நினைவுதிர் காலம்
எரிந்து கொண்டிருக்கின்றன என் இரவுகள் .வெறும் புகையாகி மறைகின்றன பகற்பொழுதுகள். வெகுகாலமாய் என் உதட்டிற்குள் உறைந்து போய் கிடக்கும் முத்தமொன்று எதிர்பாராத ஒரு தருணத்தில் தப்பியோடப் போவதாய் மிரட்டிக் கொண்டிருக்கிறது.
உன் ஸ்பரிசம் பாராமல் நத்தையின் ஓட்டிற்குள் சுருங்கிப்போய் கிடக்கின்றன என் உள்ளங்கை ரேகைகள். உன் நினைவாய் வைத்திருக்கும் தலையணை , உன் கூந்தலச்சுப் பதியாமல் அழுக்கேறி வருகிறது.
வீட்டிலிருக்கும் ஒவ்வொரு கதவிடமும் நீ இன்னொரு கதவின் பின் ஒளிந்திருப்பதாக ஏமாற்றி வருகிறேன். உனக்கென வாங்கிய ஆடைகள் , வெகு நேரம் நீ குளித்துக் கொண்டிருப்பதாய், நான் சொல்லிய பொய்யை நம்பி காற்றிலாடியபடி காத்திருக்கின்றன .
என் சதுரங்கப் பலகையில் ஒரு நிறக் கட்டங்கள் மட்டும் தேய்ந்தழிந்து போய் ஒற்றைவழிப் பாதைகளாகி விட்டிருக்கின்றன. என் ஜன்னலுக்கு வெகு தூரமுள்ள மரமொன்று மீண்டும் அரும்பத் துவங்கியிருக்கிறது பறவைகளின் வினோத சப்தத்துடன் .
வெயிலுக்கும் உனக்கும் என்ன தொடர்பென்று தெரியாமல் கடந்து போய்விட்டிருக்கிறது இந்த கோடையும்.
————————————–
(No Comments)
LikeLike
Ha Ha 🙂
LikeLike
//வெகுகாலமாய் என் உதட்டிற்குள் உறைந்து போய் கிடக்கும் முத்தமொன்று எதிர்பாராத ஒரு தருணத்தில் தப்பியோடப் போவதாய் மிரட்டிக் கொண்டிருக்கிறது. //
Thirumba thirumba vaasittha varikal…
arumaiyaana pathivu 😉
valthukkal
LikeLike
தேவதைகள் வாழ்ந்த வீடென
காற்று சொல்லி போனது
வாசமும் அருகாமையும் அழைத்து வந்தது
நீ உதறிபோன சிரிப்பின் ஒலியை..
அ
ள்ளமுடியாது தெரியும்
எல்லாம் உன் சாயல்
காற்றை சுவாசிக்கையில்
மீன் முள்ளாய் இதயத்தில் சிக்குகிறாய்
சூன்யாமான பிரதேசத்து நிசப்ததில்
காற்றிடம்பேசிகொண்டு இருந்தேன்
உன்னைக் கேட்டு…
நான்கு திசைகளிலும் அவளை பார்த்தாய் பிதற்றியது
நான் பைத்தியக்காரன் என்று
காற்றும் வேண்டாம் அவளும் வேண்டாம்
அறையின் கதவை சாத்துகிறேன்
எப்படியோ நுழைந்தும் படர்ந்தும் விடுகிறது
அவளை போல் காற்றும்… சில கணங்கள் இப்படிதான் தோழா எல்லாம் இருந்தும் வெற்றிடமாய்
LikeLike
//வீட்டிலிருக்கும் ஒவ்வொரு கதவிடமும் நீ இன்னொரு கதவின் பின் ஒளிந்திருப்பதாக ஏமாற்றி வருகிறேன். உனக்கென வாங்கிய ஆடைகள் , வெகு நேரம் நீ குளித்துக் கொண்டிருப்பதாய், நான் சொல்லிய பொய்யை நம்பி காற்றிலாடியபடி காத்திருக்கின்றன ./
சீனி உனக்கு வர்ரதெல்லாம் feelings illa….
beautiful feelings 🙂
LikeLike
நன்றி ஜோ ! 🙂
நன்றி ரேவதி ! ,
வாருங்கள் தோழரே !
LikeLike
good one !
எதுக்கு இவ்ளோ ஃபீலிங்க்ஸ்?
என் இனம் அடா நீ 🙂
LikeLike
🙂
LikeLike