Tags
“ஒரு ஊரில் ஒரு தேவதை இருந்தாளாம்”
தலையணை தினமும்
உன்னைப் பற்றிக் கதை சொல்வதாலேயே
கண் சாய்க்கிறேன்.
——————————————————–
நான் வாங்கும் எல்லாத் தூரிகைகளும்
உன் பெயர் மட்டுமெழுதியே
இறந்து போக முடிவு செய்கின்றன…
——————————————————–
உன் மொத்த அழகையும்
எழுத முயன்று
தோற்ற கவிதைகளே
என்னிடமுள்ளவைகள்..
—————————————————–
கண்மூடிக் கேட்கையில்
இசையாய் வந்திறங்குகிறாய்
இமைகளில்…
————————————————–
இரவு சட்டென்று கண்விழிக்கையில்
மின்னலென தோன்றி மறைந்த கவிதையை
காலை எழுந்ததும் எழுத அமர்கையில்
கவிதை மறந்துபோய்
காகிதத்தில் நீயே வந்தமர்கிறாய்
திருப்தியாய் எழுந்து செல்கிறேன்
நான்.
—————————————————–
Please visit Here.
http://pravinska.blogspot.com/2009/07/blog-post_23.html
There is a small gift for you.
– Piriyamudan,
pravinska
LikeLike
//“ஒரு ஊரில் ஒரு தேவதை இருந்தாலாம்”
தலையணை தினமும்
உன்னைப் பற்றிக் கதை சொல்வதாலேயே
கண் சாய்க்கிறேன். ///
இந்த வரிகள் எனக்கு ரொம்ம்ம்ப பிடிச்சிருக்கு ……….
//இருந்தாலாம்//
இந்த வார்த்தைல இருக்க வேண்டிய ளா பள்ளிக்கூடத்துக்கு போயிடுச்சா 🙂
LikeLike
//இருந்தாலாம்//
இந்த வார்த்தைல இருக்க வேண்டிய ளா பள்ளிக்கூடத்துக்கு போயிடுச்சா 🙂
சுட்டிக் காட்டியதற்கு நன்றி ரேவதி . இன்னமும் என் கவனக் குறைவும் அஜாக்ரதையும் என்னை விட்டுப் போகவில்லை . நான் தான் ஒழுங்காகப் படிக்கவில்லை . அதனால் தான் அதையே பள்ளிக்கு அனுப்பி விட்டேன் .
LikeLike
//இன்னமும் என் கவனக் குறைவும் அஜாக்ரதையும் என்னை விட்டுப் போகவில்லை . நான் தான் ஒழுங்காகப் படிக்கவில்லை//
எதுக்கு இவ்ளோ feelingsss.. எழுத்துப் பிழைகள் நமக்குள் இன்னும்
இருக்கும் பால்யத்தின் அடையாளம் தானே …….
LikeLike
என்னைப் பொறுத்த வரை அது என் பொறுப்பில்லா தனத்தின் அடையாளம் .
// பால்யத்தின் அடையாளம் தானே ……. //
rittttu 🙂
LikeLike
மனதை தாலாட்டும் வரிகள் தோழர் அதுவும்
தலையணை தினமும்
உன்னைப் பற்றிக் கதை சொல்வதாலேயே
கண் சாய்க்கிறேன்.
படித்து முடித்தும் இரவெல்லாம் அசை போட்டேன் நினைவுகளை மறுபடியும் பழைய நாட்களை நினைக்க வைத்து வரிகள் நன்றி தோழர்
LikeLike
தோழரே , என் வரிகள் உங்களைக் காயப்படுத்துகிறதோ என அச்சமாக உள்ளது ;-(
அது என்னவாக இருந்தாலும் சரி தாங்கள் அதிலிருந்து மீண்டு வர பிரார்த்திக்கிறேன் ..
LikeLike
ஒரு ஊரில் ஒரு தேவதை இருந்தாளாம்”
தலையணை தினமும்
உன்னைப் பற்றிக் கதை சொல்வதாலேயே
கண் சாய்க்கிறேன்.
—-Sariyana varigal nga..chance eh illa..romba pididhuruku…nalla unarndhu eludhi irukinga…Vazhthukkal!!!!
LikeLike
Thanks Girija 🙂 Keep reading and dont forget to comment ..
@Hari , Machi Nee romba nallavan da ..
LikeLike