தொலைந்து போன
ஜன்னல் தேடி
காற்று வீசிப் போகுமோ …
கலைந்து போன
கனவின் மீதி
கண்கள் மீண்டும் கேட்குமோ …
கரைந்து போன
மெழுகின் வாசம்
திரிகள் கருகித் தேடுமோ ..
பறந்து வந்த
திசையின் திசையை
மறந்து பறவை தவிக்குமோ …
இரவல் வெளிச்சம்
இழந்த நிலவு
மின்மினிகளைக் கேட்டு அனுப்புமோ …
எங்கே எந்தன்
காதல் நெஞ்சம்
இனியும் தேட மாட்டேன்
நானும் ..
பார்த்து வந்த
இடங்கள் எல்லாம்
காத்திருந்தன
கவிதைகள் மட்டும்…
—————————————————-
உடைந்த வார்த்தைகளை
உதிரம் கொண்டு ஒட்ட வைத்து
உனக்கு மாலை தொடுத்திருந்தேன்
கவிதை என்கிறாய்..
————————————–
எங்கோ விழும்
மின்னல்கள் …
இடி மட்டும்
என்னுள் …
கடலோரம் நிற்பதாய்
குறி சொல்லிச் சென்றன
சில
குளிர் தேசப் பறவைகள் …
எனக்கும் சிறகுகள்
உண்டு
உடைந்து போன இறகுகள்
கொண்டு…
உன் நிழல் போதும்
நிஜமா கேட்கிறேன் ?
பழகிய நாட்கள் கூட
மறந்திருக்காது …
உருகிய உன்னால்
எப்படி முடிந்தது
உடைத்துக்கொண்டு போக …
சில கவிதைகள்
இப்படியே முடிகின்றன
முடிவு தெரியாத
என் போல …
—————————————————
//உடைந்த வார்த்தைகளை
உதிரம் கொண்டு ஒட்ட வைத்து
உனக்கு மாலை தொடுத்திருந்தேன்
கவிதை என்கிறாய்..//
//கடலோரம் நிற்பதாய்
குறி சொல்லிச் சென்றன
சில
குளிர் தேசப் பறவைகள்//
நல்லாருக்கு.
-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா
LikeLike
மச்சான் ரிஜோ … மீண்டும் இளவரசன் ….
//உருகிய உன்னால்
எப்படி முடிந்தது
உடைத்துக்கொண்டு போக …//
இந்த வரிகள் போதும் உன் ஆளுமையை உணர்த்திட …
இனி உண்மைக்கு வருவோம்..
உன் கவிதைகளின் முடிவு எப்போதும் இதயத்தில் ஒரு தாகத்தை ஏற்படுத்தும் … உன் கவிதைகளின் நாயகனாக வாழ்ந்து பார்க்க தோன்றும். ஆனால் இந்த கவிதைல் அதை என்னால் உணர முடியவில்லை …
என்னடா எவன் எப்போதும் திட்டுறான்னு நினைக்காதே …. காய்த்த மரம் மட்டுமே கல் அடி படும் …
வாழ்த்துக்கள்
இளவரசன்
LikeLike
நன்றி பிரவின்ஸ்கா அண்ணா 🙂
ப்ரியமுடன் ,
ரெஜோ
LikeLike
திட்றதா ?? இதுக்குப் பேர் தான் அக்கறை .. அதுக்காக காய்ச்ச மரம் எல்லாம் ஓவர் மாம்ஸ் ..மொளச்சு மூணு எலை விடலை வசனம் தான் இங்க செட் ஆகும் 😉
சரி இனி உண்மைக்கு வருவோம் 😉
இந்தக் கவிதைகள் எனக்காக மட்டும் எழுதப் பட்டவைகள் . அதுவும் இப்பொழுதல்ல ஒரு வருடத்திற்கு முன்பு . என்னிடமும் இப்பொழுது கவிதைகள் மட்டுமே இருக்கின்றன . உயிர் எங்கோ ஏழு கடல் ஏழு மலைகள் தாண்டி ஒரு கூண்டுக்கிளி கழுத்து மாலையில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது . இன்னமும் தேடிக் கொண்டு தான் இருக்கிறேன் .
வாழ்த்துகளுக்கு நன்றி இளா 🙂
LikeLike
எல்லாம் முடிந்தாலும் இப்படி எழுதி தீர்பதை தவிர வேறு ஆறுதல் இல்லை தோழா நானும் அப்படியே எனக்கும் சிறகுகள்
உண்டு
உடைந்து போன இறகுகள்
கொண்டு…
உன் நிழல் போதும்
நிஜமா கேட்கிறேன் ?சில கவிதைகள்
இப்படியே முடிகின்றன
முடிவு தெரியாத
என் போல …
அருமையான வார்த்தைகள் படித்து முடித்தாலும் சுற்றியே வருகின்றன அவளை போல் உங்கள் கவிதையும்
LikeLike
// சில கவிதைகள்
இப்படியே முடிகின்றன
முடிவு தெரியாத
என் போல … //
நல்ல முடிவு
LikeLike
தோழருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை
LikeLike
நன்றி குகன் 🙂
LikeLike
உடைந்த வார்த்தைகளை
உதிரம் கொண்டு ஒட்ட வைத்து
உனக்கு மாலை தொடுத்திருந்தேன்
கவிதை என்கிறாய்..
itha lines enaku rompa pidichurukku 😉 nice one 😉
LikeLike
Nandri sat 🙂
LikeLike
பிரவின்ஸ்காவையும் அண்ணா ஆக்கிட்டியா நீ? இருந்தாலும் பரவாயில்ல. என்னை விட அவரு பெரியவருதான் 🙂
@பிரவின்ஸ்கா,
ரொம்ப நாளா யோசிச்சுகிட்டு இருந்தேன். இன்னைக்கு போட்டு உடைச்சிட்டேன். ஆனாலும் இலக்கியக்கூடல் முதல் பகுதில நான் ரொம்ப தாங்க ஏமாந்துட்டேன். எவ்வளோ பெரிய பல்பு தெரியுமா அது?
-ப்ரியமுடன்
சேரல்
LikeLike
// பிரவின்ஸ்காவையும் அண்ணா ஆக்கிட்டியா நீ? இருந்தாலும் பரவாயில்ல. என்னை விட அவரு பெரியவருதான் 🙂 //
அண்ணா இந்த சாக்குல உங்க வயச குறைச்சுக்கப் பாக்கறீங்களே ! 😉
LikeLike
nice da seeni
LikeLike
🙂 Thanks Muruga
LikeLike