Tags

, , , ,

  

குஜய் TV நேயர்களுக்கு டோபிநாத்த்தின் வணக்கங்கள் .. Welcome to the show ,மாசிலாமணி- The Team Strikes Back Again …  சொல்லுங்க nagul .. Ho do u feel ??

 

அய்யே .. மாமே .. நீ இன்னும் அந்த award function hang over ல இருந்து வெளிய வரவே இல்லியா .. எல்லாருகிட்டயும் அத்தையே தான் கேப்பியா .. தள்ளு தள்ளு இந்த படத்துக்கு நானே போதும் ..

 

வணக்கம் பாஸ் .. நான் தான் ..

 

எனக்கும் மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது .. ரெண்டு வாரத்துக்கு முன்னாடி தோரணை .. மூணு நாளுக்கு முன்னாடி முத்திரை .. நேத்து மாசிலாமணி .. திருந்தவே மாட்டேனா நான் ..

 

காதலில் விழுந்தேன் பார்த்த அப்போவே உசாராயிருந்திருக்கணும் .. எல்லாரும் படம் மொக்க மொக்கன்னு சொல்றானுங்களே .. அப்படி என்ன தான் மொக்கையா இருக்கு பாக்கலாமேன்னு போயிட்டேன் ..

 

அதே மாதிரி ஒரு சாயங்காலம் .. அதே தியாகராஜா தியேட்டர் .. அதே மாதிரி மழை கூட விழுந்தது .. நானும் , ராம் ன்னு ஒரு அப்பாவியும் ஆப்பீஸ்ல இருந்து வீட்டுக்கு திரும்பும் போது . டைடல் பார்க் சிக்னல் ல மனசு மாறி தியேட்டர் பக்கம் ஒதுங்கிட்டோம் .. உள்ள போகும் போதே நாக்க மூக்க style ல ஒரு பாட்டுக்கு அதே செட்ல நகுல் ஆடிட்டு இருந்தார் .. அப்போவே படம் எப்படி இருக்கும் ன்னு புரிஞ்சு போச்சு … 

 

“சீக்கிரம் கிளம்புங்கன்னு சொன்னேன் .. பாருங்க இப்போ படம் ஆரம்பிச்சுருச்சு .. எவ்ளோ நேரம் போச்சோ .. பக்கத்துல இருக்கறவன் கிட்ட கேளுங்க எவ்ளோ நேரம் ஆச்சுன்னு “ என்றான் ராம் ..

 

“ இப்போ தாம்பா பத்து நிமிஷம் ஆச்சு .. “

 

“ டேய் பத்து நிமிஷம் ஆச்சாண்டா .. “

 

“ சரி அப்டியே ஹீரோயின் இன்ட்ரோ வந்திருச்சான்னு கேளுங்க .. “

 

“ @!%^#%^$%$ “

 

சும்மா சொல்லக் கூடாதுங்க .. போன படத்துல பொணம்  மாதிரி வாழ்ந்திருந்த சுனைனா , இந்தப் படத்தில மார்ச்சுவரில இருந்து எழுந்து வந்தா மாதிரி அவ்ளோ fresh ஆ இருக்காங்க … என்னம்மா மூஞ்சில அபிநயம் புடிக்கறாங்க .. படத்துல அவங்க பரதம் கத்துகறாங்கலாமாம் .. என்ன கொடுமை சார் இது ???

 

நகுல் சொல்லவே வேணாம் .. “அவேலே பக்கிம் போத்தேல்லாம்ம் மன்சிக்குள்ள பட்டம்பூச் பறிக்கிற மாறி இருக்கி ” என்று அவர் அக்கா மாதிரியே பேசி சாவடிக்கிறார்..

 

இது தாங்க கதை .. தமிழ் சினிமா நியதிப்படி பேட்டை ராஜாவாக பட்டாப்பெட்டியுடன் வலம் வரும் மாசிக்கு , கதா நாயகியைப் பார்த்ததும் காதல் வருகிறது .. நாயகன் அநீதியை கண்கொண்டு கொத்தித்து !!! எழுந்து சண்ட கட்டும் போதெல்லாம் கரெக்டாக பார்த்து தொலைக்கும் நாயகிக்கு மாசியை பிடிக்க வில்லை ..

 

நாயகி தான் லூசுன்னா அவங்க டோட்டல் பேமிலியே லூசா இருக்கு .. ஏன் சினிமால மட்டும் இப்படின்னு யோசிச்சா , நெஜத்துல பசங்க தான் லூசா சுத்திட்டு இருக்காங்க .. படத்துலயாவது ஒரு change இருக்கட்டுமேன்னு தான் பொண்ணுங்கள லூசா காட்டுறாங்க போல .. சும்மாவா சொன்னாங்க எங்க ஏரியா ஆட்டோ பின்னாடி .. சீரும் ‘பம்பை’ நம்பு .. சிரிக்கும் பொன்னை நம்பாதேன்னு ..

 

 

கதாநாயகிய கவுக்கணும் னா அவங்க லூசு குடும்பத்தை கவுக்கணும் ன்னு தமிழ் சினிமாவின் புராதன ரூட்டை பாலோ செய்து , மணி என்ற பெயரில் ஒரு நாய் குட்டியை வைத்து கவுக்கிறார் .. நாயகி இல்லாத நேரம் பார்த்து வீட்டுக்கு போய் போய் , அதை இதை சப்பையாக செய்து கவுத்தும் விடுகிறார் .. திடீரென ஒரு நாள் நாயகியிடம் மாட்டி உண்மை தெரியவரும் இடத்தில் , நாயகி வழக்கம் போல நாயகனை அறைவார் என்று எதிர் பார்த்தால் அங்கு தான் வருகிறது ஒரு டிவிஸ்ட் ..

ஸப்பாஅ .. இப்போவே கண்ணைக் கட்டுதே … 

 

நாயகியும் சில பல பேரின் best perfoemance ஆள் மாசி வேறு மணி வேறு என்று நம்பித் தொலைத்து உள்ளுக்குள்ளேயே காதலிக்கவும் துவங்குகிறார் ..

 

நல்ல படியாக குத்து பாட்டு எல்லாம் ஆடி முடிக்கும் வேளையில் தான் வந்து தொலைக்கிறார் வில்லன் .. போலீஸ் மாமா வாம் .. அப்டி இல்லீங்க .. அவரு போலீசு .. சுனைனாவுக்கு மாமா .. அம்மாடி நம்மளையே மாட்டி விட்ட்ருவானுங்க போல .. 

 

மாசி வேறு மணி வேறு என நிரூபிக்க சில டுபுக்குத் தனமான வேலையெல்லாம் செய்தது வழக்கம் போல அடிவாங்குகிறார் அவர் ..

 

கிளைமாக்ஸ் சென்டிமென்ட்டுக்கு ஒரு சின்ன குழந்தையின் நெஞ்சில் ஓட்டை வேறு போட்டு வைத்திருக்கிறார்கள் ..  போன படத்தில் சுனைனா பிணமாக வந்து உயிரை வாங்கினார் என்றால் இந்தப் படத்தில் நகுல் கடைசி காட்சியில் பிணமாக வந்து உயிரை வாங்குகிறார் ..

 

வழக்கம் போல கடைசி காட்சியில் , மாசியும் மணியும் ஒன்று என்ற உண்மை நாயகிக்கு தெரிய வர , இடைவேளையாக இருந்தால் சண்டை போட்டிருக்கலாம் .. கிளைமாக்ஸ் வந்து விட்டதே என வருந்தி , “ஒரு சப்ப பிகருக்காக ஒருத்தர் பொய் சொல்லலாம் , நண்பர்கள் பொய் சொல்லலாம் .. ஒரு ஊரே சொல்லிருக்கே  ” என திராபையாக வசனம் பேசி நான் கட்டிகிட்டா மாசிலா மணி மாமாவைத் தான் என்று சொல்லி படத்தை முடித்து வைத்து நெஞ்சில் பாலை வார்க்கிறார் ..

 

படத்திற்கு போகும் இருந்தது லேசாக வயிறு வலி இருந்தது .. படம் முடியும் போது அதுவே மறந்து போகும் அளவு தலை வலி வந்துவிட்டது …

 

 ” தம்பி 

 

“என்ன பெருசு .. தோரணை படத்துல இருந்து நேரா வந்திட்டியா ?? இன்ன மாட்டரு?? “ 

 

“நான் ஒரே ஒரு பன்ச் சொல்லிகட்டுமா .. ”

 

“ஏற்கனவே படம் பார்த்து பஞ்சர் ஆகிப் போயிருக்கேன் .. பஞ்சா ?? சொல்லித் தொலை “

 

” அப்பத்தா வாய்ன்னா பொக்கையா இருக்கறதும் சன் பிக்சர்ஸ் படம்ன்னா மொக்கையா இருக்கறதும் சகஜம் தானப்பா ”

 

தாங்க்ஸ் பா ..

 

——————————————————————————–