Tags
அக்டோபர் மாதம் என்று நினைக்கிறேன். தொடர்ந்து மூன்று வாரங்களுக்கு night shift வந்து கொண்டிருந்தேன். ஜோவும் பரணியும் பின்பு இந்த கதையின் நாயகனும் கூட … நாயகனின் பெயர் பிரபு என்றே வைத்துக் கொள்வோம். எப்பொழுதுமே வேலை இருக்காது என்றாலும் இரவு இரண்டு மணிக்கு மேல் சத்தியமாக வேலை இருக்காது. பனிரெண்டாவது தளத்தில் எங்களுக்காகவே கடை திறந்து வைத்துக் கொண்டு உட்கார்ந்திருப்பார்கள்.
நன்றாக நினைவிருக்கிறது. அன்று சப்போட்டா ஜூஸ் மட்டுமே இருந்தது. நான்கு பேரும் சிப்பிக்கொண்டே வழக்கம் போல மொக்கை போட்டுக் கொண்டு இருந்தோம். என்ன பேசிக் கொண்டிருந்தோம் என்று நினைவில் இல்லை. திடீரென்று பரணி கேட்டான்.
“நீங்க சொல்லிருக்கணும் பிரபு .. “
“யார் கிட்ட என்ன சொல்லிருக்கணும் … ?”
“அந்த பொண்ணுகிட்ட உங்க மனசில தோன்றத ..”
“ஏன்டா அவன ஏத்தி விடற ?”
“இல்ல ஜோ .. இவன் சொல்லிருக்கணும் .. சொல்லாம சும்மா பீல் பண்ணிட்டு இருக்கறதுல .. Total waste”
“டேய் .. மாட்டேன்னு சொல்லப் போறவகிட்ட எதுக்குடா தேவை இல்லாம சொல்லிட்டு .. அதுவும் இல்லாம I’m Trying to get over her .. போதும் ..”
பரணி ஏதோ தீவிரமாக யோசித்தான்.
“ஓகே .. இப்படி வச்சுக்கலாம் .. உங்க life ல இன்னொரு பொண்ணு வர்றா .. happily நீங்க ரெண்டு பெரும் settled .. உங்களுக்கு ஒரு அறுபது வயசாகுது .. ஒரு வேளை அவ கிட்ட சொல்லிருக்கலாமோன்னு அப்போ தோணினா என்ன பண்ணுவீங்க ? “
கிட்டத் தட்ட எல்லாருக்குமே இந்தக் கேள்வி ஒரு முறையாவது தோன்றியிருக்கும்.
இப்படி ஆரம்பித்தது தான் வெண்ணிலா.
2010 இல் மொத்தமாக பத்து பதிவுகள் கூட இடவில்லை. கதை கவிதை என எது எழுதினாலும் இந்தக் கேள்வி என்னைத் துரத்திக் கொண்டே இருந்தது.
“ஏன் காதலைப் பத்தி மட்டுமே எழுதற ?”
வேறு யார் கேட்டிருந்தாலும் கவலைப் படாமல் எழுதிக் கொண்டே இருந்திருப்பேன். எனக்கே ஒரு நாள் தோன்றிய பொழுது தான் எழுதுவதை நிறுத்தியிருந்தேன்.
காதல் எனக்குப் பிடித்திருக்கிறது. காதலைப் பற்றி எழுத நினைக்கையில் மட்டுமே எனக்கு எழுதப் பிடித்திருக்கிறது. புரிவதற்கு நான் எடுத்துக் கொண்ட காலம் ஒரு வருடம்.
மீண்டும் எழுத முடிவு செய்துவிட்டு பாலாவிடம் சொன்னேன். அவன சிரித்துக் கொண்டே Henry Miller சொன்னதைச் சொன்னான் . “The best way to get over a woman is turn her into literature”
“வெண்ணிலா” “வெண்ணிலா நாட்கள்” இரண்டில் வெண்ணிலாவைத் தேர்வு செய்தது அவனே.
அடுத்தது கார்த்திக். இவன் இல்லாவிட்டால் வெண்ணிலா இந்த வடிவத்திற்கு வந்திருக்குமா என்பது சந்தேகமே. எனது மிகப் பெரிய critic. “டேய் இது இந்த படத்துல வரா மாதிரியே இருக்கு ” என்று தெளிவாக சொல்லிவிடுவான்.
கொடுமை என்னவென்றால் , பரணி , ஜோ , கார்த்திக் மூன்று பேருமே இந்தக் கதையை இன்னும் முழுதாகப் படிக்க வில்லை. பிரபு தனித் தனியாக ஒவ்வொரு episode ஐயும் படித்திருக்கிறானே தவிர , மொத்தமாகப் படித்ததில்லை.
சரியாக நான்கு மாதங்கள். எவ்வளவோ நடந்துவிட்டன. நானா இது என எனக்கே நிறைய முறை தோன்றிய நாட்கள். இதுவும் கடந்து போகும்.
நிறைய பேருக்கு நன்றி சொல்ல வேண்டியிருக்கிறது. பெயர் சொல்லிப் பிரிக்க வேண்டாம் என்று பார்க்கிறேன்.
வில்வா அண்ணா கேட்டுக் கொண்டதன் படி வெண்ணிலாவின் மொத்த பாகங்களையும் இங்கே தொகுத்திருக்கிறேன்.
இதுவரை நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டவர்களுக்கும் , பகிரப் போகிறவர்களுக்கும் நன்றி. 🙂
P.S
வெண்ணிலா 2 ஐ வெகு விரைவில் இல்லாவிட்டாலும் , விரைவில் எதிர் பார்க்கலாம்.
—————————–
Chapter 2: “When I saw you I fell in love, and you smiled because you knew. “ – William Shakespeare
Shoulders narrowed, knees knelt, arms wide stretched…
Eyes wide opened, moist and trying to find her in night sky…
All by blood gravitated to my heart making it heavier….
All I want is just a dagger to my heart…
Even Death Becomes eternal Bliss if she is the dagger to my heart”
LikeLike
நல்ல யோசனை சீனி.
புதுசா உங்க வலை பக்கத்துக்கு வரவங்களுக்கு
திரும்ப படிக்க விருப்ப படுரவங்களுகும்
இது வசதியா இருக்கும். நன்றி
LikeLike
@ Bharani ,
Good one da .. 🙂
@ Joe,
unakkaavathu ivan enna solla varaannu puriyutha ?
LikeLike
@ சதீன்,
As usual, it’s my friend’s idea 🙂
LikeLike
Seeni,
Padichuten da … 3 times .. entire episode … 3 rd time wid flimmy bcground …. oru goutam flim patha effect … bt unaku comment neraya kudukanum nu thonuchu da … type panna pa orey oru vaartha thaan da vanthuchu ,,,..
SOLLI IRUKKANUM ….
LikeLike
@ Joe,
Ippavum enakku enna SOLLANNU theriyala …
LikeLike
Awesome ….
kalakiteenga ponga …
soon expecting ur vennila part2 🙂 🙂
LikeLike
உனது பதிவுகளில் நான் கடைசியாகப் படித்தது ‘பெண்கள் இல்லாத ஊரின் கதை’.
காதலைவிட்டு சீக்கிரம் வெளியே வாப்பா.
LikeLike
அண்ணா இதெல்லாம் அநியாயம் .. பெண்கள் இல்லாத ஊரின் கதைக்கு அப்புறமா அஞ்சு சிறுகதைகள் , ரெண்டு தொடர்கதைகள் எழுதிருக்கேன் .. படிச்சு பார்த்திட்டு நல்ல இல்லன்னு சொல்லுங்க .. ஓகே .. படிக்கவே மாட்டேன்னு அடம பிடிக்கலாமா ?
//காதலைவிட்டு சீக்கிரம் வெளியே வாப்பா.//
🙂
LikeLike
Machi kathaya padichiten da machi .
Nalla yeluthi iruka da .
LikeLike