Tags

 

 

ஒருவேளை வெறும் சம்பிரதாயமாக  போய்விடுமோ என எண்ணி தான் இரண்டு நாட்களாக இதைப் பதிவிடாமல் இருந்தேன் . இருந்தும் மனதில் இருப்பதைச் சொல்லித் தானே ஆக  வேண்டும் .

 

உயிரோடை முடிவுகள் வெளியாகி இரண்டு நாட்கள் ஆகின்றன . வெகு நாட்கள் கழித்து வெற்றி தோல்வி பற்றி யோசிக்க வைத்த ஒன்று இப்போட்டி .

 

முதலில் நான் நன்றி சொல்ல வேண்டியது வடகரை வேலனுக்கும் , வெயிலானுக்கும் தான் . எனது தளத்தினை எல்லாருக்கும் அறிமுகப் படுத்தி , அவ்வப்பொழுது தங்கள் கருத்துகளைத் தெரிவித்து , தன்னம்பிக்கையுடன் போட்டியில் பங்குபெறத் தூண்டியவர்கள் அவர்கள் தான் . உங்களுக்கு என்றுமே நான் கடமைப் பட்டிருக்கிறேன் .

 

 

சேரல் .  எனது பிரியத்திற்குரிய அண்ணா . கல்லூரியில் நாங்கள் எல்லாம் அ  ன்னா ஆவன்னா எழுதிக் கொண்டிருக்கையில் , மரபை மீறிய கவிதைகள் பற்றி அறிமுகம் செய்து கொண்டிருந்தவர் . சேரல் பற்றி சொல்லி விட்டு ப்ரவின்ஸ்கா பற்றி சொல்லாவிட்டால் எப்படி 🙂 இவர்கள் இருவரும் எனது தளத்தைப் படிக்கிறார்கள் என்பதே நான் வானில் பறக்கப் போதுமானது. ஏதாவது பின்னூட்டம் வந்தால் சொல்லவும் வேண்டுமா …

 

யாரையாவது  பார்த்து  என்னைப் போலவே பேசுகிறானே , யோசிக்கிறான் என்று தோன்றியதுண்டா ? அப்படி எனக்குத் தோன்றிய அன்பர் தான் சத்யமணி . இன்னும் வலைத்தளம் ஆரம்பிக்கவில்லை என்றாலும் இவர் அழகான வார்த்தைகளுக்குச் சொந்தக்காரர் என்று என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும் . வாழ்த்துகள் தோழர் 🙂

 

எனது கவிதைகளை ஏதாவது ஒன்று உருப்படி என்பதை அனுஜன்யாவும் , கே.ரவிஷங்கரும் நன்று என்று ஒரு வார்த்தை சொன்னாலே வகைப் படுத்திக் கொள்வேன் .:-)

 

மச்சான் ரிஜோ என்று செல்லமாக குட்டு வைக்கும் இளவரசன் , சார் சும்மா கவிதைன்னு இப்படி எல்லாம் எழுதக் கூடாது என்று கேள்விகளாகக் கேட்கும் அப்பாஸ் , நன்றாக இருக்கிறது என்பது தவிர வேறெதுவும் இதுவரை சொல்லாத ரேவதி எல்லாருமே என் சக பயணிகள் .

 

எல்லாவற்றுக்கும் மேல் எப்பொழுதும் என்ன எழுதினாலும் முதலில் படித்து உள்ளதை உள்ளபடிச் சொல்பவர்கள்  என் பிரியத்திற்குரிய நண்பன் பாலாவும் , பிரிய தங்கை சத்யாவும் . அவர்களுக்கு நன்றிகள் எல்லாம் கிடையாது , எப்பொழுதும் என் எழுத்துகளை முதலில் படிக்கும் தண்டனை மட்டுமே .

 

எல்லாவற்றுக்கும் மேலாக இத்தனைக்கும் காரணமான உயிரோடை  லாவண்யா அவர்களுக்கும் , போட்டி நடுவர்களுக்கும் நன்றிகளும் , அவர்களின் இந்த சீரிய முயற்சிகளுக்கு வாழ்த்துகளும் :-).

 

போட்டியில் வெற்றி பெற்ற , மற்றும் கலந்து கொண்ட தோழர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் 🙂 

 

 

மேலும் எப்பொழுதும் தங்கள் கருத்துகளை தெரிவிக்கும் நண்பர்களுக்கும் , பின்னூட்டத்தில் வாழ்த்திய நண்பர்கள் அத்தனை பேருக்கும் நன்றிகளும் அன்புகளும் 🙂 

 

ப்ரியமுடன் ,

ரெஜோ