எங்கள் முன் ‘கோலா“வை வைத்து விட்டு ,அந்த இயந்திரப் பெண் அச்சு அசலாக , உயிர்ப் பெண்ணைப் போலவே கண்ணடித்து , வேறு ஏதேனும் வேண்டுமா கனவான்களே என்று கேட்டு , புன்னகையுடன் எங்கள் பதிலுக்காகக் காத்திருந்தது.
“லட்டு மாதிரி இருக்க .. உன்ன தான் கேக்கணும் .. என்ன மாடல்டா குட்டி நீ !” ஹரி சில்மிஷமாகக் கேட்டான்.
“எஃப் எஸ் த்ரீ சார் .. அப்புறம் குட்டி என்றெல்லாம் கூப்பிடக் கூடாது. இது அத்து மீறல் .. இன்னும் இரண்டு முறை தான் மீறலாம் …என் பெயர் ஷிவானி … ” அதே புன்னகையுடன் நடந்து சென்றாள்.
“விட்டா, ஈவ் டீசிங் கேஸ் போடும் போல ” என் கைகளில் தட்டினான். நானும் சிரித்தேன். நாங்கள் இருவரும் சிரித்து முடிக்கும் முன் எங்களைப் பற்றி இரண்டு வரிகளில் சொல்லி விடுகிறேன்.
நான் கிருஷ் ,, இந்த குறுந்தாடி ஹரி .. உங்கள் எல்லாரையும் போல நாங்களும் ஒரு மென்பொருள் துறையில் , கட்டமைப்பாளர்களாக இருக்கிறோம். இந்த வாழ்கை , வசதிகள் எல்லாமே பிடித்திருக்கிறது.இந்த கோலா கூட நன்றாகத் தான் இருக்கிறது. இடையை வெட்டி வெட்டி செல்லும் ஷிவானி கூட …ஆனால் ஒன்றே ஒன்று தான் குறை. இந்த வாழ்கை நிஜம் அல்ல . நிழல் போல .. பாலைவனத்துக் கானல் போல .. வெர்ச்சுவல் .
“என்னடா கிருஷ் .. ஏன் டல்லா இருக்க … நீட் சம் மோர் ட்ரிங்க் ?? .. இல்ல மறுபடியும் சோஃபியா வா ..? ”
“எஸ் டா .. என்னால அவளை மறக்க முடியலை .. ஸ்டில் ஐ லவ் ஹெர் … Continue reading