பறவைகளின் ஆலாபனை 11 Tuesday Aug 2020 Posted by rejovasan in 2.0, கவிதை ≈ 1 Comment Tagsகவிதை, Love poems, poem, tamil Kavithaigal, tamil poem நத்தையின் கூடு போல் சுருண்டு கிடக்கிறது உன் வனம் மீளமுடியா சாபம் போல் நீண்டு நெளிந்து உன் பாதைகள் கவிந்திருக்கும் இருள் பழகும் முன்பே கண்களைக் குருடாக்குகின்றன உன் நட்சத்திரப் பூக்கள் நாணல்கள் விம்மித் தணியும் சத்தம் நடுங்கச் செய்கிறது ஓயாமல் உன்னை மோகித்துப் பாடும் பறவைகளின் ஆலாபனைகள் உன்மத்தம் பிடிக்கச் செய்கின்றன எந்தப் பூமரத்தில் ஒளிந்திருக்கிறாய் என் யட்சி சர்ப்பங்கள் விழுங்கியிருக்கின்றன உன் ரகசியங்களின் சாவியை தூரத்துப் பாறை ஒன்று சரிந்து கிடக்கிறது உன் தேகம் போல காட்டுப் பூக்கள் சிதறிக் கிடக்கின்றன வழியெங்கும் உன் வாசம் போர்த்தி தேடித் திரிந்து தேகம் துவண்டு உன்னிடமே யாசிக்கிறேன் உன் கருணையின் ஊற்றினை எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய் என் யட்சி தேனீக்கள் போலத் துளைக்கிறது இந்தப் பனி உனது ஆயிரம் நாவினால் தீண்டு பற்றி எரியட்டும் இந்தக் காடு *** Share this:Click to share on Twitter (Opens in new window)Click to share on Facebook (Opens in new window)Like this:Like Loading...
நினைவில் வாழும் மீன்கள் 10 Monday Aug 2020 Posted by rejovasan in 2.0, கவிதை ≈ Leave a comment Tagsதமிழ் கவிதைகள், poems, tamil Kavithaigal, tamil poem எப்படி இருந்தது உன் குரல் அந்த மழையும் அமர்ந்திருந்த மரமும் அழகாய் இருந்த நீயும் மட்டுமே நினைவிருக்கிறது என்ன பேசிக் கொண்டிருந்தோம் பேசிக் கொண்டிருந்தோம் அது நினைவிருக்கிறது ஈர நெற்றியும் நடுங்கிய உதடுகளும் அடர்ந்த கண்களும் குளிர்ந்த சுவாசமும் கைவிரல் மோதிரமும் அதன் கீறலொன்றும் நினைவிருக்கிறது வாசனை நினைவிருக்கிறது அல்லது அப்படி நம்பிக் கொண்டிருக்கிறேன் வாசனை திரவியத்தின் பெயரை இன்னொருமுறை கேட்டிருக்கலாமோ உனது கையெழுத்து மட்டுமே எஞ்சிவிட்டிருக்கிறது உள்ளங்கைச்சூட்டைத் தொலைத்துவிட்டிருக்கிறோம் இருவரும் எனது மூளைத் தரவுகளைத் திருடிவிட்டிருக்கும் செயலி ஒன்று இவளைத் தெரியுமா என உன் சமீபத்திய புகைப்படத்தை நீட்டிக் கேட்கிறது புகைப்படத்தில் இருக்கும் நீ வேறு யாரோ போல் இருக்கிறாய் உனது கண்கள் நான் பழக்கிய மீன்குட்டிகள் அல்ல இந்தப் புன்னகை உன் உதடுகளுக்கு ஒட்டவேயில்லை உனது புத்தக விருப்பப் பட்டியலையும் பிடித்த இசைத் தொகுப்புகளையும் பார்த்து இவள் வேறு யாரோ என அலறி செயலியைத் துண்டிக்கிறேன் இனி ஒருபோதும் இந்த உன்னைச் சந்திக்க விருப்பமில்லை என் நினைவில் இருக்கும் நீயே நீயாக இருந்துவிட்டுப் போ *** Share this:Click to share on Twitter (Opens in new window)Click to share on Facebook (Opens in new window)Like this:Like Loading...
கடைசிச் சந்திப்பின் தேநீர் கோப்பை 09 Sunday Aug 2020 Posted by rejovasan in 2.0, கவிதை ≈ Leave a comment Tagsகவிதை, Love poems, poems, tamil poem எனக்கு பிடித்த பாடல்கள் இனி உன்னுடையதல்ல எதற்காக இன்னும் என் சொற்களின் மேலேறி பவனி வருகிறாய் எனது இரவுகள் உனக்கானதில்லை எதை நினைவுபடுத்த மீண்டுமென் கதவு தட்டுகிறாய் நம் கடைசிச் சந்திப்பில் நீ அருந்திய தேனீர் கோப்பையின் அடியில் காய்ந்து போய் கிடக்கின்றன உன் உதடுகள் எல்லா பேருந்து ஜன்னல்களிலும் இன்னமும் நீ நீ என்பது நீ மட்டுமல்ல உன் நினைவுகளும் தான் உன் நினைவுகளென்பது நினைவுகள் மட்டும் தான் நீ அல்ல *** Share this:Click to share on Twitter (Opens in new window)Click to share on Facebook (Opens in new window)Like this:Like Loading...
ஜன்னல் பூனைகள் 08 Saturday Aug 2020 Posted by rejovasan in 2.0, கவிதை ≈ 2 Comments Tagsகவிதை, poem, poems, tamil, tamil Kavithaigal, tamil poem வசந்தத்தின் நிறங்கள் உன்னிடம்யாரும் நுழையா காடு என்னிடம்வாஉதிர்ந்த நிறங்களை அள்ளிபூக்களில் தூவுவோம் பிரளயத்தின் நா உன்னிடம்பெருந்தாகம் என்னிடம்வாகொஞ்சம் ஒயின் ஊற்றுஇதயங்கள் நனைப்போம் யாமத்தின் வரவேற்பறை உன்னிடம்காலத்தின் முடிவிலி என்னிடம்வாஇந்த இரவின் நதியினில்இரு மீன்களாவோம் மின்மினிகள் உன்னிடம்காய்ந்த சுள்ளிகள் என்னிடம்வாஉள்ளங்கைகளுக்குள் வைத்துஊதித் தீ மூட்டுவோம் அரூபத்தின் தேகம் உன்னிடம்ரகசியத்தின் சாவி என்னிடம்வாமோனத்தின் பனியிடுக்குகளில்கஸல்கள் தேடுவோம் சின்னஞ் சிறிய பூனைகள் உன்னிடம்மழை நெளியும் ஜன்னல்கள் என்னிடம்வாநீயும் நானும் மட்டுமே இந்தத் தீவினில்வேடிக்கை பார்த்திருப்போம் *** Share this:Click to share on Twitter (Opens in new window)Click to share on Facebook (Opens in new window)Like this:Like Loading...