Tags

,

 

இன்னொரு காதல் கதை – 1

சரியாக அன்றிலிருந்து நாற்பத்தி இரண்டு நாட்களில் எங்கள் இருவருக்கும் ஒரு சுபயோக சுபதினத்தில் பெரியவர்களால் திருமணம் நிச்சயமானது. இருவரின் குடும்பத்திலும் எங்கள் இருவரையும் பிடித்துப் போயிருந்தது. நியாமாகப் பார்த்தால் காதலர்கள் எல்லாரும் சார்லஸ் பாபேஜுக்கு தனியாக கோவில் கட்டி இரண்டாவது காதல் தினமாகக் கொண்டாடியிருக்க வேண்டும். என்ன திருமணம் மட்டும் ஆறு மாதங்கள் கழித்து . அதிலும் ஒரு சௌகரியம் இருக்கத்தான் செய்கிறது. இப்பொழுது கொஞ்சம் கூடுதல் சுதந்திரம் .. கூடுதல் உரிமம். ஆறு மாதத்திற்கு ஆசை தீரக் காதலிக்கலாம்.ஓட்டுவது எப்படி. நவம்பர் மாதத்திற்கு நன்றி.

எனக்கு எல்லாமே புதிதாகத் தான் இருக்கிறது . ஹரிணியைப் போல ஒரு பெண் கற்பனையில் இருந்திருந்தாலும், நேரில் சந்திப்பேன் என்று நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. அதுவும் காதலித்து அது திருமணத்தில் வந்து முடியும் என்று .. ம்ம்ஹம்ம்.. எல்லாமே புதிதுதான் ..

சின்னப் பெண் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் திருமண நிச்சயத்திற்குப் பிறகு எவ்வளவு மாறிவிட்டாள். திருமணத்திற்குப் பிறகு என்னென்ன செய்ய வேண்டும் என்ற  திட்டமிடல்கள் . ஒரு சின்ன பிளாட் ..கொஞ்சமே நீல நிறத்தில்… இப்பொழுதைக்கு ஒரு சி.பி.செட் எக்ஸ்ட்ரீம்… இரண்டு மூன்று வருடங்களில் ஸ்விப்ட் ..   . எங்கள் படுக்கை அறையில் கொஞ்சம் வெளிர் ஊதா. படிக்கும் அறை அவளின் புத்தகங்களை வைக்க .. குட்டி ஜிம் எனக்கு ..  ஒரு ஆண் .. ஒரு பெண் ..அவர்கள் படிக்கும் பள்ளி ..  எல்லாவற்றிகும் ஒரு சிறு புன்னகையுடன் சரி என்று சொல்வது எனக்குப் பிடித்திருக்கிறது.

இத்தனை வருடங்களாகப் பேசாத பேச்செல்லாம் மொத்தமாகப் பேசித் தீர்ப்பது போல பேசியிருக்கிறோம். அவளின் கனவுகள் மொத்தமும் அழகானது . சில அபூர்வமானவைகள் கூட. பேசிக்கொண்டே இருக்கும் போதே அவள் முகம் பார்த்துக் கொண்டே சட்டென்று வார்த்தைகள் இல்லாது போவது இப்பொழுதெல்லாம் வழக்கமாகிவிட்டது. கன்னங்கள் இரண்டையும் கைகளில் வைத்துக் கொண்டு , சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா என்று பாடத் தோன்றுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது.

முதல் கட்டமாக சி.பி.செட் வாங்கியாகிவிட்டது. வேளச்சேரியில் பில்டருக்கும் சொல்லியாகிவிட்டது. ஈ.எம்.ஐ இல்லாமல் வாழ்கையை

பைக் வாங்கிவிட்டதால் இப்பொழுதெல்லாம் ‘கேப்’ கிடையாது. நேராக அவளைக் கொண்டு போய் விட்டு விட்டு, பின் என் வீட்டிற்கு. இன்னும் அந்த நாள் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது . அது ஒரு வெள்ளிக் கிழமை. அவள் மயில் நீல நிறத்தில் சேலை அணிந்திருந்தாள். நானும் ஊதா நிறம் . இப்பொழுதெல்லாம் என்றைக்கு என்ன நிற உடை அணியவேண்டும் என்பதைக் கூட அவள் தான் தீர்மானிக்கிறாள். இருவரும் ஒரே நிறத்தில் உடை அணிய வேண்டுமாம்.மாயாஜால் போய்விட்டு வருவதற்கு இரவு நேரமாகிவிட்டது . சோழிங்கநல்லூர் தாண்டுவதற்குள்ளாகவே மழை மொத்தமாக நனைத்துவிட்டது.

அவளது அப்பார்ட்மெண்ட்டுக்கு வந்து சேர்ந்த பொழுது மணி ஒன்று .

“உள்ள வாயேன் .. ரொம்ப நனஞ்சிட்ட .. ”  அவள் கண்களைத் தவிர்த்தேன்.

“இல்ல ஹரிணி .. ரொம்ப லேட் ஆகிடுச்சு .. நாம நாளைக்குப் பார்க்கலாம் .. காலைல பத்து மணிக்காவது எந்திச்சிருவேல ..”  நனைந்திருந்த அவளது சேலையில் இருந்து நீர் சொட்டிக் கொண்டிருந்தது.

“அட சும்மா உள்ள வாங்க சார் .. என் ரூமை பார்த்ததில்லேலே நீ ..  ” மெல்ல படியேறி முதல் தளத்தில் இடது புறம் திரும்பி முதல் பிளாட் . பி 1. நுழைந்ததும் கொஞ்சம் பெரிய ஹால்.  சோபாவில் உட்கார்ந்து கொண்டேன்.

“நல்லா தொவட்டிக்கோ .. ஏதாவது ஆகிடப் போகுது “

துண்டை எடுத்துக் கொடுத்துவிட்டு உள்ளே சென்றாள். மழை என்னை எதுவும் செய்துவிடப் போவதில்லை என்று எனக்கு நன்றாகவே தெரியும். முடிந்த அளவு இங்கிருந்து சீக்கிரம் கிளம்பி விடு என்று மட்டும் மனது மிரட்டிக் கொண்டே இருந்தது. அவளது உள்ளறையில் மஞ்சள் நிற வெளிச்சம் கதவின் கீழ் இடுக்கு வழியாகக் கசிந்து கொண்டிருந்தது. அவளது நிழல் அவ்வபொழுது அதனுடன் வந்து போய்க் கொண்டிருந்தது. மனது தடக் தடக் என்று அடித்துக் கொண்டே இருந்தது. அதை என்ன மாதிரியான உணர்வு என்று சொல்லத் தெரியவில்லை.

சில நீண்ட நிமிடங்கள் கழித்து வெளியே வந்தாள். கொஞ்சம் தாராளமான நைட் கெளன் அணிந்திருந்தாள். தோளில் இரண்டே இரண்டு கயிறு மட்டும் கட்டியிருந்தது.  பட்டாம் பூச்சி போல பரூச் ஒரு தோளில் இருந்தது. இல்லை அது முடிச்சாகக் கூட இருக்கலாம் . கால்கள் இரண்டும் .. எனக்கு லேசாக மூச்சு வாங்கியது.

“என்ன பாக்கற ??”

“இது தான் அந்த பிங்க் கலர் நைட் டிரஸ் ஆ ? “

“இல்ல இது வேற .. என்கிட்டே பிங்க் கலர்ல நெறைய இருக்கு “

இதற்கு மேல் தாங்காது . எழுந்தேன் . “ஓகே .. குட் நைட் .. நான் கெளம்பறேன் “

“என் ஓடற .. தலைய தொவட்டிகவே இல்லியா நீ .. ஜோ அம்மா கிட்ட சொல்லிடுவேன் ..”

“நீ என்ன ஸ்கூல் டீச்சர் பொண்ணா .. அம்மா கிட்ட சொல்லுவேன்னு .. ” கொஞ்சம் அருகே வந்திருந்தாள்.

“நீ சொன்னா கேக்க மாட்ட .. ”  துண்டைக் கையிலெடுத்துக் கொண்டாள். ” பேசாம உட்காரு , நானே தொவட்டி விடறேன் “

அந்த அருகாமை எதோ செய்தது. என் கைகளைக் கட்டிக் கொண்டேன்.

“பெர்ஃபியும் போட்ருக்கியா என்ன ? “

“ஆமா .. டாம் பாய் .. நல்லா இருக்கா ? ” எதுவும் தெரியாத குழந்தை மாதிரி பேச எப்படித் தான் முடிகிறதோ.

“நான் கெளம்பறேன் .. “

“ஏன் இப்படி கால்ல வெண்ணி ஊத்திகிட்டு ஓடற .. தூக்கம் வருதா என்ன ? எனக்கு சுத்தமா இல்ல .. கொஞ்ச நேரம் உட்காரேன் .. பேசிட்டு இருக்கலாம் .. மழை நின்ன அப்பறமா போ ..”

“இல்ல நான் கெளம்பறேனே  “

“அடி தான் வாங்குவ .. கமான் மேன்,  இப்போ உன் பிரச்சனை தான் என்ன .. நீ வந்ததில இருந்தே சரி இல்ல … “

நான் எதுவும் பேசாமல் இருந்தேன். லேசாக காய்ச்சல் வருவது போல் இருந்தது .

“கொஞ்சம் பிவேரிஷ் ஆ ..”

சொல்லி முடிக்கும் முன்பே நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள். “இல்லையே , சில்லுன்னு தான் இருக்கு .. “

“உன் கை சூடா இருக்கு ” .


“நீ என்னமோ இன்னைக்கு சரியில்ல .. ” சிரித்தாள்.
 என்ன பண்ணுச்சாம்.. இப்படியே வந்து மெழுகுவர்த்தியை அணைச்சிடுச்சாம் ..”

“ஆமா .. உண்மைதான் .. கொஞ்சம் பயமா இருக்கு ..” 

“என் பயப்படணும் .. நான் தான் கூட இருக்கேன்ல .. “

என் பயமே அது தான் என்று சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். சொல்ல வில்லை. கொஞ்சம் விளையாடலாம் என்று தோன்றியது .

“ஓகே .. இந்த கதைய  கேள்  ..  வெளிய சோன்னு மழை பெய்யுது ..  ஒரு அழகான வீடு .. கொஞ்சம் தான் வெளிச்சம் இருக்கு .. ஒரு பையனும் பொண்ணும் தனியா … அதுவும் நிச்சயம் ஆனவங்க .. ஒரு பயங்கரமான இடி .. கரண்ட் போயிடுச்சு ..  “

“ஹ்ம்ம் .. அப்பறம் ..” நான் சொல்ல வருவது அவளுக்குப் புரிந்திருக்க வேண்டும் . இந்தப் புன்னகைக்கு என்ன அர்த்தம் என்று தெரியும் எனக்கு .

” கார்த்தி , தனியா இருக்க பயமா இருக்கு .. கரண்ட் வர வரைக்கும் இங்கயே  இரேன்னு சொல்றா “

“ஓ!  அந்த பையன் பேர் கார்த்திக்கா ?? பொண்ணு பேர் என்ன ..  ” இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்துக் கொண்டாள்.

“ஹரிணினு வச்சுக்கலாமா ?? ” அவள் முறைத்ததும் ,  ” சும்மா கதை தான” என்றேன் .

“சரி மேல சொல்லு ” தலையணை ஒன்றை எடுத்து மடியில் வைத்துக் கொண்டாள். எங்கள் புது வீட்டில் தலையணைகளே இருக்கக் கூடாது என்று அவசர தீர்மானத்திற்கு வந்தேன். 

“எங்க விட்டேன் .. கரண்ட் போச்சு .. ரெண்டே ரெண்டே மெழுகு வர்த்தி மட்டும் தான் எரியுது .. எங்கயும் வெளிச்சமே இல்ல .. கொஞ்சம் உன் கைய குடேன் ..”

“எதுக்கு .. நான்  மாட்டேன் ” அவசரமாகக் கைகளைத் தலையணையுடன் கட்டிக் கொண்டாள். தீர்மானத்தை உறுதி செய்தேன்.

“சும்மா ஒரு சப்போர்ட்டுக்குத் தான் ..  சரி வேணாம் .. ” 

“இந்தா .. மேல கதைய சொல்லு ..” முகத்தைச் சுளித்துக் கொண்டே கைகளை நீட்டினாள் . விரல்கள்  சில்லென்று இருந்தன.

“ம்ம்ம் … வெளிய பயங்கரமா காத்து .. அதுக்கு வெளிச்சமே பிடிக்காது ..


“அப்பறம் ?”

 

“” ரூம் முழுக்க டாம் பாய் வாசம் …. கூடவே அந்தப் பொண்ணோட வாசம்  .. அது அந்தப் பையன ஏதோ பண்ணுச்சாம் “

“என்ன பண்ணுச்சாம் ?? “

“பச் .. குறுக்க பேசாத … ஏதோ பண்ணுச்சாம் … உன் கைய கொஞ்சம் குடேன்னு கேட்டானாம் .. அந்த பொண்ணும் இந்தா வச்சுக்கோன்னு
கைய நீட்டுச்சாம் ” அந்த அறை முழுவதும் எதையோ எதிர் பார்த்திருந்த மௌனக் குமிழ் ஒன்று எந்த நேரமும் உடையலாம் என்றிருந்தது .

“அந்த பையன் என்ன பண்ணான்னா … ” அவளின் ரேகைகள் வழியாக விரலை ஓட்டினேன் .”


“போதும் போதும் .. ஆளை விடு .. நான் அதுகெல்லாம் ஆள் இல்ல .. மொதல்ல நீ கெளம்பு .. ரொம்ப கெட்ட பையன்டா நீ ” தலையணையைத் தூக்கி மேலே எறிந்தாள்.
கதை இன்னும் முடியல .. நீ சொன்ன வரைக்குமே போதும் .” முதுகைப் பிடித்துத் தள்ளினாள்.

நான் எழுந்தேன் . “கண்டிப்பா போகனுமா ..

“போடான்னா ..

“மழை நிக்கற வரைக்கும் இருக்கேனே ஹரிணி ”
 
“போறியா இல்ல போலீசைக் கூப்பிடட்டுமா ” நான் சிரித்தேன்.

ஒரு பெரிய இடியுடன் மின்சாரம் தொலைந்து போனது.

——–


எல்லா நாட்களும் ஒரே மாதிரி இருப்பதில்லையே . காதல் மட்டுமே வாழ்கை என்றானால் கொஞ்சம் சலித்துத் தான் போகும் இல்லையா. சலிப்பு என்று சொல்ல முடியுமா .. தெரியவில்லை . திகட்டல் கூட சரியான வார்த்தையாக இருப்பது கடினமே. ஆனால் அவள் என் மேல் பைத்தியமாக இருந்தாள். ஒரு நிமிடம் கூட பிரிய விரும்பாதவளாய் . நான் தகுதியானவன் தானா என்று கூட யோசித்ததுண்டு.

காலையிலிருந்தே அன்று ஹரிணியைப் பார்க்க முடியவில்லை. மதிய உணவு கூட தனியாகத் தான் அவள் செல்ல வேண்டியிருந்தது. யு ஏ டி (User Acceptance Test) க்கு இன்னமும் இரண்டே நாட்கள் தான் இருந்தன. புதிதாக இரண்டு செயல்பாடுகளை , நாங்கள் டெஸ்ட் செய்யும் மென்பொருளில் இணைத்திருந்தார்கள். அதையும் ஒரே நாளில் டெஸ்ட் செய்ய வேண்டும். நான் காலையே வர வேண்டியிருந்தது. ஹரிணிக்கு மிஸ் யு  டூ கூட அனுப்ப முடியாமல் வேலையிலிருந்தேன்.

மதியம் இரண்டு மணிக்கு என் மேலாளரிடம் இருந்து அழைப்பு வந்தது.

“ஹலோ கார்த்திக் , உட்காருங்க ”  அவரது எதிரே இருந்த இருக்கையைக் காட்டினார். உன் லீட் கிட்ட பேச மட்டும் உனக்கு நேரம் இருக்கோ , ஹரிணி நிச்சயம் கேட்கத் தான் போகிறாள். மனதிற்குள் சிரித்துக் கொண்டேன் .

“தேங்க்ஸ் சார் “

“எப்படி போயிட்டு இருக்கு டெஸ்டிங் எல்லாம் ..  நாளைக்கு யு ஏ டி  கொடுத்திடலாம் ல .. ” 

“கண்டிப்பா சார் .. நைட் இருந்து முடிச்சிட்டே போறேன் ” போச்சு . இன்று அவளை வீட்டிலும் கொண்டு போய் விடப் போவதில்லை நான் .

“கொஞ்சம் பேசணுமே .. உங்க H2 ரேட்டிங் பத்தி .. ” அவர் முகம் எனக்கு சரியாகப் படவில்லை .

” ரொம்ப அவசரமா சார் ..? நாளைக்குப் பார்க்கலாமே … “

“இல்ல கார்த்திக் .. இன்னைக்கே நீங்க அப்ரூவ் பண்ணி ஆகணும் .. ”  ஒரு மாதிரியாக எனக்குப் புரிய ஆரம்பித்தது.

“எல்லாருக்குமே தெரியும் நீங்க எவ்ளோ சின்சியர் ன்னு .. ஆனா இந்த ஆறு மாசத்துல உங்க பெர்பார்மன்ஸ் சரி இல்லைன்னு மனாஜ்மெண்ட்  ஃபீல் பண்ணுது .. ”  . மனாஜ்மெண்ட் . எவ்வளவு அழகான போர்வை . அது யார் என்று எல்லாருக்குமே தெரியும்.

ஏதாவது ஒன்றை குறிப்பிட்டுச் சொல்லச் சொன்னேன் .

“போன ரிலீஸ் வீக் எண்ட் சப்போர்ட்க்கு நீங்க வரல  ”  . அன்று தான் ஹரிணியிடம் நான் காதலைச் சொன்ன நாள்.

“சாரி கார்த்திக் ..  நீங்க டீபால்ட்டர் லிஸ்ட் ல இருக்கீங்க .. 2 ரேட்டிங் .. அடுத்த தடவையும் நீங்க …  “

“தெரியும் சார் .. வேலைய விட்டு அனுப்பிடும் …  உங்க மனாஜ்மெண்ட் .. ” என் குரல் உயர்வது எனக்கே தெரிந்தது .

“என் மேல ஏன் சார் கோபப் படறீங்க .. மனாஜ்மெண்ட் முடிவு பண்ணது ..  ” . போங்கடா டேய் .. உங்க மனாஜ்மெண்ட்ட …….  மனதிற்குள் திட்டி விட்டு எனது இருக்கைக்கு வந்தேன்.

எப்படி வேலை ஓடும். மனதிற்குள் எரிந்து கொண்டே இருந்தது . தண்ணீர் கொண்டு வந்து வைக்காத ஆபீஸ் பாயை தேவை இல்லாமல் திட்டினேன்.
ர்ர்ரர்ர்ர்ர்  என்றபடி எனது மேஜை மேல் ஆடியது அலைபேசி .  ஹரிணி.

இவள் வேறு நேரம் கெட்ட நேரத்தில். அழைப்பைத் துண்டித்து விட்டு தூக்கி எறிந்தேன்.

“ப்ளீஸ் அட்டென்ட் .. இம்பார்டன்ட் ” குறுஞ்செய்தி வந்தது.

உன் இம்பார்டன்ட் தெரியாதா ? மிஸ் யு இல்லை லவ் யு .. வேறென்ன சனியன் இருந்து தொலைக்கப் போகிறது. நிமிடத்திற்கு நிமிடம் ரத்தம் சூடாகிக் கொண்டே இருந்தது. அன்றைய செய்தித் தாளை சுக்கலாகக் கிழித்துப் போட்டேன்.

மீண்டும் ஹரிணி . எடுத்துப் பேசினேன்.

“கார்த்திக் “

“என்ன ??”  எதிர்முனை கொஞ்சம் மெளனமாக இருந்தது .

“ஏதாவது பிரச்சனையா என்ன ?? “

“நீ தான் பிரச்சனையை இப்போ கொஞ்சம் ஃபோன வைக்கரியா .. எப்ப பாரு அட்டை மாதிரி ஓட்டிகிட்டு “

எதுவும் பேசாமல் வைத்துவிட்டாள். கொஞ்ச நேரம் வேலையிலேயே சென்றது. மனம் கொஞ்சம் அமைதியாக இருந்தது .


ஹரிணி என்ன செய்வாள். ஏதோ முக்கியம் என்றாளே. ஹரிணியை அழைத்தேன். அணைத்து வைக்கப்பட்டிருப்பதாக பதிவு செய்யப் பட்டிருந்த குரல் சொல்லியது.

கொஞ்ச வேலை மீதம் இருந்தது. முடித்துவிட்டு இரவு உணவிற்கு அவளை வெளியே அழைத்துச் செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

நான் மட்டுமே வேலை செய்து கொண்டிருப்பது போல் இருந்தது. அதுவும் பக்கத்து இருக்கையில் இருவர் கதை பேசியிருக்கையில் எரிச்சல் வருமா வராதா. ஒரு பெரிய தலை பற்றிய பேச்சு அடிபட்டதும், காதை லேசாகக் கொடுத்தேன்.

“பொண்ணு மேல கைய்ய வச்சிருக்கான் பா .. பொண்ணு நேரா எச் ஆர்  கிட்ட போயிருச்சு .. ஆளுக்கு சீட்டு கிழிஞ்சிடுச்சு ..” காற்றைக் கிழித்தான்.


ஹரிணியுடைய லீட் தான் அது . அவளிடம் கேட்டால் யார் அந்தப் பெண் என்று தெரியும். மறுபடியும் முயற்சி செய்தேன். அதே பதில்.

எல்லா வேலையும் முடித்து விட்டு அவளது இருக்கைக்குச் சென்ற பொழுது அவள் இல்லை. ஆனால் என் கேள்விக்கான பதில் இருந்தது.

அந்தப் பெண் ஹரிணி .

 

————

எவ்வளவு பெரிய அவசரக்காரன் நான் . என் ஒரே வார்த்தையில் எனக்கு ஏதோ பிரச்சனை என்று அவளால் உணர முடிந்திருக்கிறது. என்னால்  ஏன் முடியவில்லை. அந்த சமயத்தில் கண்டிப்பாக அவளுடன் இருந்திருக்க வேண்டும் . எவ்வளவு துடித்துப் போயிருப்பாள். நிச்சயம் எனக்கு மன்னிப்பே கிடையாது.

இரவு முழுவதும் அவள் தொலைபேசிக்கு  முயன்று கொண்டே இருந்தேன். ஒரு கட்டத்திற்கு மேல் முடியவில்லை. நேராக அவளது குடியிருப்புக்குச் சென்றேன் . பூட்டியிருந்தது. கொஞ்சம் பயமாக இருந்தது. அவளது தோழிக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன். நல்லவேளை முழித்திருந்தாள். பதில் வந்தது .

” ஹரிணி ஊரில் இருக்கிறாள் . நீ தவறு செய்துவிட்டாய் .”

தகவலுக்கு நன்றி சொன்னேன். ஆமாம் தவறு தான் செய்து விட்டேன். எனக்கு இப்பொழுதே ஹரிணியைப் பார்க்க வேண்டும். அவளை அணைத்துக் கொண்டு மன்னிப்புக் கேட்க வேண்டும் . மணியைப் பார்த்தேன் . மூன்று. இந்நேரத்திற்கு திருச்சிக்கு வண்டி இருக்குமா என்று தெரியவில்லை. மாற்று உடை கூட இல்லை . பையில் கொஞ்சம் பணமும் , கார்டும் இருந்தது. கோயம்பேடிற்கு சென்ற பொழுது மணி நான்கு பத்து.

நாலரைக்கு கிளம்ப ஒரு வண்டி தயாராக இருந்தது. கால் இடித்தது. பரவாயில்லை . எவ்வளவு சீக்கிரம் ஹரிணியிடம் போக முடியுமோ  போக வேண்டும்.  இன்னும் கொஞ்ச நேரம் போகட்டும் . ஹரிணியின் அப்பாவின் தொலைபேசிக்கு அழைக்க முடியும். 

மணி ஆறரை. பொட்டுத் தூக்கமில்லை. ஹரிணி அழுது கொண்டிருப்பது போலவே இருந்தது. ஹரிணியின் அப்பா அலைபேசிக்கு முயற்சித்தேன்.
அழைப்பு சென்றுகொண்டிருந்த போதே என் அலைபேசி அணைந்து போனது. இன்றைய மொத்த நாளும் எனக்கு ஏதோ சொல்ல வருவதைப் போலவும் எனக்கெதிராக எல்லாருமே சதி செய்வதாகவும் தோன்றியது. ஏன்  நானே எனக்கு எதிரியானது போல் தோன்றியது. இல்லையென்றால் என் ஹரிணியிடம் அப்படிப் பேசியிருப்பேனா?  என்னைக் காதலிக்கிறேன் என்று சொன்னாயே , அது நிஜம் தானா னென்று கேட்டால் , எந்த முகத்தை வைத்துக் கொண்டு பதில் சொல்லுவேன். 

தனிமையான பயணங்கள் போன்ற கொடுமையான ஒன்று எதுவும் கிடையாது. கண் எல்லாம் எரிந்தது. வாய் கூட கொஞ்சம் குமட்டியது.


தில்லை நகரில் அவள் வீட்டை அடைந்த போது மணி ஒன்று . பயங்கரமாகப் பசித்தது. ஹரிணியைத் தவிர மனது வேறு எதையும் நினைக்க மறுத்தது. அழைப்பு மணியை அழுத்திவிட்டு காத்திருந்தேன்.

அவள் அப்பா திறந்தார். நலம் விசாரிக்கும் மன நிலையில் நான் இல்லை .

” மாமா ஹரிணியைப் பார்க்கணும் “

” மொதல்ல உள்ள வாங்க மாப்ள .. ”   ஷுவைக் கழற்றி வைத்தேன். அவர் மனைவி ஏதோ புலம்பிக்கொண்டே சமயலறைக்குச் சென்று விட்டார். கொஞ்சம் காதில் விழவும் செய்தது. “இதுக்குத்தான் நான் அப்பவே தலை தலையா அடிச்சிகிட்டேன் … “

“போய் மூஞ்சி கழுவிட்டு வாங்க .. சாப்டலாம் மொதல்ல ..” இந்த ஃபார்மல்  உடையில் , தலை கலைந்து போய், பல் விளக்காமல்  பார்ப்பதற்கு முந்தைய  இரவில் வேலை பறி போன மென்பொருலாளன் போல நான் அவருக்குத் தோன்றியிருக்கக் கூடும் .

“மாமா மொதல்ல ஹரிணியைப் பார்க்கணும் எனக்கு … “

“அவ உள்ள இருக்காப்பா ..  இப்போ எதுவும் பேச வேணாமே அவகிட்ட”


“மாமா ப்ளீஸ் ..”


இதற்கு மேல் உன் இஷ்டம் என்பது போல் மாமாவும் சமையலறைக்குள் சென்றுவிட்டார். நான் வேகமாக ஓடிச் சென்று  அவள் அறைக் கதவைத் தட்டினேன் . 

” ஹரிணி .. கதவத் தொற மொதல்ல .. பேசிக்கலாம் .. ” எந்த பதிலும் இல்லை .

“ஐ அம் சாரி ஹரிணி .. நான் பண்ணது தப்பு தான் .. ப்ளீஸ் நீ கதவத் தொற .. “

உள்ளிருந்து குரல் மட்டும் வந்தது .

” நான் ….  யாரையும் பாக்க விரும்பல .. எனக்கு உன் முகத்த ….. பாக்கவே பிடிக்கல .. அவ்ளோ தான் கார்த்திக் .. எல்லாம் …. முடிஞ்சு போச்சு .. இட்ஸ் ஓவர் .. நீ …. எனக்கு வேணாம் .”

கடைசியாக அவள் என்னிடம் பேசியது அப்பொழுது தான் .

      தொடரும்

—–