Tags
சில விஷயங்கள் அமையப் பெற்றதற்காக சில சமயங்களில் மட்டுமே கர்வங் கொள்ள முடியும் . அது போன்ற ஒரு தருணம் தான் இதுவும் . சில காலங்கள் பார்த்துப் பார்த்து ரசித்து விட்டு , முதல் நாள் வகுப்பில் நுழையும் ஒரு குழந்தையின் தயக்கத்துடனும் , காதலைச் சொல்லப் போகும் தவிப்புடனும் சில கவிதைகளுடன் நேற்று தான் பதிவுலகத்திற்குள் நுழைந்தது போல் இருக்கிறது . மழையில்லாத ஒரு மாலை நேரத்து மின்னல் போல் சட்டென்று கடந்து போய்விட்டது ஒரு வருடம் . எத்தனை உறவுகள் , எத்தனை பரிவுகள் , எத்தனை உரிமையான செல்லக் குட்டுகள் …
உங்கள் அத்தனை அன்புக்கும் மௌனங்கள் மட்டுமே பதிலாய் என்னிடம் .. இந்த வாரம் மேகத்தில் மிதப்பதற்கு என எனக்கு எழுதி வைக்கப் பட்டிருக்கிறது போலும் . திங்களன்று உயிரோடை முடிவுகள் .. நேற்று சுவாரசிய தளத்திற்கான தேர்வு .. அதுவும் நான் வியந்து உள்வாங்கும் கவிதைகளின் சொந்தக்காரர் பிரவின்ஸ்காவிடமிருந்து ..
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி அண்ணா .. ! உங்கள் அறிமுகத்தை நியாப்படுத்த முயன்ற வரை முயற்சி செய்கிறேன் .. 🙂
ஏனென்று தெரியவில்லை (அட நெஜமா பா ! ) என் கவிதைகள் காதலைத் தழுவிக்கொண்டோ இல்லை அதன் நிழலின் பின் ஒளிந்து கொண்டோ தான் எட்டிப்பார்த்திருக்கின்றன . இதுவரையிலும்….. அவள் சில அழகிய குறிப்புகளும் , கனவில் வருபவளிலும் கொஞ்சம் அதிகமாகிவிட்டதோ ! சேரல் சொன்னது போல் அழகான விடுமுறை தரலாமோ காதல் கவிதைகளுக்கு ? தரலாம் 🙂
எவ்வளவு எழுதியும் தீராத காதலே கொஞ்ச நாள் மட்டும் என்னுள்ளேயே உறைந்து கிட , ஆரம்ப நாட்களைப் போல ….
பரிட்சார்த்தமான சில கதை முயற்சிகளையும் , காதலல்லாத கவிதைகளையும் தர முயற்சி செய்கிறேன் . உங்கள் அன்பும் , சில செல்லக் கண்டிப்புகளும் எப்பொழுதும் என்னுடன் என்ற நம்பிக்கையுடன் ..
நன்றி பிரவின்ஸ்கா !
நன்றி நண்பர்களே !
ப்ரியமுடன் ,
ரெஜோ
பின்குறிப்பு :
இந்த விருதை இன்னும் ஆறு பேருக்குத் தர வேண்டும் . கிட்டத் தட்ட என் பிரியமானவர்கள் விரும்பும் தளங்கள், அனைவரும் அனைத்தும் பரிந்துரை செய்யப் பட்டுவிட்டதால் புதியதாக தளம் ஆரம்பித்திருக்கும் , ஆரம்பிக்கப் போகும் அத்தனை நண்பர்களுக்கும் வாழ்த்துகளோடு முடித்துக் கொள்கிறேன் .
புதிய முயற்சிகளுக்கும் ,விருதுக்கும் வாழ்ததுக்கள் சீனி 🙂
LikeLike
//எவ்வளவு எழுதியும் தீராத காதலே கொஞ்ச நாள் மட்டும் என்னுள்ளேயே உறைந்து கிட ..//
நாட்டாமை, தீர்ப்ப மாத்தி சொல்லுங்க ………….
குறைந்த பட்சம் ஒரு குறுங்கவிதையாவது ………சொல்லாட்டி காதல் பாவமில்லயா?
LikeLike
வாழ்த்துகளுக்கு நன்றி ரேவதி 🙂
கொஞ்ச நாள் தானே .. வார்த்தை வரக் காத்திருக்கும் கவிஞன் இல்லையா !!!
LikeLike
வாழ்த்துகள் தம்பி 🙂
//வார்த்தை வரக் காத்திருக்கும் கவிஞன் இல்லையா !!!// 🙂
பாலா தன் கணக்கை என் வலைப்பூவில் துவக்கி விட்டான். நீ எப்போது?
-ப்ரியமுடன்
சேரல்
LikeLike
வாழ்த்துக்கள் நண்பா. பிரவின்ஸ்காவிடமிருந்து விருதா!! சூப்பர்
LikeLike
நன்றி நண்பா 🙂
LikeLike
டேய் ரிஜோ நீ என்ன பெருசா சாதிசுட்ட காதல் கவிதைல .. உடனே நிறுத்த அப்படி என்ன அவசரம்… உன்னோட எழுத்துக்கள்ல ஒரு சோகம் இருக்கும் … சோனியா அகர்வால் முகம் மாதிரி …. அது தான் மீண்டும் மீண்டும் வாசிக்க தோன்றும் … நிறுத்திவிடாதே …..
// வார்த்தை வரக் காத்திருக்கும் கவிஞன் இல்லையா // அடுத்த வரி என்னவென்று தெரியும் தானே ….?
LikeLike
சாதிக்க எல்லாம் இல்ல மாம்ஸ் … படிக்கறவங்களுக்கு சலிச்சிடக் கூடாதில்ல … 😉
சோகம் … சோனியா அகர்வால் .. ஆஹா என்ன அருமையான உவமை 🙂
// // வார்த்தை வரக் காத்திருக்கும் கவிஞன் இல்லையா // அடுத்த வரி என்னவென்று தெரியும் தானே ….? //
காத்திருந்தால் காதல் இன்னும் நீளுமில்லையா … காத்திருப்பதில் தவறா இளா ??
LikeLike