Tags
குஜய் TV நேயர்களுக்கு டோபிநாத்த்தின் வணக்கங்கள் .. Welcome to the show ,மாசிலாமணி- The Team Strikes Back Again … சொல்லுங்க nagul .. Ho do u feel ??
அய்யே .. மாமே .. நீ இன்னும் அந்த award function hang over ல இருந்து வெளிய வரவே இல்லியா .. எல்லாருகிட்டயும் அத்தையே தான் கேப்பியா .. தள்ளு தள்ளு இந்த படத்துக்கு நானே போதும் ..
வணக்கம் பாஸ் .. நான் தான் ..
எனக்கும் மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது .. ரெண்டு வாரத்துக்கு முன்னாடி தோரணை .. மூணு நாளுக்கு முன்னாடி முத்திரை .. நேத்து மாசிலாமணி .. திருந்தவே மாட்டேனா நான் ..
காதலில் விழுந்தேன் பார்த்த அப்போவே உசாராயிருந்திருக்கணும் .. எல்லாரும் படம் மொக்க மொக்கன்னு சொல்றானுங்களே .. அப்படி என்ன தான் மொக்கையா இருக்கு பாக்கலாமேன்னு போயிட்டேன் ..
அதே மாதிரி ஒரு சாயங்காலம் .. அதே தியாகராஜா தியேட்டர் .. அதே மாதிரி மழை கூட விழுந்தது .. நானும் , ராம் ன்னு ஒரு அப்பாவியும் ஆப்பீஸ்ல இருந்து வீட்டுக்கு திரும்பும் போது . டைடல் பார்க் சிக்னல் ல மனசு மாறி தியேட்டர் பக்கம் ஒதுங்கிட்டோம் .. உள்ள போகும் போதே நாக்க மூக்க style ல ஒரு பாட்டுக்கு அதே செட்ல நகுல் ஆடிட்டு இருந்தார் .. அப்போவே படம் எப்படி இருக்கும் ன்னு புரிஞ்சு போச்சு …
“சீக்கிரம் கிளம்புங்கன்னு சொன்னேன் .. பாருங்க இப்போ படம் ஆரம்பிச்சுருச்சு .. எவ்ளோ நேரம் போச்சோ .. பக்கத்துல இருக்கறவன் கிட்ட கேளுங்க எவ்ளோ நேரம் ஆச்சுன்னு “ என்றான் ராம் ..
“ இப்போ தாம்பா பத்து நிமிஷம் ஆச்சு .. “
“ டேய் பத்து நிமிஷம் ஆச்சாண்டா .. “
“ சரி அப்டியே ஹீரோயின் இன்ட்ரோ வந்திருச்சான்னு கேளுங்க .. “
“ @!%^#%^$%$ “
சும்மா சொல்லக் கூடாதுங்க .. போன படத்துல பொணம் மாதிரி வாழ்ந்திருந்த சுனைனா , இந்தப் படத்தில மார்ச்சுவரில இருந்து எழுந்து வந்தா மாதிரி அவ்ளோ fresh ஆ இருக்காங்க … என்னம்மா மூஞ்சில அபிநயம் புடிக்கறாங்க .. படத்துல அவங்க பரதம் கத்துகறாங்கலாமாம் .. என்ன கொடுமை சார் இது ???