ஆயிரம் முத்தங்கள் அள்ளிச் சூடியவள் 21 Sunday Mar 2021 Posted by rejovasan in Uncategorized ≈ 1 Comment Tagsகாதல் கவிதைகள், தமிழ் கவிதைகள், tamil kavithai, tamil poem என் தசாப்தக் காத்திருப்பினை ஓரு புன்னகையால் கடந்து சென்றவள் நீ வழி தவறிய கானகத்தில் கடைசி தீக்குச்சியின் நடுங்கும் சுடர் நீ யாக்கையின் விரிசல்களினூடே கசிந்துருக்கும் பனிக்காலத்தின் பசி நீ நெடுந்தூரப் பயணத்தின் சட்டென்று கடந்து போகும் மீட்கொணரமுடியா நினைவிலின்றும் அகலா நட்சத்திரப் பூ மரம் நீ என் இன்னுமொரு அசைவறு மாலையின் வெயில் எரித்துப் படரும் காமத்தின் நா நீ எறும்புகளுக்கும் கொஞ்சமாய் மீதமிட்டுச் செல்லும் சிட்டுக் குருவியொன்றின் கருணை நீ வலியின் நினைவுகளை வருடப் புதைத்திருக்கும் அரூபத் தழும்பு நீ பிரபஞ்சத்தின் ஆசைகளெல்லாம் விழுங்கிச் செரித்திருக்கும் செயற்கை நீரூற்று ஒன்றில் அசைந்து அமிழும் தாமிர நாணயம் நீ நாட்குறிப்பேட்டில் தேதியிட்டுப் பதுக்கி வைக்க கனவுத் தூண்டிலில் சிக்கி முறிந்த மின்னல் நீ துருவேறிப்போன ரயில் ஜன்னல் கம்பியின் மழை வாசம் நீ ஒரு குறுவாள் தீண்டலில் உறையச் செய்திடும் மெடூசாவின் கண்கள் நீ அவற்றின் ஆயிரம் முத்தங்கள் நீ **** Share this:Click to share on Twitter (Opens in new window)Click to share on Facebook (Opens in new window)Like this:Like Loading... Related
இன்னும். ஆஷ்பர்னில்தான் இருக்கிறீர்களா?
LikeLike