப்ரா சொல்லிக் குடுக்கறேன்னு கைல தடவலாம் . கன்னத்தைக் கிள்ளலாம் .எதுவும் சொல்ல மாட்டா. அவங்கப்பாவுக்கும் மாத்ஸ் வாத்தியாருக்கும் ஆகாதது நமக்கு நல்லதா போச்சு . ஸ்கூல் முடிச்சிட்டு அந்த கவர்மென்ட் காலேஜ் தான் போகணும்னு ஆசையாம். அவளை பனியன்ல நெனச்சா இப்போவே சப்புக் கொட்டுது .
சண்டே மட்டன் ,சைனா காரிங்க குஸ்தி , வள்ளிக்கு மாத்தமாடிஃக்ஸ் , வொய்ஃபோட சோனா -மீனா தியேட்டர்ல சினிமான்னு வாழ்க்கை நல்லா தான் சார் போயிட்டு இருந்தது . எல்லாம் அந்த பாழா போன கடவுளைப் பாக்கற வரைக்கும் .
வழக்கம் போல இந்த சனிக்கிழமைக்கும் மாமனார் வீட்டுக்கு வந்தாச்சு . நமக்குன்னு தனியா ரூம் குடுத்திருக்காங்க . ஆடி மாசமாம் .. வருசா வருஷம் வந்திட்டு தான இருக்கு .. ஏதோ புதுசா வரா மாதிரி இவ அம்மா ரூம்ல போய் படுத்துகிட்டா.எஃப் டிவி , வீ டிவி பாட்டுன்னு பார்த்திட்டு தூங்க ராத்திரி பன்னன்டுக்கு மேல ஆகிடுச்சு .
காவேரி தியேட்டர்ல கமல் படம் . பால்கனி ல கூட்டமே இல்ல . ஓரமா மூணு சீட்டு . நடு சீட்ல நான் உட்கார்ந்திருக்கேன் .இந்தப்பக்கம் தெய்வான அந்தப் பக்கம் வள்ளி . கிளைமேக்ஸ்கு கொஞ்சம் முன்னாடி கமல் ஹீரோயினிக்கு முத்தம் வைக்கறார். என்னடா யாரோ நம்மளையே பாக்கறாமாதிரி இருக்கேன்னு பாத்தா இவங்க ரெண்டு பெரும் என்னையே பாக்கறாங்க .. சிரிக்கறாங்க .. பாக்கறாங்க .. சிரிக்கறாங்க .. திடீர்ன்னு ரெண்டு பெரும் கன்னத்துப் பக்கத்துல முத்தம் குடுக்க வராங்க .. அட ஒரே நேரத்துல சார் .
அப்போ பார்த்து முருகேசான்னு ஒரு குரல் .யாருப்பா அது , முருகேசன் பூஜைலல கரடின்னு பார்த்தா .. கரடி இல்லைங்க அது கடவுள் . அப்படின்னு அவரே சொல்லிக்கிட்டாரு .
அவ்ளோ தான் . கனவு கலைஞ்சு போச்சு .என் ரூம்ல என் முன்னாடி நிக்கற ஆளப் பார்த்து கத்தறேன் . யோவ் யாருய்யா நீ . இங்க என்ன பண்றேன்னு . ஜன்னல் கதவெல்லாம் வேற சாத்தி தான் இருக்கு .
பயப்படாத முருகேசா . நான் கடவுள் அப்டீங்கறாரு. யோவ் இன்னொரு தடவ பேரு சொல்லிக் கூப்பிட்ட மரியாதை கெட்டிடும். நானும் பாக்கறேன் ..வந்ததில இருந்து கடவுள் .. கடவுள் ங்கற .. நான் எப்டியா நம்பறது . தலைக்குப் பின்னாடி ஸீரோ வாட்ஸ் பல்பு கூட எரியல . கருடன் , கழுதைன்னு வாகனத்த ஒண்ணும் காணோம் . வெளியிலேயே பார்க் பண்ணிட்டு வந்துட்டியா அப்டின்னேன் .
கொஞ்சம் விளக்கப் போடறியா பேசணும் னு கட்டில்ல உட்கார்ந்துகிட்டாரு .
கத்திப் பாக்கறேன் . கதவ தெறக்க முடியல .வெளிய சத்தம் கேட்ருந்தா அவங்களாவது வந்திருப்பாங்க. ஒரு வேளை நெஜமாவே கடவுளா இருப்பாரோன்னு எனக்கும் தோண ஆரம்பிச்சுருச்சு . லைட்-அ போட்டா சிரிச்சுட்டே கேக்கறாரு இப்போவாவது நம்பறியான்னு.
வெளிச்சத்துல பார்த்ததும் சப்ப்ன்னு ஆகிடுச்சு சார். கடவுள் ஒண்ணும் அவ்ளோ அழகா இல்லை .என்.டி.ஆர் மாதிரி கூட இல்லை . முன்னந் தலைல வழுக்கை . பல்லு கூட கட்டியிருந்தா மாதிரி தான் இருந்தாரு . ஒழுங்கா சவரம் கூட செஞ்சிருக்கல .எல்லாத்துக்கும் மேல வேட்டிக்குள்ள இருந்து ஒரு டியுப் வழியா பாட்டில்ல சொட்டிட்டே இருந்தது . கடவுளே , அவருக்கு சக்கர வியாதியாம் .
இப்படி எந்த வித கவர்ச்சியும் இல்லாத இவர போய் எப்டி கடவுள் ன்னு நம்பறது . உங்கள மாதிரியே சத்தியமா நானும் நம்பிருக்க மாட்டேன் .இத மட்டும் அவரு சொல்லலைன்னா.வள்ளி உனக்கேன்னாரு.
பக்கத்து சுவத்துல கைய நீட்டறாரு.கண்ணாடி மாதிரி ஆகிருச்சு .தெய்வானை , அவ அம்மா , வள்ளி மூணு பேரும் தூங்கிட்டு இருக்காங்க . மணி பாக்கறேன் ஆறு ஆகப் போகுது .வள்ளி என் வொய்ஃ மேல கால் போட்டுக்கிட்டு , வாய்ல விரல் விட்டு ஜோரா தூங்கறா.இந்த மாஜிக் பார்த்ததும் அவர் கடவுள்ன்னு பரி பூரண நம்பிக்கை வந்திருச்சு.
அவர் கால்ல விழுந்து சேவிச்சு கைய கட்டிக்கிட்டு பவ்யமா அவர் முன்னாடி நிக்கறேன் . அவர் பேச ஆரம்பிச்சாரு .
சுருக்கமா இவ்ளோ தாங்க . கடவுளுக்கு வயசாகிடுச்சாம் .முன்ன மாதிரி ஓடியாடி வேலை பார்க்க முடியலையாம் .ஞாபக மறதி வேற அதிகமாயிடுச்சாம் . அதனால ஏரியாக்கு ஒரு ஏஜெண்ட நியமிக்கப் போறாராம் . இந்த மலைக்கோவில் ஏரியாவுக்கு நானாம் .இன்டெர்வியு எல்லாம் வேணாம் . நான் ஸ்பாட் செலக்ட் ன்னுட்டார். அவர் அப்பப்போ குடுக்கற பொருள சாண்டா கிளாஸ் மாதிரி சப்ளை பண்ணனும் . அப்பறம் கொஞ்சம் சின்ன சின்ன வேலைங்க .. அருள் வாக்கு சொல்றா மாதிரி பண்ணனும் . அவ்ளோ தானாம் . இதுக்கு நான் ஒத்துகிட்டா , மாசம் பதினாயிரம் சம்பளம் , தீபாவளி பொங்கல் போனஸ் எல்லாம் உண்டு . வள்ளியும் எனக்கேன்னாரு.யாராவது வேணாம் னு சொல்லுவாங்களா .
ஆனா வெளிய சொன்னா நம்பணுமே .அதையும் கேட்டனே அவர்கிட்ட . நேரா போய் வள்ளி கணக்கு புஸ்தகத்துல எழுவத்தி எட்டாம் பக்கம் பார் . ஒரு காதல் கடுதாசி இருக்கும் .உன் மாமனாரோட காணாம போன ஹீரோ பேனா சமையல் கட்டுல ஓடாம இருக்கற கிரைண்டர் ல இருக்கு . உன் மனசில தோணினத எல்லாம் பண்ணு . நான் கூடவே இருந்து அத உனக்கு சாதகமா மாத்தி எல்லாரையும் நம்ப வைக்கறேன் அப்டீன்னாரு .
கண்ண மூடிட்டு ஏதோ சொன்னாரு . பெட் ல ஒரு கோ ஆப்டெக்ஸ் புது பொடவை இருந்தது. இத உன் மனைவிகிட்ட குடுன்னாரு.அட்வான்சாம் . எல்லாம் ஓகே யாச்சுன்னா வள்ளிக்கு அப்பறமா தரேன்னாறு.
இன்னைக்கு சாயங்காலம் ஆறு மணிக்கு எல்லாரையும் கூட்டிட்டு மலைக் கோவிலுக்கு வந்தா , எல்லார் முன்னாடியும் என்ன அவர் ஏஜெண்டா அனௌன்ஸ் பண்றதா சொன்னார் .வேற என்ன சார் வேணும் . சரின்னுட்டேன் .
கிளம்பறதுக்கு முன்னாடி கேட்டார் . முருகேசா என் சீசா நெறஞ்சிருச்சு. உன் பாத்ரூம யூஸ் பண்ணிக்கலாமான்னு . கடவுளே கேட்டா யாராவது கூடாதுன்னு சொல்வாங்களா .
ஆனா கடவுள் உள்ள போய் பத்து நிமிஷம் ஆச்சு . இருபது நிமிஷம் ஆச்சு . வயசானவர் வழுக்கி ஏதாவது ஆகிடுச்சுனா . பயந்துட்டே கடவுளே ஆச்சா ன்னு கதவைத் தட்டினேன் .சத்தமே காணோம் . கொஞ்ச நேரம் தயங்கி கடவுளே ஆச்சான்னு கேட்டேன்னேன்.. மறுபடியும் .. ஒரு சத்தமும் இல்ல .. மெதுவா கதவுல கைய வச்சேன் . தொறந்துகிச்சு.உள்ள கடவுளைக் காணோம் . அந்த சீசாவையும் காணோம் . ஆனா அதோட வாசம் மட்டும் போகல.
என்ன செய்யறதுன்னு தெரியாம கொஞ்ச நேரம் உக்கார்ந்திருந்தேன் .புடவை மெல்லிசாக இருந்தது . வள்ளிக்கு சுரிதார் கேக்கணும்னு நெனச்சுகிட்டேன் . மணி ஆறரை ஆகியிருந்தது . வெளில வாசல் தெளிக்கற சப்தம் கேட்டுச்சு . பெட்ரூம் கதவு இப்போ தெறந்திருந்தது. கண்டிப்பா கடவுளே தான் . சக்கரை வியாதிக் கடவுள் . சிரிப்பு வந்தது . தப்பு தப்பு … கன்னத்தில் போட்டுக்கிட்டேன் .
ஹாலைத் தாண்டி வந்தா கிச்சன்ல தெய்வா மட்டும் இருந்தா .. தெய்வான்னேன் மெல்ல .. என்னான்னா … கொஞ்சம் பெட் ரூம் வரைக்கும் வாயேன்னேன் . என்னாங்கறா ,காலங்காத்தால உங்களுக்கு வேற வேலையே இல்லியா . ஆடி மாசம் .. அம்மா திட்டும் ங்கறா லூசு மாதிரி ..
கைய பிடிச்சு இழுத்துட்டு போய் கைல பொடவைய குடுத்தா .. சிரிச்சிகிட்டே சரி சரி வீட்டுக்கு போனதும்ங்கறா .. சொல்லுங்க சார் இவள வச்சிக்கிட்டு நான் என்னத்தப் பண்றது .. எவ்ளோ பெரிய விஷயம் சொல்லிட்டு இருக்கேன் .. இப்போ அதுவா முக்கியம் .
பொடவையப் பார்த்துட்டே இருந்தவ , கடவுள் குடுத்தார்னதும் சிரிக்க ஆரம்பிச்சுட்டா . யாரு ஓசில குடுத்ததுன்னு கேக்கறா .. வந்துச்சு பாருங்க கோபம் .. பளார்ன்னு விட்டேன் .
அவ கத்தின கத்தில எல்லாரும் ஹால்ல இருந்தோம் அடுத்த அஞ்சு நிமிசத்துல .
ஏதோ கொலை பண்ணினா மாதிரி ஆளாளுக்கு கேள்வி கேக்கறாங்க .. மாமா மட்டும் ,இது தப்பில்லையாங்கறார் அமைதியா. நான் எல்லாத்தையும் திருப்பி சொன்னேன் . கடவுள் வந்தாரு .. ஏஜென்ட்டு ன்னாரு .. பொடவை குடுத்தாருன்னு ..
தூக்கத்துல இருந்த வள்ளி என்னைய பார்த்து கனா கண்டீங்களா மாமாங்கறா . எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியல .. கோவமா வந்தது . தெயவான வேற பூசு பூசு ன்னு அழுதிட்டே இருக்கா …
” உன் மனசில தோணினத எல்லாம் பண்ணு . நான் கூடவே இருந்து அத உனக்கு சாதகமா மாத்தி எல்லாரையும் நம்ப வைக்கறேன் “
சொன்னா நம்ப மாடீங்க .. மனசுக்குள்ள அசீரிரீ மாதிரி கேக்குது . ஒடம்பெல்லாம் முறுக்கிகிச்சு.. வள்ளீன்னு கத்தினேன் .. பக்கத்துல வந்தா .. போ .. போய் உன் கணக்கு புத்தகத்த எடுத்திட்டு வான்னேன் .. திரு திருன்னு முழிக்கறா .. சொல்றேன் கேக்கல .. போன்னேன் ..
பம்மிகிட்டே எடுத்துட்டு வந்தா . எழுபதெட்டாம் பக்கத்துல என்ன வச்சிருக்கன்னேன் .. அவ்ளோ தான் அழுதுட்டா .. நான் வேணான்னு தான் சொன்னேன் மாமா .. அந்த ரமேஷ் தான் கைல வச்சிட்டு ஓடிட்டான் .. ஒரே அழுகை .. ரமேஷா .. அவன அப்பறமா கவனிக்கணும் னு மனசில நெனச்சுகிட்டேன் .
ஓடாத கிரைண்டர்ல இருந்து மாமாவோட பேனாவ எடுத்து குடுத்தேன் . நான் ப்ளஸ் டூ போகும் போது எங்கப்பா குடுத்ததுன்னு ஆனந்த கண்ணீர் அவருக்கு ..
எல்லாரும் என்ன மிரட்சியா பார்த்தாங்க ..அத்த மட்டும் கேக்கறாங்க .. என் கம்மல் ஒன்னு ரெண்டு நாளா காணோம் .. சாமிகிட்ட கேட்டு கண்டுபிடிச்சு தறீங்களான்னு ……..
சொன்னா நம்ப மாட்டேங்க சார் .. கொஞ்ச நேரத்துல தெருவுக்கே பிரபல்யமாயிட்டேன் . எல்லாரும் அவங்க அவங்க குறைகள வந்து சொல்றாங்க . நானும் வாய்க்கு வந்தத சொல்லி விபூதி குடுத்திட்டு இருந்தேன் .
என் பக்கத்துல தெய்வானை , புது கோ ஆப்டெக்ஸ் பொடவ கட்டிட்டு நிக்கறா . பக்கத்து வீட்டு மாமி டிசைன் நல்லா இருக்குன்னு சொன்னதுல ரொம்ப சந்தோசம் அவளுக்கு . எனக்கு யாரும் பாக்காதப்போ ஃபிளையிங் கிஸ் கூட குடுத்தான்னா பாத்துகோங்களேன் .
ஒரு ஓரத்துல உட்கார்ந்து வள்ளி மட்டும் மொறச்சு பார்த்துட்டே இருந்தா . இனிமே அல்ஜீப்ரா எல்லாம் செல்லாது .பரவா இல்ல . கடவுள் பாத்துப்பார் .
சரியா நாலரை மணிக்கு பேண்டு வாத்தியங்களோட தெரு மொத்தமும் மலைகோவிலுக்கு கெளம்பினோம் .மாமா தான் ஏற்பாடு பண்ணியிருந்தார் . திருவெறும்பூர் ஏரியா ஆளுங்க கூட விஷயம் கேள்விப்பட்டு வரதா பேசிகிட்டாங்க . தெருவழியா நடக்கும் போது அவங்க கொழந்தைங்கள என் கால்ல வச்சு ஆசீர்வாதம் வாங்குனாங்க .
அஞ்சு மணிகெல்லாம் மலை உச்சிக்கு வந்தாச்சு . எங்க குடும்பத்துக்கு ஸ்பெசல் தரிசனம் வேற . எல்லாரும் பொடவையையும் , பேனாவையும் தொட்டு கண்ணுல ஒத்திகிட்டாங்க .கூட்டம் அலை மோதுது. கோட்டைய விட்டு வெளிய வந்து எல்லாரும் பாறைமேல ஏறிகிட்டு எந்த பக்கத்துல இருந்து கடவுள் வருவாருன்னு வானத்தையே பார்த்திட்டு இருந்தோம் .
ஆறு மணியாச்சு . கடவுள் வரல . எனக்கு உள்ளுக்குள்ள பதறுது . ஒரு பத்து நிமிஷம் கூட்டம் பெரிசா எடுத்துகல . கடவுளும் நம்மூரு தான .. கொஞ்சம் லேட்டா தான் வருவாரு சொன்ன நேரத்த விடன்னு .. பூசாரி தான் பக்கத்துல வந்து என்னாச்சுன்னார் ..
இதோ வந்திருவாருன்னேன் . சும்மா நேரத்தைப் போக்க கூட்டத்துல குத்து மதிப்பா ஆளுங்களக் காட்டி நீ நல்லா இருப்ப .. அத்த பண்ணு .. பேர மாத்துன்னு அள்ளி விட்டு பார்த்தேன் ..
ம்ஹ்ம்ம்ம்.. ஆறரை ஆச்சு .. கடவுள் வரவேயில்ல .. கூட்டம் முனுமுனுக்க ஆரம்பிச்சது.. இப்போ கடவுள் வருவாரா வர மாட்டாரா ன்னு ஒருத்தன் கத்தினான் .. அப்படியே சத்தம் அதிகமாக ஆரம்பிச்சது .. பாவிப் பயலுங்க பந்தயங் கட்டிருக்கானுங்களாம் கடவுள் வருவாரா மாட்டாரான்னு … உன்ன நம்பி ஆயிரம் ரூவா கட்டிருக்கேன் .. கடவுள் மட்டும் வரல மவன்னேன்னான் ஒருத்தன் ..
இன்னும் எவ்ளோ நேரம் ஆகும்ன்னு எல்லாரும் கத்த ஆரம்பிச்சுடாங்க .. உடம்பு நடுங்க ஆரம்பிச்சது எனக்கு .. டேய் .. இன்னும் பத்து நிமிசத்துல நான் வந்திருவேண்டா ன்னு சாமி வந்தா மாதிரி அள்ளி விட்டேன் .. கூட்டம் கொஞ்சம் அமைதியா இருக்கு இப்போ .
யோவ் சனியம் பிடிச்ச கடவுளே .. நானா வந்து கேட்டேன் உன்கிட்ட .. நான் பாட்டுக்கு சில்ரத்தனாமா ஏதாவது பண்ணிட்டு சந்தோசமா தானையா இருந்தேன் .. ஏஜென்ட் ஆக்கறேன்னு சொல்லி ..
சார் .. இதெல்லாம் நான் உங்ககிட்ட ஏன் சொல்றேன்னா .. இன்னும் அஞ்சு நிமிஷம் தான் இருக்கு .. உங்க பாத்ரூம தொறந்தோ இல்ல வீட்டு பக்கத்துல இருக்கற மூத்திர சந்துலயோ பாருங்க. நான் சொன்ன அடையாளத்துல ஒரு கெழவன் , சொவத்த பிடிச்சிட்டே கைல சீசாவோட உச்சா உட்டு இருந்தாருன்னா அவரு தான் கடவுள் . அப்டியே பொடதில அடிச்சு இங்க அனுப்பி வைங்க . மாமனார் வீட்டு முன்னாடி மானம் போகுது .
——————————————————————————–
காதல் கவிதைகளா எழுதி மொக்க போடாத என்று அன்போடு கேட்டுக் கொண்ட சேரலுக்கும் , சத்யாவிற்கும் இந்த ஜாலிக் கதை … 😉
LikeLike
bad luck vikatan.. 🙂
LikeLike
முருகேசனோட சில்லறைத்தனங்கள் நிரம்பிய இந்த கதையை ஜாலி கதையாலாம் எடுத்துக்க முடியல . இது கதையின் குறையா இல்ல என் ரசனையின் குறையா நு தெரியல .
தேவைகளுக்காக தான் கடவுள் ,என்பது தான் இந்த கதையின் கருவா ?
LikeLike
தம்பி, என்னால முடியல 🙂 நல்ல கதையோட்டம். ஆங்காங்கே இருக்கிற சில கொசுறு விஷயங்களும் ரசிக்க வைக்கின்றன.
//ஏ கியூப் ப்ளஸ் பி கியூப் னா சிவிக்ஸ் ல வருதான்னு கேப்பா . அல்ஜீப்ரா சொல்லிக் குடுக்கறேன்னு கைல தடவலாம்//
//வெளிச்சத்துல பார்த்ததும் சப்ப்ன்னு ஆகிடுச்சு சார். கடவுள் ஒண்ணும் அவ்ளோ அழகா இல்லை .என்.டி.ஆர் மாதிரி கூட இல்லை . முன்னந் தலைல வழுக்கை . பல்லு கூட கட்டியிருந்தா மாதிரி தான் இருந்தாரு . ஒழுங்கா சவரம் கூட செஞ்சிருக்கல .எல்லாத்துக்கும் மேல வேட்டிக்குள்ள இருந்து ஒரு டியுப் வழியா பாட்டில்ல சொட்டிட்டே இருந்தது . கடவுளே , அவருக்கு சக்கர வியாதியாம் //
//வள்ளிக்கு சுரிதார் கேக்கணும்னு நெனச்சுகிட்டேன் //
//ரமேஷா .. அவன அப்பறமா கவனிக்கணும் னு மனசில நெனச்சுகிட்டேன்//
//அத்த மட்டும் கேக்கறாங்க .. என் கம்மல் ஒன்னு ரெண்டு நாளா காணோம் .. சாமிகிட்ட கேட்டு கண்டுபிடிச்சு தறீங்களான்னு ……..//
இப்படி நிறைய …… 🙂
என் வேண்டுகோளுக்காகக் காதல் கவிதை தவிர்த்து இதை எழுதியமைக்கு நன்றி 🙂
-ப்ரியமுடன்
சேரல்
LikeLike
// bad luck vikatan.. 🙂
One day ……
LikeLike
@ ரேவதி ,
ரசனைக் குறைபாடாக இருக்க வாய்ப்பில்லை . இது ஒரு கதை அவ்வளவே.எந்தக் கருத்தையும் முன்வைப்பதல்ல.
இத்தனை நாட்களில் நான் உணர்ந்து கொண்டது இதுதான் . எந்தக் கதைகளும் நமக்கு எதையும் போதிப்பதில்லை . மாறாக வாசிப்பானுபவம் என்னும் மிகப்பெரிய இன்பத்தைத் தரக்கூடும் , எந்த அர்த்தத்தையும் ,தர்கத்தையும் நாம் தவிர்த்து விட்டுப் படிக்க முன்வந்தால் …
LikeLike
நன்றி சேரல் அண்ணா 🙂
காதல் கவிதைகளை தவிர்க்க எல்லாம் முடியாது என்றே நினைக்கிறேன் 😉 தற்காலிகமாகத் தள்ளி வைத்திருக்கிறேன் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம் .
LikeLike
//இத்தனை நாட்களில் நான் உணர்ந்து கொண்டது இதுதான் . எந்தக் கதைகளும் நமக்கு எதையும் போதிப்பதில்லை . மாறாக வாசிப்பானுபவம் என்னும் மிகப்பெரிய இன்பத்தைத் தரக்கூடும் , எந்த அர்த்தத்தையும் ,தர்கத்தையும் நாம் தவிர்த்து விட்டுப் படிக்க முன்வந்தால் //
தம்பி! உன் கருத்தில் எனக்கு முழு உடன்பாடு இல்லை. கதைகள் எதுவும் போதிப்பதில்லை என்றாலும், அவற்றுள் ஒரு படிப்பினை நிச்சயமாகவே இருக்கிறது. அதை எடுத்துக்கொள்ளும் பக்குவமும், தகுதியும் தான் நம்மில் பலருக்கு இல்லை. கலையின் எந்த வெளிப்பாடும், ஏதோ ஓர் உணர்வை உலகுக்குச் சொல்லிக்கொண்டே இருக்கிறது. நாம் தான் செவிடு பட்ட காதுகளோடு வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அந்த நிலையை மீறி நம்மை இட்டுச் செல்லவும் இந்தக் கலைகளன்றி வேறெதுவும் துணையில்லை. உன் இந்தச் சிறுகதையும் எத்தனையோ விஷயங்களை எனக்குப் போதிக்கிறது. நான் கற்றுக்கொண்டே இருக்கிறேன், இன்னும் இன்னும்.
-ப்ரியமுடன்
சேரல்
LikeLike
// கலையின் எந்த வெளிப்பாடும், ஏதோ ஓர் உணர்வை உலகுக்குச் சொல்லிக்கொண்டே இருக்கிறது
அதையே தான் அண்ணா நானும் சொல்கிறேன் .. உணர்வது என்பது வேறு , அப்படியே அதன் அர்த்தத்தை எடுத்துக்கொள்வது வேறில்லையா … ஒரு நல்ல கதை என்பது பல பரிமாணங்களைத் தரவேண்டும் தானே …ஏதாவது ஒன்றை போதிப்பதாக இருக்க முடியுமா ???
// நாம் தான் செவிடு பட்ட காதுகளோடு வாழ்ந்துகொண்டிருக்கிறோம்
முற்றிலுமாக ஒப்புக் கொள்கிறேன் .. இன்னமும் நான் நிறைய தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது ஒரு பூ மலரும் சப்தம் அளவு கேட்கக் கூட …
LikeLike
😉 இத நா ஏற்கனவே படிச்சுருக்கேன் இல்ல?? அம்மா வோட சரியா? இத படிச்சா. மச்சினிச்சி இல்லாத வீடு தான் எல்லா பசங்களுக்கும் கரெக்ட் நு தோன்றது 😉
ஆனாலும் கடவுள இந்த அளவுக்கு கிண்டல் பண்ணினது கண்டிக்க தக்கது (கடவுள் சார்பில் நான் 🙂 )
கண்டிப்பா உனக்கு நரகம் தான் 😉 இதையும் கடவுள் தான் சொல்கிறார் நான் இல்ல
;-). நீ பெருமாள் ல கிண்டல் பண்ணி எழுதினத ஒரு தொகுப்பா வெளியிட்ட எல்லா நாத்திகம் பேசறவங்களுக்கு விருந்து சாப்பிட்ட மாதிரி இருக்கும் 😉
LikeLike
கதை வாசிப்பதில் நான் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருப்பது புரிகிறது 🙂
LikeLike
சூப்பரு
LikeLike
தலைவா நீங்களா ?? வர வேணும் வரவேணும் .. 🙂
LikeLike
”இன்னமும் நாம் நிறைய தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது ஒரு பூ மலரும் சப்தம் அளவு கேட்கக் கூட …”
”உண்மைதான் நிறைய தூரம் பயணிக்க வேண்டும்”.
” கண்டிபாக”
LikeLike
has the story ended….?!!
LikeLike
Superuu..
hmm adhu enna pa perumal kadhai.. adhaiyum podu.. padikalam 😀
LikeLike
@ ரேவதி & தாரிணி ,
அதிகாலை ஐந்தரை மணிக்கு மீண்டும் கடவுள் வந்திருந்தார் – coming soon 🙂
LikeLike
comedy ah erukku..
LikeLike
Happa .. nee oru aalaavathu oththukittiye ..
LikeLike