பட்டாம்பூச்சி விற்பவன்

பட்டாம்பூச்சி விற்பவன்

Tag Archives: Love story

மழையும் மழை சார்ந்த கதைகளும் – 5

01 Sunday Jan 2012

Posted by rejovasan in கதை நேரம்

≈ 18 Comments

Tags

காதற் சிறப்புரைத்தல, Love story, poetic, rain, Story

முல்லை – இருத்தலும் இருத்தல் நிமித்தமும்

எல்லா பயணங்களுமே ஏதாவதொரு தேடலின் நிமித்தமே அமைந்து விடுகின்றன. பயணத்தின் அழகு முடிவில் இல்லை. தனித்துப் பயணிக்கும் பாதைகளிலும் , எப்பொழுதாவது எதிர்ப்பட்டுப் புன்னகைகள் பரிமாறிப் போகும் வழிப்போக்கர்களிடமும் , குறிப்பாக தேடு பொருளிலும் இருக்கிறது.

நான் வெகு தொலைவில் இருந்து வந்திருப்பவன். இந்த மழை தேசத்திற்குப் புதியவன்.  ஒரு குழந்தையின் கண் சிமிட்டலுக்கேற்ப மாறி மாறி நடனமிடும் இந்த தேசத்தின் மழைக்குப் புதியவன். என் நகரத்திலும் மழை உண்டு. அதை ரசிப்பவர்கள் கிடையாது. காதலும் கவிதைகளும் உண்டு. கவிஞர்கள் மொத்தமும் பைத்தியக்கார விடுதியில் இருக்கிறார்கள். சிறு பிள்ளையின் புன்னகைக்கு பதில் கிடைக்காது. புதையல் இருக்குமிடமே எங்கள் புகலிடம். எங்கள் ஊரின் கடிகார முள் கூட அமைதியாகப் பணம் எண்ணிக் கொண்டிருக்கும்.

அப்பொழுதுதான் அவளைச் சந்தித்தேன்.

அவள் கனவுகளை மொத்தமும் இந்த மழை தேசத்தின் ஈரங்களே ஆக்கிரமித்திருந்தன. அவள் இரவுகள் இசையால் நிரம்பியிருந்தன.  அவள் கைகள் எந்நேரமும் காற்றில் கவிதை வருடிக் கொண்டிருந்தன. நகரம் அவளை உள்ளிழுக்க முயன்று கொண்டிருக்கையில் , அவள் நகரத்திற்குள் அவள் பால்யத்தின் சாயலைத் தேடிக் கொண்டிருந்தாள்.

நன்றாக நினைவிருக்கிறது எங்கள் முதல் சந்திப்பு. அந்த மது விடுதிக்கு நான் பழையவன், பழகிப் போனவன். அவள் புதியவள் , பரிமாற வந்தவள். மதுவோடு சேர்த்துக் கவிதை ஒன்றைப் பரிமாறிப் போனாள். அது காதல் பற்றியது.

காதல் பற்றி என் அபிப்ராயம் சுலபமானது. அது மதுவைப் போன்றது.  பணம் கொடுத்ததும் பரிமாறப்படுவது.  சில நிமிட போதை. இரவு கலைந்ததும் கூடவே போய்விடுவது.

அவளுக்குக் காதல் எல்லாமுமாக இருந்தது. காதல் மது என்றால் , அதில் எப்பொழுதும் மயங்கிக் கிடக்கத் தயாராக இருந்தாள் அவள். விடிந்தால் கலைந்து விடும் என்றால் விடியலைக் கொன்று விடத்  தயங்காமல் இருந்தாள்.

மதுவுக்காகவும், அவளுக்காகவும் தினமும் செல்லத் துவங்கினேன் அங்கே. தினம் புதுக் கவிதைகள், மௌனப் பார்வைகள்,  கொஞ்சம் திருட்டுப் புன்னகைகள் , எதிர்பாராத முத்தங்கள், சில முறை திட்டமிடப்பட்ட  தீண்டல்கள்.

காதலைப் பற்றி விடியும் வரை விவாதித்துக் கொண்டிருந்த அந்த மழை இரவில் தான் அவளைக் கடைசியாய் சந்தித்தது. விடிந்த பொழுது தலையணை அருகில் அவள் முகவரி கிறுக்கிய காகிதத் துண்டு மட்டுமே இருந்தது. கொஞ்ச நாட்களில் கவிதைகளை வெறுக்கத் துவங்கி விட்டேன் ஆனால் மது கசந்தது.  இருளின் ஸ்பரிசங்களையும் , அவள் முத்தச் சூட்டையும் தாண்டிய ஏதோ ஒன்று தொலைந்தது போல் இருந்தது.

அவள் முகவரிக் கிறுக்கலைக் கைகளில் பற்றிக் கொண்டு என் பயணத்தைத் தொடங்கியது அன்று தான். நெடுந்தூர கொடிய தனிய பயணத்தின் பின் இதோ வந்தே விட்டேன். Continue reading →

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)

Like this:

Like Loading...

வெண்ணிலா – The Complete Collection

22 Friday Apr 2011

Posted by rejovasan in கதை நேரம், வெண்ணிலா

≈ 10 Comments

Tags

Love story, Story, Vennila

 

அக்டோபர் மாதம் என்று நினைக்கிறேன். தொடர்ந்து மூன்று வாரங்களுக்கு night shift வந்து கொண்டிருந்தேன்.  ஜோவும் பரணியும் பின்பு இந்த கதையின் நாயகனும் கூட … நாயகனின் பெயர் பிரபு என்றே வைத்துக் கொள்வோம். எப்பொழுதுமே வேலை இருக்காது என்றாலும் இரவு இரண்டு மணிக்கு மேல் சத்தியமாக வேலை இருக்காது. பனிரெண்டாவது தளத்தில் எங்களுக்காகவே கடை திறந்து வைத்துக் கொண்டு உட்கார்ந்திருப்பார்கள்.

நன்றாக நினைவிருக்கிறது.  அன்று சப்போட்டா ஜூஸ் மட்டுமே இருந்தது.  நான்கு பேரும் சிப்பிக்கொண்டே வழக்கம் போல மொக்கை போட்டுக் கொண்டு இருந்தோம். என்ன பேசிக் கொண்டிருந்தோம் என்று நினைவில் இல்லை. திடீரென்று பரணி கேட்டான்.

“நீங்க சொல்லிருக்கணும் பிரபு  .. “
“யார் கிட்ட என்ன சொல்லிருக்கணும் … ?”
“அந்த பொண்ணுகிட்ட உங்க மனசில தோன்றத ..”
“ஏன்டா அவன ஏத்தி விடற ?”

“இல்ல ஜோ .. இவன் சொல்லிருக்கணும் .. சொல்லாம சும்மா பீல் பண்ணிட்டு இருக்கறதுல .. Total waste”

“டேய் .. மாட்டேன்னு சொல்லப் போறவகிட்ட எதுக்குடா தேவை இல்லாம சொல்லிட்டு .. அதுவும் இல்லாம I’m Trying to get over her .. போதும் ..”

பரணி ஏதோ தீவிரமாக யோசித்தான்.

“ஓகே .. இப்படி வச்சுக்கலாம் .. உங்க life ல இன்னொரு பொண்ணு வர்றா .. happily நீங்க ரெண்டு பெரும் settled ..  உங்களுக்கு ஒரு அறுபது வயசாகுது .. ஒரு வேளை அவ கிட்ட சொல்லிருக்கலாமோன்னு அப்போ தோணினா என்ன பண்ணுவீங்க ? “

கிட்டத் தட்ட எல்லாருக்குமே இந்தக் கேள்வி ஒரு முறையாவது தோன்றியிருக்கும்.
இப்படி ஆரம்பித்தது தான் வெண்ணிலா. Continue reading →

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)

Like this:

Like Loading...

வெண்ணிலா … 11

22 Tuesday Mar 2011

Posted by rejovasan in கதை நேரம், வெண்ணிலா

≈ 35 Comments

Tags

Love story, Vennila

11

This time, this place Misused, Mistakes … Too long, too late, who was I to make you wait?
Just one chance, Just one breath … Just in case there’s just one left
‘Cause you know, you know, you know I love you
I have loved you all along And I miss you … Been far away for far too long
I keep dreaming you’ll be with me and you’ll never go
Stop breathing if I don’t see you anymore
– Nickel back (From the song Far away)

 

எல்லாம் முடிந்து போனது என்று தான் நினைத்திருந்தேன்.

இல்லையென்றது அவள் அழைப்பு.

ஒரு நிமிடத்தில் கண்டுபிடித்திருந்திருக்க முடியும் அவள் எங்கே இருக்கிறாள் என்று. அவளே வேண்டாம் என்று சொல்லிவிட்டுப் போன பின்பு , என்ன இருக்கிறது என்று தான் அத்தனை நாட்கள் சும்மா இருந்தேன்.

அது வெறும் அழைப்பு கிடையாது. என் மூடத்தனதிற்கான  வேக் அப் கால்.

போகிறேன் என்றால் அப்படியே விட்டுவிடுவாயா என்றது ரிஸீவ்டு காலில் இருந்த அவளது எண். அவளது அலைபேசியில் இருந்து அழைத்தால் எண் தெரிந்துவிடுமாம். நல்லவேளை ஏதோ ஒரு பொது தொலைபேசியில் இருந்து அழைத்திருந்ததால் தான் அவள் இருக்கும் இடம் தெரிந்தது.

மொத்தமாக மூன்று நிமிடங்கள் பனிரெண்டு வினாடிகள் அந்த அழைப்பு நீடித்திருந்தது. அதில் இரண்டே முக்கால் நிமிடங்கள் அழுது கொண்டிருந்தாள். ஏன் இப்படிச் செய்தாய் என்று கேட்டாள். வழக்கம் போல முகத்தில் விழிக்காதே என்றாள். வைத்தும் விட்டாள்.

எனக்கு அது “உன்னைப் பார்க்க வேண்டும் சீக்கிரம் வா ” என்றது போல் இருந்தது.

அவளுக்கான கடைசி மடல் எழுதத் துவங்கினேன். ஏனோ அது கடைசி என்று தோன்றியது. கடிதம் எழுதும் தூரம்  இனி அவளை விட்டு போகமாட்டேன் என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.

Continue reading →

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)

Like this:

Like Loading...

வெண்ணிலா … 10

21 Monday Mar 2011

Posted by rejovasan in கதை நேரம்

≈ 15 Comments

Tags

Love story, Vennila

10

Love does nothing but make you weak! It turns you into an object of pity and derision–a mewling pathetic creature no more fit to live than a worm squirming on the pavement after a hard summer rain.
                                                                                                                 –   Teresa Medeiros

 

“என்ன சார் ? தூக்கம் வரலியா ?” கார்த்திக் நின்று கொண்டிருந்தார். ஆமாம் என்று தலை அசைத்தேன்.

“சிக்ரெட் ? ”

“இல்ல கார்த்திக் ..பழக்கம் இல்ல .. இங்க சிகரெட் பிடிகறது தப்பில்ல ..?”

“சும்மா ரெண்டு பஃப் … எனக்கும் தூக்கம் வரல .. உங்களைக் காணோம் .. இங்க தான்  இருப்பீங்கன்னு தோணுச்சு …”

எனக்கு லேசாக இருமல் வந்தது.

“சாரி பிரபு .. ” கீழே தூக்கி எறிந்தார் சிகிரெட் துண்டை.

“ஸோ ?  எதுக்காக ஹைதராபாத் .. ? ” அவர் பேச்சை மாற்ற விரும்பினார்.

“வெண்ணிலாவைப் பார்க்க .. ”

“மறுபடியும் ஏதாவது ட்ரைனிங்கா ? ”

“அவ என்னை விட்டு இங்க வந்து மூணு மாசம் ஆகுது”

எத்தனை முறை மனதிற்குள்ளே நினைத்துப் பொருமினாலும், பேசும் பொழுதே மனம் அமைதி கொள்கிறது. பேசத் தவறிய தருணங்களுக்கெல்லாம் சேர்த்துப் பேசுவது போலத் தோன்றியது. எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டே இருந்தார் கார்த்திக்.

“எப்படி வந்தனா கூட எங்கேஜ்மெண்ட்கு ஒத்துக்க முடிஞ்சது உங்களால ? ”

Continue reading →

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)

Like this:

Like Loading...

வெண்ணிலா … 9

16 Wednesday Mar 2011

Posted by rejovasan in கதை நேரம்

≈ 27 Comments

Tags

Love story, Vennila

9

             “Some of us think holding on makes us strong; but sometimes it is letting go.”

–        Herman Hesse

 

பத்து நாட்களில் என்ன நடந்து விட முடியும். என்ன வேண்டுமானாலும் நடந்து விட முடியும். எனக்கு நடந்தது போல.

பகலிலேயே நான் கனவுகள் கண்டு கொண்டிருந்த காலம் இது. வந்தனாவை அன்று சந்தித்திருந்ததும் ஒரு பகல் கனவாக இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்.

ஆனால் அது கனவில்லை.

வெயில் நேரத்து மழை போல, என்றோ  சிறு வயதில் ஒரு மாலை நேரத்தில் தலையில் நச் நச்சென்று குட்டிப் பெய்த ஆலங்கட்டி போல , சிறுவர் மலரில் நான் படித்த ஒரு தேவதைக் கதை போல நம்புவதற்குக் கடினமாக இருந்தாலும் அவள் என் முன் நிஜமாகவே நின்று கொண்டிருந்தாள்.

நான் ஊமை மொழி பழகிக் கொண்டிருந்தேன். வெண்ணிலா தான் எனை அசைத்து சுய நினைவுக்குக் கொண்டு வந்தாள். அதற்குள் என் அலுவலகத் தளம் வந்திருந்தது.

வந்தனாவும் எங்களுடன் இறங்கிக் கொண்டாள்.

“ஹலோ .. ” மூன்றாவது முறையாக அவள் சொன்னாள்.

“ஹாய் “ என்றேன். அதற்கு மேல் என்ன சொல்வதென்று தெரியவில்லை.

“ஹலோ என்ன நடக்குது இங்க ..? ” வெண்ணிலா இடையே புகுந்தாள்.

“வெண்ணிலா .. இவ.. இவங்க வந்தனா .. என் காலேஜ் மேட் .. ”

“என்னப்பா மரியாதை எல்லாம் அதிகமா இருக்கு .. ” சொல்லிக்கொண்டே வெண்ணிலாவிற்குக் கை கொடுத்தாள்.

“ஹாய் ஐ’ம் வெண்ணிலா .. ” வந்தனா இவள் யார் என்பது போல் என்னைப் பார்த்தாள். வெண்ணிலாவும் நீயே சொல்லேன் பார்ப்போம், என்பது போல என்னைப் பார்த்தாள். எனக்கு எங்கே பார்ப்பதென்று தெரியவில்லை. மனதிற்குள் நூறு முறை தோன்றியது , சொல்லடா இவளைத்தான் நான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று. வார்த்தைகள் தான் ஒத்துழைக்கவில்லை.

பேசியிருக்க வேண்டிய இடம் அது. நான் பேசவில்லை.

Continue reading →

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)

Like this:

Like Loading...
← Older posts

தேடு

இதுவரை

Categories

என்னைப் பற்றி

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 169 other subscribers

Meta

  • Register
  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.com

முகநூல் பக்கம்

முகநூல் பக்கம்

சமீபத்திய இடுகைகள்

  • துப்பறியும் வரிகள்
  • கீழிருந்து மேலாய் ஏழாவதாய்
  • வழியில் தவறிவிட்டிருக்கிறது உன் வாசனை
  • பத்து இலக்க இடைவெளி
  • உன்னைத் தின்னும் அந்தூரியப் பூக்கள்

Top Posts

  • உனது நாட்குறிப்பிலிருந்து திருடப்பட்ட கவிதைகள் ...
  • மறந்து போன முதல் கவிதை …
  • என்னைச் சந்திக்க கனவில் வராதே ...

Create a website or blog at WordPress.com

  • Follow Following
    • பட்டாம்பூச்சி விற்பவன்
    • Already have a WordPress.com account? Log in now.
    • பட்டாம்பூச்சி விற்பவன்
    • Customize
    • Follow Following
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar
 

Loading Comments...
 

    %d bloggers like this: