Tags
எல்லாப் பேருந்துப் பயணங்களிலும்
சேர்த்து வைத்திருக்கிறேன் நிறைய
பயணச் சீட்டுகளில்
உன் பெயரை
———————————————————
இன்றய உணவு எண்பது ரூபாய்
பேருந்து செலவு பதினான்கு ரூபாய்
புத்தகம் வாங்கியது நூற்றி எழுபதிற்கு
பரிசொன்று சேர்ந்தது ஐம்பதிற்கு
உனது நினைவுகள் எங்கே செல்வேன்
விலையொன்று சொல்ல???
என்ன செய்ய
வரவு செலவு குறிப்புகளிலும்
வந்து நிற்கிறாய் நீயே
ஓர் கவிதை என…
————————————————-
தூரிகை நான்
ஓவியம் நீ
அப்படியே உனை வரைய
என்னால் மட்டுமே முடியும்
வரைந்து கொள்
————————————————-
தவறாக நினைத்துக் கொள்ளாதே
நீ அழுது கொண்டிருக்கும் போதும்
அதன் அழகையும் ரசித்து விட்டு தான்
அணைப்பேன்
——————————————————–
ஒரு உருவமில்லா இசை போல
உன் பார்வை
தொலைதூரம் கடந்து சென்ற பின்னும்
கூடவே வருகிறது
————————————————————-
காலில் குத்தும் நெறிஞ்சு முள்ளையும்
பூவென தூக்கி எறிகிறேன்
புன்னகையுடன்
நீ வரும் பாதை என்பதால்…
————————————————————
முதல் பாராட்டு மே 30 க்கு தான்
இவ்வளவு கவிதைகளுக்கும் பிள்ளையார் சுழி போட்டிருக்கிறதே ….:-)
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!!!!
LikeLike
//எல்லாப் பேருந்துப் பயணங்களிலும்
சேர்த்து வைத்திருக்கிறேன் நிறைய
பயணச் சீட்டுகளில்
உன் பெயரை //
reusability ? 🙂
LikeLike
அவள் உன் நினைவில் மறந்தேன் பயணசீட்டையும் நிறுத்தத்தையும்,
ஒரு தொல்லையில் தப்பிக்க எடுத்து விட்டேன் பஸ் பாஸ் மொத்த நிறுத்தத்திற்கும் மறு தொல்லையை என்ன செய்ய
LikeLike
அவள் நீயும் என்னை தவறாக நினைத்துக் கொள்ளாதே நீ அணைக்க வேண்டிதான்
அடிக்கடி நான் உன்னிடம் அழுகிறேன்..
ஐயோ உளறிவிட்டேனே
LikeLike
அவள்:தூக்கி எரிந்த நெறிஞ்சு முள்
என் காலனி பார்த்து சிரித்து விட்டு சேதி சொல்ல காலனி கழட்டி எரிந்து வெறும் காலில்
நடந்து சென்றேன்
LikeLike
நன்றி ரேவதி 🙂 வாழ்த்துகளுக்கு ..
// reusability ?
எப்படி எல்லாம் யோசிக்கறாங்க ???
LikeLike
நன்றி அப்பாஸ் 🙂 நல்ல கற்பனை ..
LikeLike
arumaiyana kavithai…..
LikeLike
Nandri jayasimahi 🙂
LikeLike
//தூரிகை நான்
ஓவியம் நீ
அப்படியே உனை வரைய
என்னால் மட்டுமே முடியும்
*வரைந்து கொள்*//
எவ்வளவு பேர் ரசித்தார்கள் என்று தெரியவில்லை இவ்வரிகளை….
இனி படிப்போர் ரசிக்கவே இந்த பறைசாற்றல்.
LikeLike
🙂
LikeLike