Tags

,

எல்லா நதியின் பயணமும்

கடல் தேடியே

நதியாகிறேன் நானும் …

————————————————————-

உன்னையே நினைத்துக் கொண்டிருக்கிறேன்

உனக்குத் தெரியாமல்

என்னை நினைப்பதேயில்லை நீ

என்னைத் தெரியாததால் …

—————————————————————–

உயிர் தேடி வேராய்

மண்ணுக்குள்ளே நான்

நீயோ சிரித்துக் கொண்டு பூவாய்

கிளையின் மேலே ..

———————————————————

வேதனை

தலையணையும் நீயாக

வேண்டும்

தலையணையாய் நீயாக …

——————————————————-

என்று உனது நிழல் துணை கொண்டு

உன்னைத் தேடத் துவங்கினேனோ

அன்று தான் தொலைந்து போனது

எனக்கான அடையாளங்கள்.

——————————————————

நேற்றுப் பிறந்த குழந்தையாய்

எந்நேரமும் சிணுங்கிக்கொண்டு

என் இதயம்

மார்போடணைத்து அமைதிப்படுத்த

உன்னால் மட்டுமே முடியும்.

—————————————————–