பட்டாம்பூச்சி விற்பவன்

பட்டாம்பூச்சி விற்பவன்

Category Archives: வெண்ணிற இரவுகள்

வெண்ணிற இரவுகள் – ஜனவரி

31 Thursday Jan 2013

Posted by rejovasan in வெண்ணிற இரவுகள்

≈ 3 Comments

Tags

காதற் சிறப்புரைத்தல, Kathal Kavithaigal, kavithaigal, poems, tamil Kavithaigal

 

January

 

முடிவிலாப்  புன்னகை ஒன்றைத்

தந்து போகிறாய்

உன் முகம் பார்த்துக்கிடந்த நாட்களின்

நினைவுகளில் நான் ….

————————————————————-

ஒரு கவிதை எழுதும் நேரத்தில்

எங்கே சென்றாய் …

————————————————————-

நீ பூமிவாசி

நான் நிலாவுக்குச் சொந்தக்காரன்

நீ மறையவும் நான் தேய்வதும்

நான் துரத்திட நீ ஓடவும்

சபிக்கப்பட்டிருக்கிறோம்

ஒரே பால்வீதியில் பார்த்துக்கொண்டே

பயணித்திருக்க

அவரவருக்கான நீள்வட்டப் பாதைகளில்  ….

 

—————————————————————

 

மின்னல்கள் படிக்கக்

கற்றுக் கொண்டிருக்கிறேன்

இனி நீ

மழைபேசியில்

குறுஞ்செய்திகள் அனுப்பு

 

——————————————————————-

 

தெருவிளக்கின் புன்னகையில்

இரவு முழுவதும் பெய்து கொண்டிருக்கிறது

மஞ்சள் பனி

உன் ஸ்பரிசங்களை நகலெடுத்துக் கொண்டு …

 

———————————————————————

 

குடை மறந்த நீ

எச்சில் வடிக்கும் மேகம்

திட்டமிட்டே அணைக்கிறது

முத்தமிட்ட எச்சில் கறை தெருவெங்கும்

நீரை நனைக்க

எங்கே கற்றுக்கொண்டாய் …!

———————————————————————-

 

உனக்கென எழுதி வேண்டாமென்று

அடித்துப்போட்ட வார்த்தைகள்

எங்கெங்கு போயினும்

கடிக்க வருகின்றன

காலைச் சுற்றிய பாம்புக் குட்டிகளாய் …

 

————————————————————————–

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)

Like this:

Like Loading...

தேடு

இதுவரை

Categories

என்னைப் பற்றி

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 113 other followers

Meta

  • Register
  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.com

முகநூல் பக்கம்

முகநூல் பக்கம்

சமீபத்திய இடுகைகள்

  • முகவரி தொலைத்த கடிதங்கள் # 15
  • இதுவும் …
  • வெண்ணிற இரவுகள் – ஜனவரி
  • முகவரி தொலைத்த கடிதங்கள் # 14
  • முகவரி தொலைத்த கடிதங்கள் # 13

Top Posts

  • காட்சிப் பிழைகள்
  • மாடல் நம்பர் சி.எல்.15
  • மோனாரிட்டா - நூறாவது பதிவு
  • வெண்ணிலா ... 1
  • வெண்ணிலா ... 2

Create a website or blog at WordPress.com

Cancel
%d bloggers like this: