Tags
அக்டோபர் மாதம் என்று நினைக்கிறேன். தொடர்ந்து மூன்று வாரங்களுக்கு night shift வந்து கொண்டிருந்தேன். ஜோவும் பரணியும் பின்பு இந்த கதையின் நாயகனும் கூட … நாயகனின் பெயர் பிரபு என்றே வைத்துக் கொள்வோம். எப்பொழுதுமே வேலை இருக்காது என்றாலும் இரவு இரண்டு மணிக்கு மேல் சத்தியமாக வேலை இருக்காது. பனிரெண்டாவது தளத்தில் எங்களுக்காகவே கடை திறந்து வைத்துக் கொண்டு உட்கார்ந்திருப்பார்கள்.
நன்றாக நினைவிருக்கிறது. அன்று சப்போட்டா ஜூஸ் மட்டுமே இருந்தது. நான்கு பேரும் சிப்பிக்கொண்டே வழக்கம் போல மொக்கை போட்டுக் கொண்டு இருந்தோம். என்ன பேசிக் கொண்டிருந்தோம் என்று நினைவில் இல்லை. திடீரென்று பரணி கேட்டான்.
“நீங்க சொல்லிருக்கணும் பிரபு .. “
“யார் கிட்ட என்ன சொல்லிருக்கணும் … ?”
“அந்த பொண்ணுகிட்ட உங்க மனசில தோன்றத ..”
“ஏன்டா அவன ஏத்தி விடற ?”
“இல்ல ஜோ .. இவன் சொல்லிருக்கணும் .. சொல்லாம சும்மா பீல் பண்ணிட்டு இருக்கறதுல .. Total waste”
“டேய் .. மாட்டேன்னு சொல்லப் போறவகிட்ட எதுக்குடா தேவை இல்லாம சொல்லிட்டு .. அதுவும் இல்லாம I’m Trying to get over her .. போதும் ..”
பரணி ஏதோ தீவிரமாக யோசித்தான்.
“ஓகே .. இப்படி வச்சுக்கலாம் .. உங்க life ல இன்னொரு பொண்ணு வர்றா .. happily நீங்க ரெண்டு பெரும் settled .. உங்களுக்கு ஒரு அறுபது வயசாகுது .. ஒரு வேளை அவ கிட்ட சொல்லிருக்கலாமோன்னு அப்போ தோணினா என்ன பண்ணுவீங்க ? “
கிட்டத் தட்ட எல்லாருக்குமே இந்தக் கேள்வி ஒரு முறையாவது தோன்றியிருக்கும்.
இப்படி ஆரம்பித்தது தான் வெண்ணிலா. Continue reading