Tags

,

 

நீங்க பாத்திருகீங்களா அந்த ஏஞ்சல?”

இந்தக் கதைல வர இளவரசனே நான் தான் ..”

 

ஹை ..! அந்த ஏஞ்சலுக்கு விங்க்ஸ் இருந்ததா ..?”

இல்ல ஆனா அவ நடக்கும் போது துப்பட்டா அழகா காத்துல பறக்கும் ..”

 

மந்திரக்கோல்  ?”

அதுக்கு பதிலா ஒரு அழகான செல் போன் எப்பவுமே அவ கைல இருக்கும் .. “

 

வைட் அண்ட் வைட் டிரஸ் ?”

நான் முதல் தடவ பார்த்தப்போ அவ நீல கலர் சுரிதார் போட்ருந்தா ? “

 

 

இது எதுவுமே இல்லாம எப்படி தேவதைன்னு சொல்றீங்க ?”

நீயே பார்த்திட்டு சொல்லேன் … ? ” பர்சில் இருந்த புகைப்படத்தைக் காட்டினேன்.

 

 

ஹய்யோ .. தேவதை மாதிரி இருக்காங்க …”

சொன்னேன்  

 

 

அவங்க பேர் என்ன?”

வெண்ணிலா”

 

—————————————————————————

                                                                                                          நாளை முதல்