எனக்கிருக்கும் எண்பது வேலைகளில்
எண்பத்தி ஒன்றவதாகத்
தேடிகொண்டிருக்கிறேன்
ஒரு பிச்சைக்காரனை …
—————————
பரவாயில்லை அது
பிச்சைக்காரி என்ற போதிலும் …
—————————
தலைகவசத்தை விட
தர்மமே தலை காக்குமாம் …
வாகனம் வாங்கும் போது
கண்டத்தையும் வாங்கி வந்திருக்கிறேனாம் …
—————————–
அதனால் …
என் இப்போதைய அவசரத் தேவை
தினமும் ஒரு பிச்சைப்பாத்திரம் …
ஒரே பிச்சைப்பாத்திரம்.
விளம்பரமா கொடுக்கமுடியும்
தினசரிகளில் இதற்காக ..
கடைசியில் கண்டும் பிடித்து விட்டேன் …
—————————-
ஏன் என்று தெரியவில்லை
எனக்கவனைப் பிடித்தது ….?
ஒருவேளை
எனது அலுவலகத்தின்
அருகிலேயே இருக்கிறான் அவன்
என்ற என் சோம்பேறித்தனம்
காரணமாக இருக்கலாம் …
தினமும் ஒரு ரூபாய்
அவனுக்கு
தீர்ந்திடும் கண்டம்
எனக்கு ….
——————————————–
முதல் நாள்
அவன் தட்டிலிருந்த
நிறைய சில்லறைகளில்
தொலைந்து போனது
என் ஒற்றை நாணயம் …
இரண்டாம் மூன்றாம் தடவைகளில்
கண்டுகொண்டான் அடையாளம்
என்னை …
நான்காம் நாளில்
புன்னகை பூத்தான் …
ஐந்தாம் நாளில் பார்த்ததுமே
ஐயா என்றான் …
ஆறாம் நாளில்
“நல்ல இருங்க ” ஆசி தந்தான் …
ஏழாம் நாள் விடுமுறை நாள்
தேடிவந்த என்
கடமை உணர்வு கண்டு
கடவுளே என்றான் …
————————————-
முதல்முறை கேட்டபோது
ஏதும் தோன்றவில்லை …
இரண்டாம் மூன்றாம் தடவைகளில்
இனம்புரியா உணர்வொன்று
என்னுள் ஓடக் கண்டேன் …
நான்காம் தடவையில்
நிஜமாகவே நானா
கேள்வி கொண்டேன் …
ஐந்தாம் தடவையில்
ஐயம் வேண்டாம்
பதிலும் கண்டேன் …
ஆறாம் தடவையில்
கர்வம் கொண்டேன் …
ஏழாம் தடவையில்
கடவுளாகிப் போனேன் …
———————————-
– தொடரும்
m.!
LikeLike
🙂
-piriyamudan,
Pravinska
LikeLike
🙂 🙂
LikeLike